சிம் கார்டின் ஒரு மூலை மட்டும் வெட்டப்பட்டு இருப்பதற்கான காரணம் என்ன? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது மொபைல் போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். மக்களின் பல முக்கிய தேவைகளுக்கும் இந்த மொபைல் போன் பயன்படுகிறது. அதேபோல் இந்த மொபைல் போனை ஒரு தொடர்பு கருவியாக மாற்றும் வேலையைச் செய்வது சிம் கார்டு (SIM card) தான்
குறிப்பாக நாம் தினமும் பயன்படுத்தும் போனில் இருக்கும் சிம் கார்டில் ஒரு வினோதமான அம்சமும் இருக்கிறது. அதாவது அந்த சிம் கார்டின் ஒரு மூலை மட்டுமே வெட்டப்பட்டு இருக்கும். இதை யாராவது கவனித்திருக்கிறீர்களா? பொதுவாக நாம் ஒரு பொருளை தொடர்ந்து பயன்படுத்தினாலும், அதன் வடிவமைப்புக்கு பின்னால் உள்ள காரணங்களைச் சரியாக அறிந்துகொள்ள முயல்வதில்லை.

அந்த வகையில் சிம் கார்டின் இந்த வெட்டப்பட்ட மூலைக்கான காரணம் என்ன? இதில் இருக்கும் ரகசியம் என்ன என்பதை மக்கள் தெரிந்துகொள்வது நல்லது. இப்போது இது குறித்த தகவல்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அதாவது தொழில்நுட்ப வல்லுநர்கள் சிம் கார்டை இப்படி உருவாக்கியதற்குப் பின்னால் ஒரு முக்கிய காரணம் உள்ளது. ஆரம்பத்தில் சிம் கார்டுகள் முழுவதும் செவ்வக வடிவில் தான் இருந்தன. அப்போது மொபைல் போனில் சிம் கார்டை செருகுவதில் பலருக்கு குழப்பம் ஏற்பட்டது. அதாவது நேராக செருகுவதா அல்லது தலைகீழாக செருகுவதா எனப் பல தடுமாற்றம் இருந்தது. அதிலும் சிலர் எந்த பக்கத்தை உள்ளே வைப்பது என்றும் தெரியாமல் சிரமப்பட்டனர்.
குறிப்பாக சிம் கார்டை தலைகீழாாக செருகினால் அது சரியாக வேலை செய்யாது மொபைல் நெட்வொர்க் கிடைக்காது. இதுதவிர சிம் கார்டை தலைகீழாகச் செருகினால் சிம் கார்டை சேதமடையவும் வாய்ப்பு இருந்தது. எனவே இந்த குழப்பங்களைத் தீர்க்கவும், சிம் கார்டை சரியாக பொருத்துவதை உறுதிப்படுத்தவும் தான் அதன் ஒரு மூலை வெட்டும் யோசனை வந்து செயல்படுத்தப்பட்டது.
சிம்மில் இருக்கும் வெட்டு மூலையானது, பயனர்கள் சிம் கார்டை மொபைல் போனில் சிம் ஸ்லாட்டில் (SIM Slot) சரியான திசையில் செருகுகிறார்களா என்பதைக் கண்டறிய உதவியது. ஸ்லாட்டில் உள்ள வடிவம் மற்றும் சிம் கார்டில் உள்ள வடிவம் இரண்டும் ஒத்துப்போகும்போது, சிம் கார்டு நேராகச் செருகப்பட்டுள்ளதா அல்லது தலைகீழாக உள்ளதா என்பதை புரிந்துகொள்ள மக்களுக்கு மிகவும் எளிதாகிறது.

சிம் கார்டின் இந்த சிறிய வடிவமைப்பு குறியீடு, பயனரின் அனுபவத்தை மிகவும் எளிதாக்கியது. அதேபோல் சிம் கார்டின் முழு பெயர் என்னவென்றால் Subscriber Identity Module. இதன் முக்கிய வேலை நமது மொபைல் போனை செல்லுலார் நெட்வொர்க்குடன் (Cellular Network) இணைப்பதுதான். இது International Mobile Subscriber Identity (IMSI) எண்ணையும், அதனுடன் தொடர்புடைய ரகசிய சாவிகளையும் (Keys) சேமிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த எண்களின் உதவியுடன் தான் ஒரு மொபைல் நெட்வொர்க்கின் பயனர் யார் என்பது அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிக்கப்படுகிறது. அதுவும் மொபைல் போன் ஆன் செய்யப்பட்டவுடன், அது சிம் கார்டில் உள்ள தரவுகளை படித்து அதை மொபைல் நெட்வொர்க்கிற்கு அனுப்புகிறது. இந்த செயல்முறைக்கு பிறகு நெட்வொர்க் அந்த பயனரின் அடையாளத்தை சரிபார்க்கிறது. இந்த சரிபார்ப்பின் மூலம் தான் அந்த பயனர் நெட்வொர்க்கை அணுக முடியுமா இல்லையா என்பது உறுதி செய்யப்படும். ஆகவே இந்த அங்கீகாரச் செயல்முறை காரணமாகத்தான், ஒரு நிறுவனத்தின் சிம் கார்டு மற்ற நிறுவனத்தின் நெட்வொர்க்குடன் தானாக இணைக்க முடியாது.


Click it and Unblock the Notifications








