Home
News

மொபைல் போனின் அடிப்பகுதியில் இந்த சிறிய துளை எதுக்கு இருக்கு தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

செல்போன் நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி போன்களை கூட ரூ.10,000 விலையில் அறிமுகம் செய்து வருகின்றன. எனவே இந்தியாவில் இதுபோன்று பட்ஜெட் விலையில் கிடைக்கும் 5ஜி போன்கனை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

குறிப்பாக செல்போன் நிறுவனங்கள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்கள் கொண்ட போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன என்பது தான் உண்மை. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஸ்மார்ட்போன்களில் இருக்கும் முக்கியமான அம்சங்களை நாம் அது தொடர்பான வீடியோக்களை பார்த்துத் தெரிந்துகொள்வோம்.

மொபைல் போனில் அடிப்பகுதியில் இந்த சிறிய துளை எதுக்கு இருக்கு தெரியுமா?

ஆனாலும் இந்த ஸ்மார்போன்களின் வெளிப்பகுதி குறித்து எந்த அளவுக்கு நமக்குத் தெரியும். அதாவது நன்கு கவனித்தீர்கள் என்றால் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் (Android phone) அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய ஓட்டை ஒன்றைப் பார்க்க முடியும். அது எதற்கு இருக்கிறது என்று தெரியுமா? சிலருக்குத் தெரிந்திருந்தாலும் பெரும்பாலவனர்களுக்கு அதற்கான விடை தெரியாது.

அதாவது ஸ்மார்ட்போனில் இருக்கும் அந்த மிகச்சிறிய துளை இரைச்சலை ரத்து செய்யும் மைக்ரோபோன் ஆகும். இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால், நாம் போன் பேசும்போதும் செயல்படும் மைக்ரோபோன் அதுதான். குறிப்பாக நாம் யாரையாவது போனில் அழைக்கும் போது இந்த மைக்ரோபோன் இயக்கப்படும்.

அந்த சிறிய துளை சரியாக நமது குரலை பிக்கப் செய்து மறுமுனையில் கேட்பவருக்கு தெளிவாகக் கொடுக்கிறது. அதேசமயம் சுற்றிலும் இரைச்சல் இருந்தாலும் இந்த மைக்ரோபோன் அனைத்து வித சத்தங்களையும் உள்வாங்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போனின் அடிப்பகுதி என்பதால் இரைச்சலை உள்வாங்குவதில் சிறிய தடைய இருக்கும், ஆனாலும் நாம் பேசும் ஒலி மிகச்சரியாகத் துளை அருகே இருப்பதால் குரல் தெளிவாக எதிர்தரப்புக்கு கேட்கும். மேலும் இப்போது ஸ்மார்ட்போன் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் சில டிப்ஸ்களை இஙகே பார்க்கலாம்.

ஸ்மார்ட்போனை சுகாதாரமாகவும் நீண்டநாள் உழைக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றால், அடிக்கடி போனை சுத்தம் செய்ய வேண்டும். அதாவது போனின் ஸ்கிரீனை துடைக்கவும், நமது விரல் ரேகைகள், தூசிகள் ஆகியவற்றை நீக்கவும் மென்மையான துணியைப் பயன்படுத்துவது நல்லது. கடினமான கெமிக்கல் கூர்மையான பொருட்களை பயன்படுத்தினால் உங்கள் போன் ஸ்கிரீன் பாதிப்படையும். எனவே போனை சுத்தம் செய்ய மென்மையான துணியைப் பயன்படுத்துங்கள்.

அதேபோல் போனை சூரிய ஒளி நேரடியாகப் படும் இடத்தில் வைக்காதீர்கள். இல்லையென்றால் உங்களது போன் சூடாகி உள்ளிருக்கும் பாகங்கள் பாதிப்படையும். மேலும் கடுமையான குளிரும் உங்களது போனின் பேட்டரியை தற்காலிகமாகக் குறைக்கும். எனவே எப்போதும் மிதமான வெப்பநிலையில் உங்கள் போனை வைத்திருங்கள். இதனால் உங்கள் போனின் செயல்திறன் மற்றும் ஆயுட்காலமும் நீடிக்கும்.

மொபைல் போனில் அடிப்பகுதியில் இந்த சிறிய துளை எதுக்கு இருக்கு தெரியுமா?

அதேபோல் உங்கள் போனின் பேட்டரி ஆயுளைப் பாதுகாக்க எப்போதும் அதை 90% வரை சார்ஜ் செய்யலாம். மேலும், உங்கள் போனை 30% அடையும் வரை தொடர்ந்து பயன்படுத்தலாம். குறிப்பாக உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுள் நோட்டிபிகேஷன் சிவப்பு கோட்டை தொடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதேபோல், பேட்டரி 0% அளவை அடையும் வரை போனைப் பயன்படுத்தும் பழக்கம் மோசமானது.

குறிப்பாக போன் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால், மொபைல் போனின் ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் செயலிகளை அவ்வப்போது அப்டேட் செய்யுங்கள். மேலும் தேவையில்லாத செயலிகளை போன்களில் இருந்து நீக்குவது மிகவும் நல்லது.

photo courtesy: zeebiz.com

More from GizBot

Best Mobiles in India

English summary
Why does your Android phone have this little hole at the bottom and do you know what it for?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X