பாவம் மனுஷன்.. கெத்து காட்டிய மறுநாளே Google Gemini-க்கு ஆப்பு அடிச்ச OpenAI.. ChatGPT-ல் Strawberry AI.. இனி?
OpenAI ChatGPT Strawberry AI: சில நாட்களுக்கு முன்பாக.. "போட்டின்னு வந்துட்டா பாரபட்சமே பார்க்க மாட்டேன்.. அடிமட்டம் வரைக்கும் இறங்கி அலசுவேன்!" என்கிற அளவிற்கு, சுந்தர் பிச்சை (Sundar Pichai) தலைமையிலான கூகுள் (Google) நிறுவனமானது ஒரு தரமான வேலையை பார்த்து இருந்தது. அது கூகுள் நிறுவனத்தின் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் (Generative AI Chatbot) ஆன ஜெமினி ஏஐ-க்கான (Gemini AI) புதிய ஷார்ட்கட் ஆகும். தற்போது இந்த ஷார்ட்கட் கூகுள் க்ரோம் சேர்ச் பார் (Google Chrome Search Bar) வழியாக, மிகவும் எளிமையான முறையில் அணுக கிடைக்கிறது.
சாட் வித் ஜெமினி (Chat with Gemini) என்று அழைக்கப்படும் இந்த புதிய ஷார்ட்கட் ஆனது.. வெறுமனே கூகுள் க்ரோம் சேர்ச் பாரில் "@" என்று டைப் (Type @ in Google Search Bar) செய்வதன் மூலம் அணுக கிடைக்கிறது. அதாவது ஜெமினி ஏஐ சாட்பாட் ஆனது கூகுள் க்ரோம் சேர்ச் பார் உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது முன்னெப்போதை விடவும் மிகவும் எளிமையான அக்சஸ்-க்கு (Easy Access) வழிவகுக்கிறது.

இது மிகவும் சிறிய 'அப்டேட்' ஆக தெரிந்தாலும் கூட.. கூகுளை பொறுத்தவரை, ஜெமினி ஏஐ-க்கான ஒவ்வொரு அப்டேட்டுமே ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சாட்ஜிபிடி-க்கு (ChatGPT) எதிரான நடவடிக்கையாக இருக்கும்; இருக்க வேண்டும். ஆனால் ஓப்பன்ஏஐ நிறுவனம் இதையெல்லாம் கொஞ்சம் கூட சட்டை செய்யவது போல் தெரியவில்லை.
ஓப்பன் ஏஐ நிறுவனமானது அதன் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் ஆன சாட்ஜிபிடி தொடர்பான மிகப்பெரிய அப்டேட்டில் (Biggest Update) பணியாற்றி வருகிறது. அது தான் - ஸ்ட்ராபெர்ரி ஏஐ ப்ராஜெக்ட் (Strawberry AI Project). ஸ்ட்ராபெர்ரி ஏஐ ப்ராஜெக்ட் என்றால் என்ன? ஸ்ட்ராபெர்ரி ஏஐ ப்ராஜெக்ட் ஏன் ஒரு பெரிய விஷயமாக இருக்கலாம்? இதோ விவரங்கள்:
ஸ்ட்ராபெர்ரி ஏஐ ப்ராஜெக்ட் என்றால் என்ன? ஓப்பன்ஏஐ நிறுவனம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஸ்ட்ராபெர்ரி எனப்படும் அதன் மேம்பட்ட ஏஐ ப்ராஜெக்ட்டை (Advanced AI Project) வெளியிட திட்டமிட்டுள்ளது. முன்னதாக க்யூ ஸ்டார் (Q*) என்று அறியப்பட்ட இந்த திட்டம், ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் ஏஐ மாடல்களுக்குள் (AI Models) மேம்பட்ட பகுத்தறிவு திறன்களை வெளிப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
ஸ்ட்ராபெர்ரி ஏஐ ப்ராஜெக்ட் ஏன் ஒரு பெரிய விஷயமாக இருக்கலாம்? ஸ்ட்ராபெர்ரி ஏஐ ஆனது பதில்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், இண்டர்நெட்டை ஆட்டோநமஸ் ஆக நேவிகேட் செய்யும் (Autonomously navigate the internet) என்றும் கூறப்படுகிறது. இதைத்தான் ஓப்பன்ஏஐ நிறுவனம் 'டீப் ரிசேர்ச்' (Deep Research) என்று அழைக்கிறது.
மேலும் இன்றைய சாட்பாட்களால், நம்பத்தகுந்த வகையில் செய்ய முடியாத சிக்கல்களை கூட ஸ்ட்ராபெர்ரி ஏஐ அமைப்பால் தீர்க்க முடியும். தற்போதைய ஏஐ மாடல்களை விட, இதை இன்னமும் சிறந்ததாக்குவது எதுவென்றால் - இந்த டூல் ஆனது கணிதத்தில் (Maths) ஒருபோதும் பயிற்சி பெறாவிட்டாலும் கூட அவற்றை தீர்க்கும் திறன்கொண்டதாக இருக்கும். மேலும் சந்தை உத்திகளை வடிவமைத்தல் மற்றும் சிக்கலான வார்த்தை புதிர்களை தீர்ப்பது போன்ற உயர்நிலை பணிகளையும் செய்யும்.
ஒட்டுமொத்தமாக கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ-க்கு கடும் போட்டியாளர் ஆகவும், ஒரு பெரிய தலைவலியாகவும் இருக்கும். ஜெமினி ஏஐ-யின் இன்டர்பேஸில் (Gemini AI Interface) கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் எதுவுமே.. ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் ஸ்ட்ராபெர்ரி ஏஐ-க்கு ஈடு கொடுக்குமா என்பது கேள்விக்குறிதான். இது சாட்ஜிபிடி உடன் ஒருங்கிணைக்கப்படும் பட்சத்தில், சாட்ஜிபிடி எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








