பேஸ்புக் பெயர் மாற்றுவதன் நோக்கம் என்ன?- அது என்ன மெட்டாவெர்ஸ்., எப்படி இருக்கும்?

|

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு தொழிலிலும் ஒவ்வொரு செயலிலும் தொழில்நுட்ப சாதனங்கள் புகுந்து வருகிறது. இதில் பிரதான வளர்ச்சியாக இருப்பது விஆர் தொழில்நுட்பம், சாதாரண வீடியோ அழைப்புகளின் நெருக்கமான காட்சியின் தோற்றத்தை அளிக்கிறது. பேஸ்புக் நிறுவனம் சமீக காலமாகவே ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கவனம் செலுத்தி வருகிறது. அது மெட்டாவெர்ஸ் எனப்படும் ஒரு புதிய மெய்நிகர் ரியாலிட்டி உலகமாகும்.

மெட்டாவெர்ஸ் என்ற சொல்

மெட்டாவெர்ஸ் என்ற சொல்

மெட்டாவெர்ஸ் என்ற சொல் தொழில்நுட்பத் துறையின் கற்பனையை காட்சிப்படுத்த பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். சமூகவலைதளங்களில் பிரதானமாக இருக்கும் பேஸ்புக், தற்போது தனது கவனத்தை இதை நோக்கி தனது முழு கவனத்தையும் திருப்பியதோடு தனது நிறுவனத்துக்கு மெட்டா என பெயர் சூட்டியிருக்கிறது.

பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்

பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்

பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் தனது நிறுவனத்தின் பெயரை மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் இன்க் அல்லது சுருக்கமாக மெட்டா என பெயரை அறிவித்துள்ளது. விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் பிற தொழில்நுட்பங்களின் கலவையை பயன்படுத்தி மெட்டாவெர்ஸ்-க்கு உயிர் கொடுக்க துடிக்கும் ஒரே நிறுவனம் மார்க் ஜக்கர்பெர்க்கின் பேஸ்புக் மட்டும் அல்ல. சமூக வலைதள நிறுவனங்கள் பலவும் இதில் தங்களது கவனத்தை திருப்பி வருகின்றனர்.

மெட்டாவர்ஸ் என்றால் என்ன

மெட்டாவர்ஸ் என்றால் என்ன

ஜுக்கர்பெர்க் இதை மெய்நிகர் சூழல் என விவரிக்கிறார். ஒருவரை 3டி முறையில் நேரில் பார்த்தால் என்ன மன நிலை இருக்கும். ஒருவரை திரையில் பார்ப்பதற்கு பதிலாக 3டி முறையில் சந்தித்து பேசும் அனுபவமே இதன் அம்சம். விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்கள், ஆக்மென்டட் ரியாலிட்டி கண்ணாடிகள், ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் மற்றும் பிற சாதனங்களை பயன்படுத்தி மக்களை சந்தித்து பேசலாம்.

Oculus VR ஹெட்செட்கள்

Oculus VR ஹெட்செட்கள்

ஹொரைசன் ஒர்க்ரூம்ஸ் ஃபார் கம்பெனிகளுக்கான மீட்டிங் சாஃப்டவேர் ஃபேஸ்புக் மூலம் Oculus VR ஹெட்செட்களுடன் பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது. ஃபேஸ்புக் அதன் Oculus VR ஹெட்செட்களுடன் பயன்படுத்த Horizon Workrooms எனப்படும் நிறுவனங்களுக்கான சந்திப்பு மென்பொருளை அறிமுகப்படுத்தியது, இதன் தயாரிப்பு தொடர்பாக முதல் கட்டத்தில் அதிக வரவேற்பு பெறிவில்லை என்றாலும் இது தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக மாறும் என்பது உறுதியானதாகும். இந்த ஹெட்செட்களின் விலை 300 டாலர் என்ற விலைப் பிரிவு ஆகும். இது மெட்டாவேஸ்-ன் புதிய அனுபவத்தை பலருக்கு கிடைக்கச் செய்தது.

டெலிபோர்ட் செய்யும் திறன்

டெலிபோர்ட் செய்யும் திறன்

அதேபோல் இதற்கு குறிப்பிடதக்க தொகையை செலவிட்டு தங்கள் அவதாரை உருவாக்கி வெவ்வேறு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட மெய்நிகர் அணுகலை பெறலாம். அதாவது மெட்டாவெஸ் அனுபவம் என்பது ஒரு அனுபவத்தில் இருந்து மற்றொரு அனுபவத்திற்கு டெலிபோர்ட் செய்யும் திறன் என ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

சிறந்த தொழில்நுட்ப தளங்கள்

சிறந்த தொழில்நுட்ப தளங்கள்

தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஆன்லைன் தளங்களை ஒருவருக்கொருவர் எப்படி இணைப்பது என்பதை கண்டுபிடிக்க இது உதவும். சிறந்த தொழில்நுட்ப தளங்கள் இதற்கு தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் பேஸ்புக் மெட்டாவெர்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் மெட்டாவேஸ் என எந்த வேறுபாடும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் பொருளாதாரத்தின் பெரும் பகுதி

டிஜிட்டல் பொருளாதாரத்தின் பெரும் பகுதி

பேஸ்புக் மற்றும் மெட்டாவெர்ஸ் ஆனது டிஜிட்டல் பொருளாதாரத்தின் பெரும் பகுதியாக இருக்கும் எனவும் இணையத்தின் அடுத்த தலைமுறையாக ஜுக்கர்பெர்க் இதை பார்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பேஸ்புக் நிறுவனம் தனது நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றி இருக்கிறது. இதன்மூலம் விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் மெட்டாவேர் எனப்படும் புதிய விர்ச்சுவல் தொடர்பான விஷயங்களில் பேஸ்புக் முழு கவனம் செலுத்துகிறது என்பது உறுதி. பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் நிறுவனம் பெயர் மாற்றம் செய்து அடுத்த தலைமுறை தொழில்நுட்ப சாத்தியங்களை நோக்கி செல்கிறது.

அடுத்தக்கட்ட தொழில்நுட்பம் என்பதில் ஆச்சரியமில்லை

அடுத்தக்கட்ட தொழில்நுட்பம் என்பதில் ஆச்சரியமில்லை

மெட்டாவெர்ஸ்கள் தற்போதைய செயல்பாடுகளுக்கு முரணமாக இருந்தாலும் அது அடுத்தக்கட்ட தொழில்நுட்பம் என்பதில் ஆச்சரியமில்லை. இதுகுறித்து என்விடியாவின் ஓம்னிவர்ஸ் இயங்குதளத்தின் துணைத்தலைவர் ரிச்சர்ட் கெர்ரிஸ் கூறுகையில், இது பல்வேறு வகையில் தொழில்நுட்ப உலகங்களை ஆட்கொள்ள இருக்கிறது. வீடியோ கேம் நிறுவனங்களும் மெட்டாவெர்ஸ்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதேபோல் பிரபலமான ஃபோர்ட்நைட் வீடியோ கேமுக்கு பின் இருக்கும் எபிக் கேம்ஸ், மெட்டாவெர்ஸ் உருவாக்குவதற்கான நீண்ட கால திட்டங்களுக்கு 1 பில்லியன் டாலர் திரட்டி இருக்கிறது. இதேபோல் பல்வேறு நிறுவனங்களும் முதலீடுகளையும் ஆர்வங்களையும் அதிகரித்து வருகிறது.

மெய்நிகர் உலகத்தை நோக்கி

மெய்நிகர் உலகத்தை நோக்கி

மெட்டாவேர்ஸில் பல நிறுவனங்கள் மெய்நிகர் உலகங்களையும் சூழலையும் உருவாக்கும் என்று தாங்கள் நினைப்பதாகவும், அதே வழியில் உலகளாவிய வலைதள நிறுவனங்கள் இதுபோன்ற ஏணைய விஷயங்களைச் செய்கின்றன என்று என்விடியாவின் ஆம்னிவர்ஸ் தளத்தின் துணைத் தலைவர் ரிச்சர்ட் கெர்ரிஸ் கூறினார். தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஆன்லைன் தளங்களை ஒருவருக்கொருவர் எவ்வாறு இணைப்பது என்பதை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம்.

Best Mobiles in India

English summary
Why Facebook Changed its Name?- What is MetaVerse and How its Work

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X