ஜியோ இலவசங்களுக்கு தடை : எல்லாமே நாடகம், பின்னணி என்ன.?

|

இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவைகளை அதிரடியாக முடங்கியுள்ளது இதன் மூலம் ரூ.303/- அல்லது அதற்கு மேற்ப்பட்ட ரீசார்ஜ் நிகழ்த்த மேலும் 3 மாதங்களுக்கு இலவச சலுகைகள் நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் ஆபர் ஆனது முடக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரீசார்ஜ் நிகழ்த்தியவர்கள் தொடர்ந்து 3 மாத கால இலவச சேவைகளை அனுபவிக்க முடியுமே ஒழிய புதிதாய் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு எந்தவிதமான நீட்டிப்பு சலுகையும் கிடைக்கப்பெறாது.

ரிலையன்ஸ் ஜியோவிற்காக பலவகையில் சலுகைகளை வழங்கிய ட்ராய் இப்போது திடீரென ஜியோவிற்கு எதிராய் செயல்படுவது ஏன்.? எதற்காக ஜியோ இலவசங்களை ட்ராய் முடக்கியது.? என்ன பின்னணி.? என்ன காரணம்.?

கடும் போட்டி

கடும் போட்டி

கடந்த காலத்தில், ஜியோ தனது முற்றிலும் இலவசமான சலுகைகளின்கீழ் எஸ்எம்எஸ் முதல் 4ஜி டேட்டா வரை அனைத்தையுமே வழங்க, ஜியோ வருகைக்கு முன்பு தொலைத்தொடர்பு துறையை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பார்தி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் கடும் போட்டி உண்டாக்கியது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

ஜியோவின் அதிரடிகளை சகித்துக்கொள்ள முடியாத நிலையில் இரண்டு நிறுவனங்களும் (Telecom Disputes Settlement and Appellate Tribunal - TDSAT) அதாவது தொலைத்தொடர்பு தகராறுகளுக்கு தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை (TDSAT) முறையிட்டு, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சலுகை நிறுத்துமாறு, புகார்களையும் உடன் குற்றச்சாட்டுகளையும் நிகழ்த்தின.

முன்னரே

முன்னரே

இதனை தொடர்ந்து கடந்த மாதம் தொலைத்தொடர்பு தகராறுகளுக்கு தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயமானது ஜியோ அதன் "வெல்கம் ஆபர்" மற்றும் ஹேப்பி நியூ இயர் ஆபர்" என்ற இரண்டுஇலவச சலுகைகள் சார்ந்த அறிவிப்புகளை முன்னரே ஜியோ வழங்கியிருந்ததா என்ற விளக்கங்களை ட்ராய்-யிடம் கேட்டிருந்தது.

நெறிமுறை

நெறிமுறை

அதற்கு ட்ராய், ஜியோவின் இலவச சலுகைகளானது நெறிமுறை வழிகாட்டுதல்களை மீறப்படவில்லை என்று கூறி, ரிலைன்ஸ் ஜியோவின் மொபைல் சேவைகளில் ஜியோ இலவச குரல் அழைப்புகள் மற்றும் தரவு திட்டத்தை அங்கீகரித்திருந்தது.

பயன்பாடு விதிமுறைகள்

பயன்பாடு விதிமுறைகள்

ஆனால் இப்போது ஜியோ மூலம் அறிவிக்கப்பட்டுள்ள விளம்பர சலுகையானது, மொபைல் ஆபரேட்டர்களின் ஸ்பெக்ட்ரம் பயன்பாடு விதிமுறைகள் வழியாக டெலிகாம் சந்தையை பாதிக்கும் மற்றும் மோசமாக அரசு வருவாயைப் பாதிக்கும் சிக்கல் எழுந்துள்ளதால் ஜியோவின் சம்மர் சர்ப்ரைஸ் ஆபர் ஆனது கட்டாயமான சூழ்நிலையில் முடக்கப்பட்டுள்ளது.

நாடகம் அரங்கேறுகிறது

நாடகம் அரங்கேறுகிறது

இதற்கு முன்பு ஜியோ வழங்கிய இரண்டு இலவச சலுகைகளுக்கும் ட்ராய் என்னென்ன மறைமுகமான உதவிகளை செய்தது என்ற விவரங்கள் வெளிவர தொடங்கியதால் தான் இந்தசம்மர் ஆபர் தடை நாடகம் அரங்கேறுகிறது என்றும், ஏனெனில் (ஆய்வாளர்கள் படி) மார்ச் 2018 அன்றோடு 100 மில்லியன் அளவிலான கட்டண சேவைகளை பெறும் சந்தாதாரர்களை ஜியோ கொண்டிருக்கலாம் என்றும் வல்லுநர்கள் நம்புகிறார்கள்.

ட்ராய் அப்படி என்னென்ன மறைமுக உதவிகளை ஜியோவிற்கு (அம்பானிக்கு) செய்தது.?

ட்ராய் அப்படி என்னென்ன மறைமுக உதவிகளை ஜியோவிற்கு (அம்பானிக்கு) செய்தது.?

மிகவும் வியக்கத்தக்க வண்ணம் ட்ராய் அதன் இன்டர்கனெக்ட் பயன்பாடு கட்டணங்களை (IUC) ரிலையன்ஸ் ஜியோ அதன் சேவைகளை தொடங்கப்பட்ட (செப்டம்பர் 2016) ஒரு வருடத்திற்கு முன்னதாகவே மாற்றங்கள் சார்ந்த பரிசீலினையை தொடங்கியுள்ளது

தடையாக இருக்காது

தடையாக இருக்காது

ஆக இந்த மாற்றங்களின் மூலம் ரிலையன்ஸ் ஜியோ அதன் இலவச குரல் சேவைகளை வழங்கலாம். அது எந்த விதத்திலும் ஜியோவிற்கு வணிக திட்டத்தை செயல்படுத்த தடையாக இருக்காது. வணிக பகுப்பாய்வானது, குறைக்கப்பட்ட ஐயூசி கட்டணங்கள் ஆனது புதிய ஆபரேட்டர் ஆன ஜியோவிற்கு மிகவும் உதவும் வண்ணம் உள்ளது என்று குறிக்கிறது. ஒருவேளை அறிமுகத்திற்கு பின்னர் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தால் ட்ராய் ஆதரிக்கக்கூடிய வாதங்களில் ஈடுபடலாம். ஆனால் ஒரு வருடத்திற்கு முன்னதாகவே பரிசீலனைக்காக செயல்முறை முன்னெடுத்துள்ளது ட்ராய் மீது பெரிய அளவிலான சந்தேகங்களை கிளப்புகிறது.

4ஜி ஸ்பெக்ட்ரம் பரிந்துரைகள்

4ஜி ஸ்பெக்ட்ரம் பரிந்துரைகள்

ட்ராய் ஒழுங்குவிதிகள் ஆனது ஒரு டெலிகாம் ஆபரேட்டர் ஒரு அதிர்வெண் பேண்டில் கிடைக்கப்பெறும் அலைமாலையின் 50%க்கும் மேற்பட்ட ஸ்பெக்டரம்களை குவிக்க முடியாது என்கிறது. 4ஜி பேண்ட்டில் இந்த உச்சவரம்பு 30 மெகா ஹெர்ட்ஸ் என்று உள்ளது. 4ஜி பேண்ட்டில், முதல் ஏலம் 20மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் என்பதால் 4ஜி நிறுவனங்களிடம் ஏற்கனவே 20மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் இருந்தது. ஏற்கனவே 4ஜி கொண்டுள்ள நிறுவனங்கள் ஒருவேளை அதிக ஸ்பெக்ட்ரம் பெற்றால் புதிய ஏலத்தில் 20மெகா ஹெர்ட்ஸ் என்ற வரம்பு 10 மெகாஹெர்ட்ஸ் என்று குறைக்கப்பட வேண்டும். ஆனால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமோ இந்தியா முழுவதும் 20 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் இயக்குபவராக உள்ளது.

ஏலத்தில் பங்கு

ஏலத்தில் பங்கு

இதற்கு காரணம் ட்ராய் 2016-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் 20 மெகா ஹெர்ட்ஸ் என்ற வரம்பில் இருந்து 10 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் தொகுதி என்று அளவை குறைத்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது ரிலையன்ஸ் ஜியோ 4ஜி ஏலத்தில் பங்கேற்க வசதியாய் இருந்துள்ளது ஒருவேளை ட்ராய் 4ஜி ஸ்பெக்ட்ரம் தொகுதி குறைப்பை பரிந்துரைக்காமல் இருந்திருந்தால், ஜியோ ஏலத்தில் பங்குகொண்டிருக்கவே முடியாது. 700 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் மற்றும் 800 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் ஸ்பெக்ட்ரம் மிகவும் செயல்திறன் மிக்கதாக இருக்கிறது. கடந்த ஏலத்தில், 700மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் ஸ்பெக்ட்ரம் வரை விற்பனை இருந்தது. பின்னர் பான்-இந்தியா ஸ்பெக்ட்ரமின் கீழ் அதன் விலை ரூ.55,000 கோடி எண்ரடு ட்ராய் மூலம் ஒரு மிக அதிகமான இருப்பு விலை பரிந்துரைக்கப்படுகிறது.

வழிவகை

வழிவகை

இதன் விளைவாக, அந்த மாபெரும் விலை எந்தவொரு நிறுவனத்தையும் ஏலத்தில் எடுக்க முடியாத நிலை உண்டாக்கியது ஆனால் அம்பானியின் ஜியோ நிறுவனம் அப்படியில்ல. ஆக 800 மெகாஹெர்ட்ஸ் என்ற ஸ்பெக்ட்ரம்தனை ஜியோ மட்டுமே பெறும் வண்ணம் வழிவகை உண்டாக்கப்பட்டுள்ளது.

4ஜி கால்ட்ராப்

4ஜி கால்ட்ராப்

ட்ராய் 2 ஜி மற்றும் 3 ஜி சேவைகளுக்கான கால்ட்ராப் விதிமுறைகளை அமைத்துள்ளது ஒருவேளை அந்த தரத்தை நிறுவனங்களால் வழங்க முடியவில்லை என்றால் ஆபரேட்டர்களுக்கு அபராதங்களை பரிந்துரைக்கிறது. ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த அபராதங்களை பின்னர் ஒதுக்கி அமைத்தது. 4ஜி சேவைகள் வழங்கும் ஜியோ மோசமான அழைப்பு துண்டிப்புகளை அளிக்கும் பட்சத்திலும் எந்தவிதமான அபரங்களுக்குள்ளும் சிக்காமல் இருக்க இது காரணமாய் அமைகிறது.

இணைப்பு புள்ளிகள் அபராதம்

இணைப்பு புள்ளிகள் அபராதம்

ட்ராயின் உள்ளிணைப்புக்கான (POIs) புள்ளிகளை ஜியோவிற்கு வழங்கவில்லை என்பதற்காக மூன்று நிறுவனங்களுக்கு ரூ.3,000 கோடி வரையில் அபராதம் பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு தொலைத் தொடர்பு வலைப்பின்னலில், இந்த இணைப்பு புள்ளிகள் தான் ஒரு பிணைய அழைப்பில் மற்றொரு பிணையம் மாற அனுமதிக்கும். இந்த விடயத்தில் பிற ஆப்பரேட்டர்களிடம் 12,000 இணைப்பு புள்ளிகள் தனக்கு கிடைக்கவில்லை என்று ஜியோ புகார் அளித்ததுமே எந்தவிதமான பதிலும் கிடைக்கும் முன்னரே பிற நிறுவனங்களுக்கு அபராதம் பரிந்துரைக்கப்பபட்டுள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

நம்பர் 1 ஆனது ஜியோ, பகிரங்கமாக தோற்றுப்போனது ஏர்டெல்.!

Best Mobiles in India

Read more about:
English summary
Why did Trai move against the jio scheme. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X