பணம் சம்பாதிக்க மஸ்க் ட்விட்டரை வாங்கினாரா? இனி Twitter எப்படி செயல்படும்? நீங்க ரெடியா?

|

உலகப் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-வும் ஆன எலான மஸ்க், ட்விட்டரை வாங்குவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். பின் ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த தகவலை நிர்வாகம் முறையாக வழங்கவில்லை என மஸ்க் ட்விட்டரை வாங்கும் முடிவில் இருந்து பின் வாங்கினார். மஸ்க் ட்விட்டரை குறைந்த விலையில் வாங்குவதற்காக இப்படி செய்கிறார் என கிசுகிசுக்கப்பட்டது.

ஒப்பந்தம் நிறைவேற்றிய மஸ்க்

ஒப்பந்தம் நிறைவேற்றிய மஸ்க்

மஸ்க் ட்விட்டரை வாங்கும் முடிவில் இருந்து பின்வாங்கியதை அடுத்து அவர் மீது ட்விட்டர் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் மஸ்க் மீண்டும் ட்விட்டரை வாங்க விருப்பம் தெரிவித்தார். மறுபுறம் நீதிமன்றமும் அக்டோபர் 27க்குள் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டது. சரியாக (நேற்று) அக்டோபர் 27 மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறைவேற்றி அதை வாங்கி இருக்கிறார்.

மஸ்க் ஏன் ட்விட்டரை வாங்கினார்?

மஸ்க் ஏன் ட்விட்டரை வாங்கினார்?

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நியோரோ லிங்க் போன்ற நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் ஆன மஸ்க், திடீரென ட்விட்டரை வாங்க காரணம் என்ன என்று கேள்வி வரலாம். ட்விட்டரை வாங்கியதற்கான காரணத்தை மஸ்க்கே தெரிவித்தார்.

அதில், எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பொதுவான டிஜிட்டல் தளம் தற்போது முக்கியம், அதில் பலவிதமான நம்பிக்கைகள் ஆரோக்கியமான முறையில் விவாதிக்கப்படும் என மஸ்க் கூறினார்.

இனி ட்விட்டர் எப்படி செயல்படும்?

இனி ட்விட்டர் எப்படி செயல்படும்?

மஸ்க் தலைமையில் செயல்படும் ட்விட்டர் இனி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். இது "அனைவருக்கும் இலவசம்" தளமாக இருக்கப்போவதில்லை என்றும் ஆனால் பயனர்கள் உங்கள் விருப்பப்படி விரும்பிய அனுபவத்தை தேர்வு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்படும் எனவும் மஸ்க் குறிப்பிட்டார்.

ட்விட்டர் ப்ளூ சேவை என்றால் என்ன?

ட்விட்டர் ப்ளூ சேவை என்றால் என்ன?

தற்போதே ட்விட்டரில் கட்டண சந்தா உறுப்பினர்கள் சேவை ஒருசில நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அது ட்விட்டர் ப்ளூ சேவை என அழைக்கப்படுகிறது. இனி இந்த சேவைக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து அனைத்து நாடுகளிலும் விரைவில் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் விலை என்ன?

ட்விட்டர் விலை என்ன?

ட்விட்டரை நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் அதாவது ரூ.3,52,000 கோடிக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மஸ்க் உறுதி செய்தார். எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பொதுவான டிஜிட்டல் தளம் தற்போது முக்கியம் எனவே ட்விட்டரை வாங்கினேன் என மஸ்க் ட்விட்டரை வாங்கியதற்கு காரணமாக குறிப்பிட்டார். அதோடு இனி பறவை சுதந்திரமாக பறக்கும் எனவும் மஸ்க் குறிப்பிட்டார்.

இனி பறவை சுதந்திரமாக பறக்கும்..

இனி பறவை சுதந்திரமாக பறக்கும்..

அது என்ன பறவை சுதந்திரமாக பறக்கும் என கேள்வி வரலாம், ட்விட்டர் நிறுவனத்தின் சின்னமாக பறக்கும் பறவை உள்ளது. இதை குறிப்பிட்டு மஸ்க், பறவைக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என தெரிவித்துள்ளார்.

அதோடு நிற்கவில்லை, ட்விட்டர் உரிமையாளர் என்று உறுதி செய்யப்பட்ட உடன் எலான் மஸ்க், நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆன சிஇஓ பராக் அகர்வால், நிறுவனத்தின் சட்ட அதிகாரியும் இந்தியருமான விஜயா கட்டே உள்ளிட்ட 4 மூத்த அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கினார். இன்னும் ட்விட்டரில் என்ன மாற்றம் எல்லாம் நிகழும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பொதுவான டிஜிட்டல் தளம்

பொதுவான டிஜிட்டல் தளம்

சமூக வலைதளங்கள் தீவிர வலதுசாரி அல்லது தீவிர இடதுசாரி எதிரொலி அறைகளாக பிரிந்து நமது சமூகத்தில் அதிக வெறுப்பை உருவாக்கி பிளவுப்படுத்தும் ஆபத்தான நிலையில் தற்போது இருக்கிறது.

எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பொதுவான டிஜிட்டல் தளம் தற்போது முக்கியம் எனவே ட்விட்டரை வாங்கினேன் என மஸ்க் குறிப்பிட்டார்.

நான் நேசிக்கும் மனித குலத்திற்காக..

நான் நேசிக்கும் மனித குலத்திற்காக..

அதேபோல் அதிக பணம் சம்பாதிக்க தான் ட்விட்டரை வாங்கவில்லை எனவும் நான் நேசிக்கும் மனித குலத்திற்கு உதவவே இதை செய்தேன் எனவும் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சட்டத்தை கடைபிடிப்பதுடன், எங்கள் தளம் அனைவரையும் அரவணைத்து வரவேற்கும் வகையில் இருக்க வேண்டும் எனவும் அங்கு நீங்கள் விரும்பும் விருப்பத்தை உங்கள் விருப்பப்படி தேர்வு செய்யலாம் எனவும் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Why did Musk buy Twitter? How will Twitter work from now on?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X