ஸ்டீபன் ஹாக்கிங், எலான் மஸ்க் : இருவருமே அச்சம் கொள்ளும் 'அந்த' ஒரு விடயம்.!

|

அண்டவியல் (cosmology) மற்றும் குவாண்ட்டம் ஈர்ப்பு (quantum gravity) ஆகிய ஆய்வுத்துறையில், உலகின் மிகவும் முக்கியமான கோட்பாட்டு இயற்பியலாளர்களில் ஒருவர் தான் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) "குறிப்பிட்ட 3 விடயங்கள்" மனித இனத்தையே அழிக்கும் வல்லமை பெற்றது என்று நம்புகிறார்.

ஸ்டீபன் ஹாக்கிங் மட்டுமல்ல எலான் மஸ்க் ஆகிய இருவருமே ஒரு குறிப்பிட்ட விடயத்தில் அச்சம் கொள்கின்றனர் என்றால் நிச்சயமாக அதில் எதோ ஒரு பேராபத்து இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியதுள்ளது.

அப்படியாக அவர்கள் அச்சம் கொள்ளும் விடயம் எது.? அதற்கு காரணம் என்ன.? இது சாத்தியமா அல்லது வெறும் பிரமையா.??

மீண்டும் ஒருமுறை கடவுள்

மீண்டும் ஒருமுறை கடவுள்

ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு. செயற்கை நுண்ணறிவானது மனிதர்களின் வசதிகளுக்கு பயன்படுத்தப் படுவதற்கு முன்பு மிகுந்த சிரத்தை மிகுந்த அளவிடல் ஆய்வுகளை சந்திக்க வேண்டும், இல்லையெனில் பின்னர் மீண்டும் ஒருமுறை கடவுள் இந்த பிரபஞ்சத்தின் உருவாக்க வேண்டிய நிலை ஏற்படலாம் அதாவது செயற்கை நுண்ணறிவு மூலம் மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ள முடியும்.

எப்படி தளர்வடைய செய்யும்.?

எப்படி தளர்வடைய செய்யும்.?

செயற்கை நுண்ணறிவு ஏன் மனித அறிவாற்றலின் அச்சம் என்பதை ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் எலான் மஸ்க் போன்ற வல்லுநர்களே விளக்குகிறார்கள். செயற்கை நுண்ணறிவு ஆனது மனித இனத்தை எப்படி தளர்வடைய செய்யும் என்ற தனது கருத்தை பெரும் தொழில்நுட்ப நிறுவங்களுக்கு எப்போதுமே வழங்கி கொண்டிருக்கிறார் - எலன் மஸ்க்.!

இனத்தின் முடிவு

இனத்தின் முடிவு

ஸ்டீபன் ஹாக்கிங் பிபிசிக்கு அளித்த ஒரு பேட்டியில் "முழு அளவிலான செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியானது மனித இனத்தின்முடிவு என்று கூற முடியும்" என்று கூறியுள்ளார். மனிதர்கள் மெதுவான உயிரியல் பரிணாமத்தின் மூலம் மட்டுமே வளர்வார்கள், அதனோடு போட்டி போட்டு முன்னேற நினைப்பது ஒரு வகையான மூட நம்பிக்கை" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"குறிப்பிட்ட 3 விடயங்கள்"

அதில் முதல் விடயம் - ஏஐ ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு.!

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

மனித இனத்தையே அழிக்கும் வல்லமை பெற்றது என்று ஸ்டீபன் ஹோக்கிங் நம்பும் முதல் விடயம் - ஆர்டிஃபிஷியல் இன்டெல்லிஜன்ஸ் (Artificial intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு. இயந்திரங்கள் அல்லது மென்பொருள்களுக்கு புலனாய்வு அறிவை செலுத்துவதே செயற்கை நுண்ணறிவு எனப்படும்.

கருத்து :

கருத்து :

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது மனிதர்களுக்கு சமமான முறையில் செயல்படுகிறது. மேலும் சில சமயம் மனிதர்களை மிஞ்சி விடுகிறது என்றும் சில விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

அழிவு சாத்தியமே :

அழிவு சாத்தியமே :

அப்படியாக, மனிதர்களால் உருவாக்கம் பெறும் இயந்திரங்கள் மனிதர்களை விட அதிக அறிவை பெறும்போது மனித இனத்தின் அழிவு சாத்தியமே என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.

சாத்தியமான ஆபத்துக்கள் :

சாத்தியமான ஆபத்துக்கள் :

மேலும், அதீத செயற்கை நுண்ணறிவு மூலம் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துக்களை தவிர்க்கும்படியான ஆய்வுகளில் நுண்ணறிவு விஞ்ஞானிகள் ஈடுபடுவது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Why Elon Musk and Stephen Hawking Fear the Advent of Artificial Intelligence. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X