சூரியனை தொட்ட நாசா பார்க்கர் பிரோப் ஏன் இன்னும் உருக்கவில்லை தெரியுமா? உண்மை காரணம் இது தான்..

|

மனித வரலாற்றில் இது வரை நிகழ்ந்திடாத மிகப் சாதனை என்றால், அது நாசாவின் பார்க்கர் சோலார் பிரோப் சூரியனை தோட்ட நிகழ்வாக மட்டுமே இருக்க முடியும். மனிதன் முதலில் விண்வெளி பயணத்தைத் துவங்கிய உடன் சந்திரனில் கால் பதித்து மிகப் பெரிய சாதனையைப் படைத்தான். அதனைத் தொடர்ந்து நமது பால்வழி மண்டலத்தில் உள்ள மற்ற அனைத்து கிரகங்களையும் ஆராய மனிதன் பல விதமான செயற்கைக்கோள்களை உருவாக்கி, வெவ்வேறு கிரகங்களின் தகவலைச் சேகரிக்கத் துவங்கினான். வேற்று கிரகங்களைச் சோதனை செய்த மனிதனின் ஆசை சூரியனையும் விட்டுவைக்கவில்லை.

சூரியனை ஆராய்ச்சி செய்ய முடிவு செய்த மனிதன்

சூரியனை ஆராய்ச்சி செய்ய முடிவு செய்த மனிதன்

ஆம், நமது பால்வழி மண்டலத்தின் மையத்தில் இருக்கும் மிகப் பெரிய நட்சத்திரமான சூரியனை ஆராய்ச்சி செய்ய மனிதன் முடிவு செய்தான். சூரியனை ஆராய்ச்சி செய்வதா? இது சாத்தியமற்றது, கனவில் கூட நடக்காத காரியம் என்று பலர் இந்த யோசனைக்கு ஆரம்பத்திலேயே முட்டு போட்டாலும் கூட, நாசா தனது முயற்சியைக் கைவிடாமல் சரியான நேரத்திற்காகக் காத்திருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகச் சூரியனை அதன் இடத்திற்கே சென்று ஆராய்ச்சி செய்யும் வழியை நாசா கண்டறிந்தது. அதற்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது தான் இந்த 'பார்க்கர் சோலார் பிரோப்' விண்கலம்.

நாசாவின் சூரிய ஆராய்ச்சி எப்படித் துவங்கியது தெரியுமா?

நாசாவின் சூரிய ஆராய்ச்சி எப்படித் துவங்கியது தெரியுமா?

சூரிய புயல்கள் மற்றும் நம்முடைய மிகப் நட்சத்திரத்தின் காந்தப்புலத்தின் நடத்தை ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக 2009 இல் நாசா இந்த ஆராய்ச்சி பணியை அறிவித்தது. பணிகள் துவங்கி அடுத்த 9 ஆண்டுகளில் நாசா அயராது பாடுபட்டு, 2018 இல் பார்க்கர் சோலார் பிரோப் விண்கலத்தை விண்ணில் ஏவியது. ஏப்ரல் 28, 2021 அன்று, அது சூரியனின் மேற்பரப்பில் இருந்து 13.08 மில்லியன் கிமீ தொலைவில் முதல் முறையாகச் சூரிய கரோனாவுக்குள் நுழைந்தது. இது டிசம்பரில் இன்னும் நெருக்கமாக முன்னோக்கி நகர்ந்து, மனிதன் எதிர்பார்த்ததைவிட சூரியனுடன் மிக நெருக்கமாக நெருங்கி பிரபஞ்ச அளவில் மிகப் பெரிய சாதனையை படைத்தது.

SBI ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க புதிய விதி.. இனி இது எல்லோருக்கும் கட்டாயம்.. SBI வெளியிட்ட முக்கிய செய்திSBI ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க புதிய விதி.. இனி இது எல்லோருக்கும் கட்டாயம்.. SBI வெளியிட்ட முக்கிய செய்தி

சூரியனின் வெப்பத்தை எப்படி பார்க்கர் சோலார் பிரோப் சமாளிக்கிறது?

சூரியனின் வெப்பத்தை எப்படி பார்க்கர் சோலார் பிரோப் சமாளிக்கிறது?

இது சூரியனின் மேற்பரப்பில் இருந்து 7.86 மில்லியன் கி.மீ. தொலைவில் சூரியனை மிக நெருக்கமாக நெருங்கியது. அதேபோல், வரும் 2025 ஆம் ஆண்டளவில், பார்க்கர் சோலார் பிரோப்பின் ஆய்வு சூரியனுடன் நெருங்கிய அணுகுமுறையான 6.16 மில்லியன் கி.மீ. தொலைவை எட்டும் என்று நாசா கூறியுள்ளது. இது நாசா பார்க்கர் சோலாரின் ஆய்வை சூரியனின் வெளிப்புற வளிமண்டலம் அல்லது சூரிய கொரோனாவில் நுழைந்து அதன் பணியைத் தொடரும். சூரியனின் மேற்பரப்பில் சுமார் 5,500º C வெப்பநிலை உள்ளது. ஆனால், பார்க்கர் பிரோப் நுழையும் சூரிய கரோனாவின் வெப்பம் இதை விட அதிகமானது.

சூரிய கரோனா மில்லியன் டிகிரிக்கு அதிகமான வெப்பத்தைக் கொண்டுள்ளதா?

சூரிய கரோனா மில்லியன் டிகிரிக்கு அதிகமான வெப்பத்தைக் கொண்டுள்ளதா?

சூரிய கரோனா உண்மையில் மிகவும் வெப்பமானது. இது சுமார் ஒரு மில்லியன் டிகிரிக்கு மேலான வெப்பத்தைக் கொண்டுள்ளது. அறியப்படாத காரணங்களுக்காகச் சூரிய கரோனாவில் இவ்வளவு வெப்பம் உள்ளது. இதை கொரோனல் ஹீட்டிங் பிரச்சனை என்று அழைக்கப்படுகிறது. மேலும், இது பார்க்கர் பிரோபின் ஆய்வு இலக்குகளில் முக்கிய ஒன்றாகும். இவ்வளவு அதிக வெப்பத்திலும் மனிதன் உருவாக்கிய பார்க்கர் சோலார் பிரோப் எப்படி இன்னும் உருகாமல், எந்தவித கோளாறும் இல்லாமல் சிறப்பாகச் செயல்படுகிறது?

உங்கள் ஆதார் கார்டில் உள்ள போட்டோவை மாற்ற வேண்டுமா? அப்போ 'இதை' செய்யுங்கள் மக்களே..உங்கள் ஆதார் கார்டில் உள்ள போட்டோவை மாற்ற வேண்டுமா? அப்போ 'இதை' செய்யுங்கள் மக்களே..

வெப்பம் எப்படி உருவாகிறது? சூரியனின் அதிக வெப்பத்தின் காரணம் என்ன?

வெப்பம் எப்படி உருவாகிறது? சூரியனின் அதிக வெப்பத்தின் காரணம் என்ன?

வரையறையின் படி, வெப்பநிலை என்பது துகள்கள் எவ்வளவு வேகமாக நகரும் என்பதை வரையறுக்கும் ஒரு அலகு. மற்றொரு வகையில், உடலின் வெப்பம் என்பது அதை உருவாக்கும் துகள்களின் சராசரி இயக்க ஆற்றலாகும். மறுபுறம் வேகமாக நகரும் துகள்களின் பரிமாற்ற ஆற்றலின் அளவின் வெளிப்பாடு தான் வெப்பம் என்று கூறப்படுகிறது. அதனால் தான் அதிக வெப்பநிலையிலும் உடலில் குறைந்த வெப்பம் இருப்பது சாத்தியமாகிறது. அதாவது, உடலின் துகள்கள் அதிக இயக்க ஆற்றலைக் கொண்டிருக்கலாம், ஆனால் அதிக ஆற்றலைப் பரிமாறுவதற்கு அவற்றில் மிகக் குறைவாக எண்ணிக்கையில் இருப்பது காரணமாகிறது. புரியவில்லையா, அப்போ உதாரணத்துடன் பார்க்கலாம்.

இந்த உதாரணம் உங்களுக்கு வெப்பத்தைப் பற்றிய புரிதலைத் தெளிவாக்கும்

இந்த உதாரணம் உங்களுக்கு வெப்பத்தைப் பற்றிய புரிதலைத் தெளிவாக்கும்

இதற்கு ஒரு நல்ல உதாரணம் என்றால் அது விண்வெளி தான், இது நிலையான பின்னணி வெப்பநிலையைக் கொண்டுள்ளது. ஆனால் அது மிகவும் பரந்ததாக இருப்பதால், அதன் அடர்த்தி மிகவும் குறைவாக உள்ளது, எனவே அதில் உள்ள பொருட்களுக்குக் கிட்டத்தட்ட வெப்பத்தை இது பெரியளவில் மாற்றாது. இதைப் புரிந்துகொள்வதற்கான மற்றொரு வழி, கொதிக்கும் நீரில் ஒரு ஸ்பூனையும் மற்றும் தனித்தனியாக ஒரு அடுப்பில் ஒரு ஸ்பூனையும் வைத்துப்பாருங்கள். பின்னர் அந்த கரண்டியின் வெப்பநிலையை அளவிடும் போது இதன் வித்தியாசம் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

இந்தியாவில் புழங்கும் ஜீரோ ரூபாய் நோட்டுகள்.. இதன் மதிப்பே வேற.. எதற்காக இதை பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?இந்தியாவில் புழங்கும் ஜீரோ ரூபாய் நோட்டுகள்.. இதன் மதிப்பே வேற.. எதற்காக இதை பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?

இப்போது சொல்லுங்கள் எந்த ஸ்பூன் அதிக வெப்பமாக இருக்கும்?

இப்போது சொல்லுங்கள் எந்த ஸ்பூன் அதிக வெப்பமாக இருக்கும்?

அடுப்பில் இருப்பதை விட அதிக துகள்களுடன் குறுகிய இடத்தில் தொடர்புகொள்வதால், கொதிக்கும் நீரில் வைக்கப்பட்ட ஸ்பூன் அதிக வெப்பநிலையைக் கொண்டிருக்கும். சூரிய கரோனா என்பது சூரியனின் வெளிப்புற அடுக்கு ஆகும். இது குறைந்த அடர்த்தி கொண்டது, ஆனால் அதே நேரத்தில் அதிக வெப்பநிலை கொண்டது. இதன் விளைவாக, பார்க்கர் பிரோப் சிறிய எண்ணிக்கையிலான துகள்களுடன் தொடர்பு கொள்கிறது. சூரிய கரோனா இன்னும் ஒரு மில்லியன் டிகிரி செல்சியஸில் தான் உள்ளது என்றாலும், இது ஒரு நட்சத்திரத்திற்கு மிக அதிகமானதாக உள்ளது. இந்த காரணத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

சூரியனின் வெப்பத்தைத் தாங்கும் படி உருவாக்கப்பட்டதா பார்க்கர் சோலார் பிரோப்?

சூரியனின் வெப்பத்தைத் தாங்கும் படி உருவாக்கப்பட்டதா பார்க்கர் சோலார் பிரோப்?

இந்தச் சிக்கலைச் சமாளிக்க, பார்க்கர் சோலார் பிரோப் அதன் முன் ஒரு வெப்பக் கவசத்தைக் கொண்டுள்ளது. இது வெப்ப பாதுகாப்பு அமைப்பு (டிபிஎஸ்) என்று அழைக்கப்படுகிறது. இது 115 மிமீ தடிமன் மற்றும் 2.4 மீ அகலம் கொண்டது. மேலும், இது இரண்டு கார்பன் தகடுகளுக்கு இடையில் இணைக்கப்பட்ட ஒரு கூட்டு ஃபோமால் (foam) ஆனது. சூரியனை எதிர்கொள்ளும் தட்டு வெள்ளை பீங்கான் வண்ணப்பூச்சுடன் பளபளப்பானது. இது எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெப்பத்தைப் பிரதிபலிக்கிறது. வெள்ளை நிற மேற்பரப்புகள் பொதுவாக இருண்ட நிறங்களின் மேற்பரப்புகளை விட மின்காந்த கதிர்வீச்சின் சிறந்த முறையில் பிரதிபலிப்பாகும்.

பூமியில் எந்த இடத்திற்கு போகணும் மட்டும் சொல்லுங்க.. வெறும் 1 மணிநேத்தில் பிளைட்டில் கூட்டி போறோம்..பூமியில் எந்த இடத்திற்கு போகணும் மட்டும் சொல்லுங்க.. வெறும் 1 மணிநேத்தில் பிளைட்டில் கூட்டி போறோம்..

பார்க்கர் சோலார் பிரோபில் உள்ள குளிரூட்டும் அமைப்பு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

பார்க்கர் சோலார் பிரோபில் உள்ள குளிரூட்டும் அமைப்பு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

TPS ஆனது 1,650º C வரை தாங்கும் சக்தியைக் கொண்டுள்ளது. வரவிருக்கும் ஆண்டுகளில் பார்க்கர் ஆய்வு சூரியனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக வருவதால், அதன் கருவிகள் மற்றும் சுற்றுகளும் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக இதனை உருவாக்கிய பொறியாளர்கள் குளிரூட்டும் அமைப்பையும் பார்க்கர் சோலார் பிரோப் உடன் நிறுவியுள்ளனர். இது குளிரூட்டியாக 3.7 லிட்டர் டீயோனைஸ் செய்யப்பட்ட நீர் நிரப்பப்பட்ட சூடான தொட்டியாகச் செயல்படுகிறது. இரண்டு ரேடியேட்டர்கள், அலுமினிய துடுப்புகள் மற்றும் ஒரு பம்ப் ஆகியவற்றை இது கொண்டுள்ளது.

சூரியனுடன் தன்னிச்சையாகச் செயல்படும் பார்க்கர் சோலார் பிரோப்

சூரியனுடன் தன்னிச்சையாகச் செயல்படும் பார்க்கர் சோலார் பிரோப்

பார்க்கர் சோலார் பிரோபின் குளிரூட்டியானது சுற்றும் மற்றும் ஆய்வின் கூறுகளிலிருந்து வெப்பத்தை நீக்குகிறது மற்றும் ரேடியேட்டர்கள் மற்றும் துடுப்புகள் மூலம் அதை இழக்கச் செய்கிறது. இந்த ஆய்வின் முழு நேரத்திலும் பார்க்கர் தன்னிச்சையாகச் செயல்படவும், தன்னைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் மையக் கணினியிலிருந்து வரும் அறிவுறுத்தல்களின்படி அது தன்னிச்சையாகத் தன் நிலையை மாற்றிக் கொள்ளும்.

சூரியனை தொட்ட நாசா விண்கலம் எடுத்த 'வீடியோ'.. பிரபஞ்ச வரலாற்றில் நம்ப முடியாத முதல் அதிசய நிகழ்வு இது தான்..சூரியனை தொட்ட நாசா விண்கலம் எடுத்த 'வீடியோ'.. பிரபஞ்ச வரலாற்றில் நம்ப முடியாத முதல் அதிசய நிகழ்வு இது தான்..

சூரியன் பற்றி நாம் இதுவரை அறிந்திடாத உண்மைகளை இது கட்டவிழ்க்குமா?

சூரியன் பற்றி நாம் இதுவரை அறிந்திடாத உண்மைகளை இது கட்டவிழ்க்குமா?

இது எந்த மனித தலையீடும் இன்றி அதன் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் என்பதை உறுதிப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காரணங்களால் தான் சூரியனை நெருங்கிய பின்னரும் பார்க்கர் சோலார் பிரோப் கடுமையான வெப்பத்தால் பஸ்பம் ஆகாமல், இன்னும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு கொண்டிருக்கிறது. பார்க்கர் சோலார் பிரோப் சூரியனை தொடர்ந்து அடுத்த நான்கு ஆண்டுகள் சுற்றி வந்து அதன் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் என்று நாசா கூறியுள்ளது. இதன் மூலம் சூரியன் பற்றி நாம் இதுவரை அறிந்திடாத பல புதிய விஷயங்களை அறிந்துகொள்ள முடியுமென்று நாசா நம்புகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Why Does The NASA Parker Solar Probe Didnt Melted Even After Getting Inside To The Sun Atmosphere : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X