உங்க அமெரிக்க நண்பரிடம் கூறி கம்மி விலையில் iPhone 14 வாங்க வேண்டாம்.! ஏன் தெரியுமா?

|

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய iPhone 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ததும், இந்தியாவில் உள்ள பலர் அவர்களுடைய காண்டாக்ட் விபரங்களை ஸ்க்ரோல் செய்யத் துவங்கிவிட்டனர். குறிப்பாக, நம்ம ஊர் காரனுங்க, இல்லனா உறவு காரனுங்க யாராச்சும் அமெரிக்கா பக்கம் செட்டில் ஆகி இருக்காங்களான்னு தேடிட்டு இருக்கும் நபர்களில் நீங்கள் ஒருவர் என்றால், இந்த பதிவைக் கவனமாகப் படியுங்கள். அமெரிக்காவில் இருந்து குறைந்த விலையில் ஐபோன் 14 வாங்க ஐடியா செய்திருந்தால் உஷார் ஆக்கிக்கொள்ளுங்கள் மக்களே.

புது ஐபோன் 14 சீரிஸ் மாடலை வாங்க அமெரிக்க நண்பர்களை தேடும் இந்தியர்கள்

புது ஐபோன் 14 சீரிஸ் மாடலை வாங்க அமெரிக்க நண்பர்களை தேடும் இந்தியர்கள்

ஐபோன்கள் இந்தியாவில் விலை உயர்ந்ததாக இருக்கிறது. இது பலருக்கும் விரும்பத்தகாத வகையில் அமைத்துள்ளது என்பதனால், சிலர் அமெரிக்காவில் இருந்து புதிய ஐபோன் மாடலை வாங்க கருதுகின்றனர். இதற்காகச் சிலர் அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களைத் தொடர்பு கொண்டு ஐபோன் 14 ஐ வாங்கி வருமாறு வலியுறுத்த துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

iPhone 14 மாடலை அமெரிக்காவில் ஆர்டர் செய்தால் விலை மாறுமா?

iPhone 14 மாடலை அமெரிக்காவில் ஆர்டர் செய்தால் விலை மாறுமா?

உண்மையைச் சொல்லப் போனால், நீங்கள் அமெரிக்காவில் இருந்து iPhone 14 மாடலை ஆர்டர் செய்தால் விலையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுடன் வருகிறது. இதற்கு முன்னாள், இந்த முறையைப் பின்பற்றி வெளிநாட்டில் இருந்து நபர்களின் உதவியுடன் ஐபோன் வாங்கிய நபர்கள் அதே ட்ரிக்கை பயன்படுத்த நினைத்தால் அது பயனளிக்காது. காரணம், வெளிநாட்டில் இருந்து வாங்கும் புதிய ஐபோன் 14 மாடலுடன் சில சிக்கல் இருக்கிறது.

உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!

புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடலை அமெரிக்காவில் இருந்து வாங்கினால் என்ன சிக்கல் இருக்கிறது?

புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடலை அமெரிக்காவில் இருந்து வாங்கினால் என்ன சிக்கல் இருக்கிறது?

வரிகள் காரணமாக, அமெரிக்காவில் ஐபோன்கள் வாங்குவதை விட இந்தியாவில் ஐபோன்களின் விலை அதிகமாக உள்ளது. எனவே அமெரிக்காவில் வசிக்கும் தங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் ஐபோன்கள் ஒன்றைப் பெறுமாறு கேட்பது நல்ல ஐடியாவாக தோன்றினாலும், அமெரிக்காவில் கிடைக்கும் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களில் சிம் டிரே இல்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். ஆம், அமெரிக்க மாடல் ஐபோன்களில் சிம் டிரே கிடையாது.

எது அமெரிக்க ஐபோனில் இந்த வசதியே கிடையாதா?

எது அமெரிக்க ஐபோனில் இந்த வசதியே கிடையாதா?

அமெரிக்க ஐபோன் பயனர்கள் eSIMஐ முழுமையாக நம்பியிருக்க வேண்டும், இது மொபைலின் மதர்போர்டில் பொருத்தப்பட்ட வசதி என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களில் சிம் டிரே வராது, ஆனால், இந்திய ஐபோன் 14 சீரிஸ் வகைகளில் சிம் டிரே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, நீங்கள் அமெரிக்காவில் இருந்து ஒரு ஐபோனை ஆர்டர் செய்தால், அதை பிஸிக்கல் சிம் இல்லாமல் பயன்படுத்த வேண்டும்.

உங்க Smartphone ஹேக் செய்யப்பட்டதா என்பதை எப்படி கண்டறிவது? உஷாரா இருக்கனும் மக்களே.!உங்க Smartphone ஹேக் செய்யப்பட்டதா என்பதை எப்படி கண்டறிவது? உஷாரா இருக்கனும் மக்களே.!

இந்தியாவில் eSIM இப்போது கிடைக்கிறதா? இல்லையா?

இந்தியாவில் eSIM இப்போது கிடைக்கிறதா? இல்லையா?

இதைச் செய்வதற்கு, நீங்கள் முதலில் eSIM கார்டிற்காக விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக உங்கள் பிஸிக்கல் சிம்மை டெலிகாம் ஆப்ரேட்டரிடம் கூறி நிராகரிக்க வேண்டும். eSIM சேவைக்கு மாறுவது என்பது, நீங்கள் ஃபிசிக்கல் சிம் மூலம் செய்யக்கூடிய அளவுக்குச் சுதந்திரமான சேவையாக இருக்காது என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். இந்தியாவில் eSIM-கள் இப்போது மிகவும் எளிதாகக் கிடைக்கின்றன.

எந்த இந்திய டெலிகாம் நிறுவனங்கள் eSIM சேவையை வழங்குகிறது?

எந்த இந்திய டெலிகாம் நிறுவனங்கள் eSIM சேவையை வழங்குகிறது?

வோடபோன் ஐடியா, ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற பிரபலமான கேரியர்கள் ஆப்பிளுடன் இணக்கமான eSIM -களை வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் eSIM ஐ செயல்படுத்த நீங்கள் அருகில் உள்ள ஆபரேட்டர் கடைக்குச் செல்ல வேண்டும். இருப்பினும், அனைவருக்கும் eSIM என்பது வசதியான பொருத்தமாக இருக்காது. காரணம், நீங்கள் வேறு டெலிகாம் வழங்குநருக்கு மாற விரும்பினால் eSIM ஐச் செயல்படுத்துவது மிகவும் கடினமான பணியாக இருக்கும்.

ஸ்மார்ட்போனை அதிகமாக யூஸ் செய்தால் வேகமாக வயசாகிவிடுமா? உண்மையை உடைத்த ஆராய்ச்சி!ஸ்மார்ட்போனை அதிகமாக யூஸ் செய்தால் வேகமாக வயசாகிவிடுமா? உண்மையை உடைத்த ஆராய்ச்சி!

eSIM சேவையால் என்ன சிக்கலை சந்திக்க நேரிடும்?

eSIM சேவையால் என்ன சிக்கலை சந்திக்க நேரிடும்?

அப்படி ஒருவேளை நீங்கள் வேறு ஆப்ரேட்டருக்கு மாற விரும்பினால், மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் வரை உங்கள் போன் செயல்பாட்டில் இருக்காது. குறைந்தது ஒரு நாளாவது நீங்கள் காத்திருக்க நேரலாம். ஆனால், பிஸிக்கல் சிம் கார்டுகளில் இந்த சிக்கல் கிடையாது. உங்களுக்கு விருப்பமான சிம் கார்டை பயன்படுத்தி தாராளமாகச் சேவையை துவங்கலாம். அமெரிக்க ஐபோன் 14 சீரிஸ் மாடல்களில் eSIM மட்டுமே பொருந்தும் என்பதால் இந்த சிக்கலை நீங்கள் சந்திக்க நேரிடும்.

சரி யாருக்கெல்லாம் இந்த eSIM சேவை சிக்கலை உருவாகும்?

சரி யாருக்கெல்லாம் இந்த eSIM சேவை சிக்கலை உருவாகும்?

அமெரிக்காவிலிருந்து பிற நாடுகளுக்குப் பயணிப்பவர்களுக்கு இந்த eSIM போன்கள் மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கும். பல்வேறு நோக்கங்களுக்காக வேறொரு நாட்டிற்குச் செல்லும் மக்களுக்கு இது சுத்தமாகப் பொருந்தாது. அப்படி நீங்கள் eSIM ஐ மட்டும் பயன்படுத்தக் கூடிய ஒரு சாதனத்தை வைத்திருந்தால், பிற நாடுகளுக்குச் செல்லும் போது, உங்கள் கையுடன் பிஸிக்கல் சிம் கார்டுடன் இயங்கும் இரண்டாவது போனை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும் என்பதை மறக்காதீர்கள்.

Best Mobiles in India

English summary
Why Buying iPhone 14 Series From US Is a Bad Choice Know It Before Buying One And Taking Into India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X