Home
News

கம்மி விலையில் முழு வீட்டிற்கும் AC.. இனி ஒரு அறைக்கு மட்டும் AC போடாதீங்க.. ஒரே செலவில் சாமர்த்தியமா யோசிங்க

உங்கள் வீட்டின் பெட்ரூமிற்கு ஒரே ஒரு ஏசி (AC) வாங்கி மாட்டும் செலவில், உங்கள் வீட்டின் ஒட்டுமொத்த பரபரளவையும் நீங்கள் ஏசியாக மாற்ற முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்க மக்களே உண்மையிலேயே இது முடியும். உங்கள் வீட்டின் எல்லா அறைகளையும் ஏசியால் குளிர்விக்க முடியும். அதுவும் மிக மிக குறைந்த விலையில் உங்கள் ஒட்டுமொத்த வீட்டையும் கொடைக்கானல், ஊட்டி போல சென்ட்ரலைஸ்ட்டு ஏசி (Centralised AC) மூலம் குளிர்விக்க முடியும். என்னது சென்ட்ரலைஸ்ட்டு ஏசியா? அது செலவு அதிகமே என்று நீங்கள் கருதுவீர்கள். உண்மையில் இது மலிவானது.

சென்ட்ரலைஸ்ட்டு ஏசி அல்லது சென்ட்ரல் ஏசி (Central AC) என்றதும், பலருடைய மனதில் இது மிகவும் பெரியதாக இருக்குமே? இது அதிக செலவாகுமே என்ற கேள்வி தான் முதலில் தோன்றியிருக்கு. அடுத்தபடியாக, இது பெரிய-பெரிய மால் மற்றும் அலுவலகங்களில் மட்டும் தானே பயன்படுத்த முடியும் என்றும் சில கேள்விகளை எழுப்பலாம். உண்மையை சொல்ல போனால், உங்கள் வீட்டிற்கும் நீங்கள் சென்ட்ரலைஸ்ட்டு ஏசி செட்டப்பை நிறுவ முடியும்.

கம்மி விலையில் முழு வீட்டிற்கும் AC.. ஒரு அறைக்கு மட்டும் AC போடாதீங்க

கம்மி விலையில் முழு வீட்டிற்கும் AC.. இனி ஒரு அறைக்கு மட்டும் AC போடாதீங்க:

இப்போது பெரும்பாலான வீடுகளில் மக்கள் ஸ்ப்ளிட் ஏசி (Split AC) மற்றும் விண்டோஸ் ஏசி (Windows AC) கருவிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஏசி (AC) மாடல்கள் பொதுவாக ஒரே ஒரு அறையை மட்டும் குளிர்விக்க (cooling) அனுமதிக்கிறது. ஆனால், சென்ட்ரலைஸ்ட்டு ஏசி அப்படி இல்லை. இது பெரியளவு ஏரியாவை (Large spaced area) குளிர்விக்கும் திறனை கொண்டுள்ளது.

ஸ்ப்ளிட் ஏசி மற்றும் விண்டோவ் ஏசி வாங்கும் அதே செலவில் இப்போது நீங்கள் சென்ட்ரலைஸ்ட்டு ஏசியை வாங்க முடியும். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அறையை மட்டும் குளிர்விப்பதற்கு பதிலாக, நீங்கள் உங்களுடைய ஒட்டுமொத்த வீட்டையும் சில்லென்று (complete cooling for your home) மாற்றிவிட முடியும். விவரமான மக்கள் இப்போது அவர்களுடைய வீடுகளில் சென்ட்ரலைஸ்ட்டு ஏசியை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

உங்கள் வீடு 2 அல்லது 3 அறைகளால் ஆனது என்றால், உங்களுக்கு 1 டன் சென்ட்ரலைஸ்ட்டு ஏசி (1 Ton central AC) மட்டும் போதுமானது. ஒருவேளை நீங்கள் இருக்கும் இருப்பிடம் அளவில் பெரியாதென்றால், உங்களுக்கு 2 அல்லது 3 டன் சென்ட்ரலைஸ்ட்டு ஏசி தேவைப்படலாம். பொதுவாக, நீங்கள் வசிக்கும் வீட்டை மட்டும் முழுமையாக குளிர்விக்க நினைக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு அடிப்படை சென்ட்ரலைஸ்ட்டு ஏசி மாடலே போதுமானது மக்களே.

சென்ட்ரலைஸ்ட்டு ஏசிகளின் விலை என்ன இருக்கும்?

அடிப்படை சென்ட்ரலைஸ்ட்டு ஏசி சாதனங்கள் இப்போது இந்தியாவில் வெறும் ரூ. 50,000 விலையுடன் (Central AC Price) ஆரம்பமாகின்றன. சிறந்த மாடல்கள் அல்லது அதிக டன் சக்தி கொண்ட சென்ட்ரலைஸ்ட்டு ஏசி மாடலை ரூ. 3,00,000 வரை வாங்க கிடைக்கிறது. நீங்கள் உங்கள் வீட்டை மட்டும் குளிர்விக்க விரும்பினால் உங்களுக்கு ரூ. 50,000 விலை கொண்ட சென்ட்ரலைஸ்ட்டு ஏசி மாடல் போதும்.

நீங்கள் தற்போது சந்தையில் புதிதாக ஒரு இன்வெர்டர் ஏசி (Inverter AC) மாடலை வாங்கும் அதே செலவில் ஒரு சென்ட்ரலைஸ்ட்டு ஏசி வாங்கி உங்கள் ஒட்டுமொத்த வீட்டையும் சில் என்று குளிர்விக்கலாம். இனி ஒரு அறையை மட்டும் குளிர்விக்கலாம் என்ற எண்ணம் இல்லாமல், சாமர்த்தியமாக முழு வீட்டையும் குளிர்விக்க பாருங்கள் மக்களே.

More from GizBot

Best Mobiles in India

English summary
Why centralised AC is best for home comparison between central ac vs split ac vs window ac
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X