Jio, Airtel-க்கு சைலன்ட் ஸ்கெட்ச்.. BSNL 5G லேட் ஆவதற்கு பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்!
இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெலிகாம் ஆபரேட்டர் ஆன பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஆனது அதன் 5ஜி சேவை அறிமுகத்தில் ஒப்பீட்டளவில் மிகவும் தாமதமாக உள்ளது; பின்தங்கி உள்ளது என்பதை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
மாதங்கள் அல்ல, வருடங்கள் பின்தள்ளி உள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Jio) மற்றும் சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் (Airtel) ஆகியவைகளின் 5ஜி அறிமுகத்தோடு ஒப்பிடும் போது பிஎஸ்என்எல் 5ஜி அறிமுகம் ஆனது பல ஆண்டுகள் தாமதமாகி வருகிறது.

கசப்பான உண்மை என்னவென்றால் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 5ஜி (BSNL 5G) சேவையை அறிமுகப்படுத்துவதற்கான தெளிவான காலக்கெடு எதையும் கொண்டிருக்கவில்லை. இன்னொரு உண்மை என்னவென்றால் 5ஜி சேவையைப் பொறுத்தவரை, பயனர்கள் இங்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் அனால் அது ஒரு பிரச்சனையே இல்லை. ஏன் தெரியுமா?
ஏனென்றால் பிஎஸ்என்எல், நாடு முழுவதும் 97,000க்கும் மேற்பட்ட தளங்களில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் வரும் மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் மேலும் பலவற்றை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பிஎஸ்என்எல் 4ஜி நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே போகிறது. இதற்கு நேர் மாறாக தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் (ஜியோ, ஏர்டெல்) தங்கள் 4ஜி திட்டங்களின் விலையை அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், மலிவு விலையிலான 4ஜி திட்டங்களுடன் கட்டணங்களுடன், டெலிகாம் மார்க்கெட்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இந்தியாவில் பணிபுரியும் பெரும்பாலான தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களுக்கு 5ஜி மொபைல் நெட்வொர்க்குகள் இன்னும் அவசியம் ஆகிவில்லை.
இந்த இடத்தில் தான் - பிஎஸ்என்எல் நிறுவனத்தால் புதிய பயனர்களை சேர்க்க முடியும்; சேர்த்து கொண்டும் வருகிறது. இதன் மூலம் பிஎஸ்என்எல்-ன் ஒட்டுமொத்த சந்தாதாரர் தளம் மட்டுமல்ல, ஆக்டிவ் ஆக உள்ள பயனர்கள் தளமும் வளரும். இந்த விஷயத்தில் தான் வோடபோன் ஐடியா திணறி வருகிர்து என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இதோடு 5ஜி சேவைக்கான செயல்பாட்டு செலவு (ஒபெக்ஸ்) மாடலில் பிஎஸ்என்எல் நிறுவனமானது 5ஜி எஸ்ஏ சேவையை பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே உள்ள 4ஜி தளங்களில் வெறுமனே ஒரு மென்பொருள் உந்துதலுடன் அவைகளை 5ஜி-க்கு மேம்படுத்தலாம். மேலும் தேஜாஸ் நெட்வொர்க்குகளால் வழங்கப்படும் தொலைத்தொடர்பு உபகரணங்கள் 5ஜி ரெடியாக உள்ளன.
இதன் பொருள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை போலவே, பிஎஸ்என்எல் நிறுவனமும் ஆரம்பத்தில் பயனர்களுக்கு 5ஜி என்எஸ்ஏ-வை வழங்க முடியும். பின்னர், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் 5ஜி எஸ்ஏ-வை விரிவுபடுத்துவதில் நிறுவனம் பணியாற்ற முடியும். இருப்பினும் இப்போதைக்கு பிஎஸ்என்எல்-ன் முன்னுரிமை 4ஜி ஆகவே இருக்க வேண்டும். அதுதான் உண்மையான மாஸ்டர் பிளான் ஆக இருக்க முடியும்.
பிஎஸ்என்எல் நிறுவனமானது, இந்தியா முழுவதும் அதன் 4ஜி சேவையை இன்னும் விரிவுபடுத்தும் என்றும், இந்த 4ஜி நெட்வொர்க் விரிவாக்கம் நிதியாண்டு 27 இல் தொடரும் என்று பிஎஸ்என்எல்-ன் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராபர்ட் ஜே ரவி உறுதிப்படுத்தி உள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது மேலும் 20,000 தளங்களுக்கான ஆர்டர்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. கூடவே டெல்லி மற்றும் மும்பையில் ஓபெக்ஸ் மாதிரியில் 5ஜி எஸ்ஏ (ஸ்டேன்ட் அலோன்) சேவையை அறிமுகப்படுத்தவும் பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆர்டர்களை நிச்சயமாக, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) மட்டுமே செயல்படுத்தும். தற்போது, பிஎஸ்என்எல் முதலில் 4ஜி-ஐ விரிவுபடுத்த பார்க்கிறது, இதன் மூலம் விரைவில் அதிக பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களைச் சேர்க்க முடியும்.


Click it and Unblock the Notifications








