ஸ்டீபன் ஹாக்கிங், எலான் மஸ்க் அச்சம் கொள்வது எதற்கு..?!
ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் எலான் மஸ்க் ஆகிய இருருமே ஒரே விடயத்தில் அச்சம் கொள்கின்றனர் என்றால் நிச்சயமாக அதில் எதோ ஒரு பேராபத்து இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியதுள்ளது.

அப்படியாக அவர்கள் அச்சம் கொள்ளும் விடயம் எது தெரியுமா..? ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு..!

செயற்கை நுண்ணறிவானது மனிதர்களின் வசதிகளுக்கு பயன்படுத்தப் படுவதற்கு முன்பு மிகுந்த சிரத்தை மிகுந்த அளவிடல் ஆய்வுகளை சந்திக்க வேண்டும், இல்லையெனில் பின்னர் மீண்டும் ஒருமுறை கடவுள் இந்த பிரபஞ்சத்தின் உருவாக்க வேண்டிய நிலை ஏற்படலாம் அதாவது செயற்கை நுண்ணறிவு மூலம் மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ள முடியும்.

செயற்கை நுண்ணறிவு ஏன் மனித அறிவாற்றலின் அச்சம் என்பதை ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் எலான் மஸ்க் போன்ற வல்லுநர்களே விளக்கு கிறார்கள். செயற்கை நுண்ணறிவு ஆனது மனித இனத்தை எப்படி தளர்வடைய செய்யும் என்ற தனது கருத்தை பெரும் தொழில்நுட்ப நிறுவங்களுக்கு எப்போதுமே வழங்கி கொண்டிருக்கிறார் - எலன் மஸ்க்.

ஸ்டீபன் ஹாக்கிங் பிபிசிக்கு அளித்த ஒரு பேட்டியில் "முழு அளவிலான செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியானது மனித இனத்தின்முடிவு என்று கூற முடியும்" என்று கூறியுள்ளார். மனிதர்கள் மெதுவான உயிரியல் பரிணாமத்தின் மூலம் மட்டுமே வளர்வார்கள், அதனோடு போட்டி போட்டு முன்னேற நினைப்பது ஒரு வகையான மூட நம்பிக்கை" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க :
இதைத்தான் 1974-லேயே ஸ்டீபன் ஹாக்கிங் சொன்னார், அப்போது நம்பவில்லை..!
மீப்பெரும் கருந்துளை ஒன்று பூமி கிரகத்தை விழுங்கும் - வல்லுநர் எச்சரிக்கை..!
நாசாவை 'வேடிக்கை' பார்க்க வைத்து கலக்கும் ஸ்பேஸ்எக்ஸ்..!


Click it and Unblock the Notifications