கூகுள் அசிஸ்டென்டிடம் ஆசையை கொட்டிய 90 கிட்ஸ்-அடகருமமே.!
இந்த சேவையை வைத்து இந்திய இளைஞர்கள் அதுவும் 90 கிட்ஸ் செஞ்ச வேலையை கேட்டால், நீங்களே அதிர்ந்து விடுவீர்கள். மேலும், இதை அடகருமமே என்று சொல்லி விடுவீர்கள்.
கூகுள் நிறுவனம் வாய்ஸ் அசிஸ்டென்ட் என்று தனது சேவையை வழங்கி வருகின்றது. ஆன்ட்ராய்டு மொபைல் போன், லேப்டாப், ஐஓஎஸ் உள்ளிட்ட இயங்குதளங்களிலும் இந்த சேவையை பெற முடியும்.

நீங்கள் கேட்கும் அனைத்தும் கூகுள் குரல் வலை மூலம் உங்களுக்கு சேவையை அளிக்கும். மேலும், குரல் வலையில் நீங்கள் ஏழுப்பட்ட கேள்விக்கு, பதிலும் அளித்துவிட்டு, திரையிலும் காட்டும்.
இந்த சேவையை வைத்து இந்திய இளைஞர்கள் அதுவும் 90 கிட்ஸ் செஞ்ச வேலையை கேட்டால், நீங்களே அதிர்ந்து விடுவீர்கள். மேலும், இதை அடகருமமே
என்று சொல்லி விடுவீர்கள்.

கூகுள் வாய்ஸ் அசிஸ்டென்ட்:
கூகுள் நிறுவனம் குரல் வலை சேவை மூலம் ஏராளமான சேவைகளை வழங்கி வருகின்றது. குரல் வலை சேவையில் நாம் கேட்கும் சேவைகளை உடனடியாக திரையில் கிடைத்து விடும்.

நல்ல வரவேற்பு:
கூகுள் நிறுவனத்தின் வாய்ஸ் கால் அசிஸ்டன்ட் சேவைக்கு உலகம் முழுக்க நல்ல வரவேற்பு இருக்கின்றது. உங்களுக்கு பிடித்த டிவியின் பெயரை சொல்லி என் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கின்றது என்று கேட்டால் உடனடியாக அது திரையில் காட்டிவிடும்.

பல்வேறு சேவைகள்:
நீங்கள் விரும்பும் பாடல்கள், வங்கி, ரயில் நேரம், மின்சார வாரியம், கேஸ், திரையரங்கம், மால், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் சேவையாக பெற முடியும்.

கூகுளின் குரல் உதவி:
கூகுளின் குரல் உதவி சேவையான கூகுள் அசிஸ்டென்ட்டிடம் ஏன், இந்திய இளைஞர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்துகிறார்கள் என்ற கூகுள் இந்தியா கேட்ட கேள்விக்கு டிவிட்டரில் பலரும் சுவாரஸ்மான பதில்களை அளித்து வருகின்றனர்.

டுவிட்டரில் தெரிவித்து இருந்தது:
ஐபோனின் சிரி போன்ற குரல் உதவி சேவையை கூகுள் அசிஸ்டென்ட்டும் வழங்கி வருகிறது. அதனிடம் குரல் வடிவில் பயனர் கேட்கும் கேள்விக்கு அது பதிலளிக்கிறது.

திருமணம் செய்ய கோரிக்கை
அதனிடம் பல இளைஞர்கள் காதலை வெளிப்படுத்தியும், தம்மைத் திருமணம் செய்து கொள்ளுமாறும் கோரியுள்ளனர். இந்திய இளைஞர்கள் ஏன் இவ்வாறு கேள்வி கேட்கின்றனர்? என கூகுள் இந்தியா நிறுவனம் தமது டிவிட்டர் பக்கத்தில் கேட்டிருந்தது.

90 கிட்ஸ் அடாவடித்தனம்:
இதற்கு சுவாரஸ்யமாக பதிலளித்து வரும் இளைஞர்கள், தாங்கள் காதல், திருமணம் இன்றி வாழும் 90-களில் பிறந்த தனி ஆள் எனவும், கேட்ட கேள்விக்கு பதில்சொல்வதோடு நிறுத்திக் கொண்டு பதில் கேள்வி எழுப்பாததால் கூகுள் அசிஸ்டென்டிடம் காதலை வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








