5ஜி நெட் இருக்கும் 5ஜி போனும் இருக்கும்.. ஆனா Jio 5G யூஸ் பண்ண முடியாது! இதை முதலில் பண்ணுங்க!

|

Jio 5G சேவை தற்போது டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் வாரணாசி ஆகிய பகுதிகளில் கிடைக்கிறது. ஆனால் அந்த பகுதியில் உள்ள பலராலும் 5ஜி சேவையை அணுக முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் பார்க்கலாம்.

ஜியோ 5ஜி

ஜியோ 5ஜி

ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவையை படிப்படியாக நாடு முழுவதும் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன்படி ஜியோ 5ஜி சேவை நீங்கள் இருக்கும் பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டு அதற்கான அணுகல் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் காரணத்தையும் தீர்வையும் தற்போதே தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

இலவசமாக ஜியோ 5ஜி சேவையா?

இலவசமாக ஜியோ 5ஜி சேவையா?

ஜியோ 5ஜி சேவை தற்போது 5 இந்திய நகரங்களில் கிடைக்கிறது. இணைப்பைப் பெற பயனர்கள் புதிய 5ஜி சிம் கார்ட் வாங்க வேண்டியத் தேவையில்லை. தற்போது பயன்படுத்தும் அதே 4ஜி கார்ட் மூலமாகவே 5ஜி அணுகலை பெறலாம். 5ஜி சேவைக்கு என தனியாக விலை நிர்ணயம் எதுவும் செய்யவில்லை, 4ஜி ரீசார்ஜ் பிளான்களின் மூலமாகவே 5ஜி அணுகலை பெறலாம் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகள்

ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகள்

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை தற்போது டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் வாரணாசி ஆகிய பகுதிகளில் கிடைக்கிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் அதிக நகரங்களையும் 2023க்குள் இந்தியா முழுவதும் 5ஜி கிடைக்கச் செய்வதையும் ஜியோ இலக்காகக் கொண்டிருக்கிறது. ஜியோ 5ஜி சேவை மட்டுமல்ல எந்த ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 5ஜி அணுகலை பெறுவதற்கும் 5ஜி போன் என்பது கட்டாயம்.

ஜியோ போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட்

ஜியோ போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட்

அனைத்து 5ஜி ஸ்மார்ட்போன் பயனர்களாலும் ஜியோ 5ஜி அணுகலை இயக்க முடியாது. நீங்கள் எந்த மாடல் போனை பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். அதேபோல் நீங்கள் ஜியோ போஸ்ட்பெய்ட் அல்லது ப்ரீபெய்ட் என எந்த சேவையின் பயனர்களாக இருந்தாலும் எந்தவித ரீசார்ஜ் திட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

ஜியோ 5ஜி ரீசார்ஜ் பிளான்

ஜியோ 5ஜி ரீசார்ஜ் பிளான்

எந்தெந்த பகுதியில் ஜியோ 5ஜி சேவை கிடைக்கிறதோ அந்தந்த பகுதியில் 5ஜி போன் வைத்திருக்கும் அனைவருக்கும் 5ஜி அணுகல் கிடைக்கும் என ஜியோ அறிவித்திருக்கிறது. 4ஜி சிம் மூலமாகவே 5ஜி இணைப்பை பெறலாம் எனவே புதிய சிம்கார்ட் வாங்கத் தேவையில்லை. ஆனால் நீங்கள் எந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்திருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்வது அவசியம்.

5ஜி ரீசார்ஜ் விலை இதுதானா?

5ஜி ரீசார்ஜ் விலை இதுதானா?

5ஜி அணுகலை பெறுவதற்கு என பிரத்யேக 5ஜி திட்டங்கள் எதையும் ஜியோ அறிமுகப்படுத்தவில்லை. தற்போது இருக்கும் 4ஜி ரீசார்ஜ் திட்டங்களில் 5ஜி சேவையை பெறலாம். ஆனால் குறைந்தபட்சம் ரூ.239க்கு மேல் உள்ள ரீசார்ஜ் திட்டங்களை தேர்ந்தெடுப்பது அவசியம். ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ஆகிய இரண்டு திட்டங்களுக்கும் இதே நிபந்தனை தான். இந்த திட்டங்களில் ரீசார்ஜ் செய்து நீங்கள் இருக்கும் பகுதியில் 5ஜி சேவை கிடைக்கும்பட்சத்தில் வரம்பற்ற முறையில் 5ஜி தரவை அனுபவிக்கலாம். ஜியோ 5ஜி சேவையில் 598.58 Mbps வரை வேக 5G இணையத்தை பெற முடிந்ததாக கூறப்படுகிறது.

5ஜி அப்டேட் அவசியம்

5ஜி அப்டேட் அவசியம்

அனைத்து 5ஜி போன்களிலும் ஜியோ 5ஜி சேவையை இயக்க முடியாது என்பது இங்கே குறிப்பிடத்தக்க ஒன்று. ஒவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனமும் அந்த மாடலுக்கான 5ஜி அப்டேட்டை வெளியிட வேண்டும். இதை அப்டேட் செய்த பிறகு தான் 5ஜி சேவை இயக்க முடியும்.

எந்தெந்த போனில் 5ஜி சேவை

எந்தெந்த போனில் 5ஜி சேவை

ஒன்பிளஸ் ஃப்ளாக்ஷிப் போன்கள் மற்றும் நத்திங் போன் 1 ஆகியவற்றில் ஜியோ 5ஜி அணுகலை தற்போதே பெறலாம். இந்த போன்கள் ஜியோ 5ஜிக்கு தயாராக இருக்கிறது. ஆப்பிள் ஐபோன் உட்பட பிற ஸ்மார்ட்போன்களுக்கான 5ஜி அப்டேட் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் வெளியிடப்படும் எனவும் நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

Best Mobiles in India

English summary
Why Can't able to Activate Jio 5G in 5G Available Area? Reason and Solution: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X