Home
News

பிஎஸ்என்எல்: ஏன் இதுவரை 4ஜி சேவை வழங்கவில்லை? நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கேள்வி?

பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் அருமையான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும். ஆனால் இந்நிறுவனம் அனைத்து இடங்களிலும் 4ஜி சேவையை கொண்டு வந்தால் இன்னும் அருமையாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

 குறிப்பாக பிஎஸ்எ

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 4ஜி வசதி இல்லாததால் தொடர்ந்து திணறி வருகிறது, இதையே திமுக எம்பி தயாநிதி மாறனும் மக்களவையில் சுட்டிக்காட்டினார். மேலும் அவர் தனியார் நிறுவனங்களுக்கு அரசு ஆதரவாக செயல்படுவதாக பிரதமர் மோடி மீது குற்றம்சாட்டியதால் பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

 கேள்வி நேரத்தின்போது தயாநிதி

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது தயாநிதி மாறன் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் 4ஜி, 5ஜி சேவைகளை வழங்க முடியும் என முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் உறுதி அளித்திருந்தார். ஆனால் இதுவரை 4ஜி சேவை கூட வழங்கப்பட வில்லை. இதனால் பிஎஸ்என்எல் பயன்பாட்டாளர்கள் ஜியோவுக்கு மாறி வருகிறார்கள். அந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் பிரதமரின் புகைப்படமே வெளியிடப்பட்டது என்றார். இதற்கு பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து, இந்த குற்றச்சாட்டு தவறானது என்றனர்.

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

இறுதியில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலையிட்டு மத்திய அமைச்சர் தெரிவித்த வார்த்தை அவைக் குறிப்பில் இடம்பெறாது என்று கூறி கேள்வி நேரம் என்பதால் உறுப்பினர்கள் குற்றம்சுமத்தாமல் தங்களது தொகுதி தொடர்பான விவகாரங்களை எழுப்பவேண்டும் என்றார். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் குறைந்த விலை திட்டங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.75 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.75 திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.75 திட்டம் ஆனது 100 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால் நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் மொத்தமாக2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் ரூ.75 திட்டத்தில் 50 நாட்கள் வேலிடிட்டி உடன் இலவச ரிங்டோன்களும் வழங்கப்படுகின்றனஎன்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம் 75 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் பயனர்கள் 60 நாட்களுக்கு இலவச காலர் ட்யூன் சேவையை பெறமுடியும் என்று கூறப்படுகிறது. அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தமாக 3ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு இது டெய்லி லிமிட் எதுவும் இல்லாமல் வருகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் 75 நாட்களில் எப்போது வேண்டுமானதும் இந்த டேட்டாவை பயன்படுத்த முடியும். இதுதவிர பிஎஸ்என்எல் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம்ஆனது 100 நிமிட வாய்ஸ் கால் நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த 100 நிமிடங்களை பிஎஸ்என்எல் நெட்வொர்க் மற்றும் நாட்டில் உள்ள வேறு ஏதேனும் நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் ஒருவருடன் பேசும்போது பயன்படுத்திக்கொள்ளலாம். பின்பு இது காலாவதியானபிறகு வாடிக்கையாளர்கள் நிமிடத்திற்கு 30 பைசா என்கிற கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 50ஜிபி டேட்டா நன்மயை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இந்த டேட்டா உபயோகத்திற்கு தினசரி வரம்பு இல்லை. இருப்பினும், 50ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பின்னர், இணைய
வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறையும்.

பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டத்தின் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள்இந்ததிட்டத்தில் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.97 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.97 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் STV_97 என்று அழைக்கப்படும் ரூ.97 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை கிடைக்கும். ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.97 ப்ரீபெய்ட் திட்டத்தில் எஸ்எம்எஸ் நன்மைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 22 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ118 ப்ரிபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ118 ப்ரிபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.118 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு தினசரி 0.5 டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 26 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மை, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை எனப் பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் வேலிடிட்டி 28 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

News Source: telecomtalk.info

Best Mobiles in India

English summary
Why BSNL not offering 4G service yet? DMK MP questioned in Parliament!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X