Home
News

வருந்தினேன்.. திருந்தினேன்.. iOS 19 க்கு பதிலாக ஒரே அடியாக iOS 26 க்கு ஜம்ப் அடித்த Apple நிறுவனம்.. ஏன்?

ஆப்பிள் (Apple) நிறுவனம் சில பெரிய பெரிய "வேலைகளை" அல்லது "மாற்றங்களை" செய்கிறது. ஆப்பிள் நிறுவனம் அதன் வருங்கால ஐபோன்களுக்கான 200எம்பி கேமரா சென்சாரை "டெஸ்ட்" செய்துவருவதாக தகவல் வெளியான வேகத்தில்.. ஆப்பிள் ஐஓஎஸ் (iOS) தொடர்பான முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் அதன் சாஃப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர்களுக்கு பெயரிடும் மரபுகள் எப்போதுமே பொருத்தம் இல்லாததாகவே இருக்கும். உதாரணமாக, 2024 இல் வெளியிடப்பட்ட ஐபோன் 16 மாடலை எடுத்துக்கொள்ளுங்கள், இது ஐஓஎஸ் 18 கொண்டு இயங்குகிறது. இது குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு பெயர் அமைப்பாகும்.

iOS 19 க்கு பதிலாக ஒரே அடியாக iOS 26 க்கு ஜம்ப் அடித்த Apple!

அதாவது ஐபோன் 16 மாடல் ஐஓஎஸ் 16 கொண்டு இயங்கும் என்பது போன்ற பெயர் அமைப்பு தான் மிகவும் எளிமையானதாக இருக்கும். ஆனால் ஆப்பிள் அப்படி ஒருபோதும் செய்வதில்லை. அதற்கு பெரிய காரணங்களும் இருப்பதாய் தெரியவில்லை. ஆனால் இந்த நடைமுறை விரைவில் மாறக்கூடும்; ஒருவழியாக ஆப்பிள் இதை சரிசெய்யக்கூடும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது

ப்ளூம்பெர்க்கின் (Bloomberg) சமீபத்திய அறிக்கையின்படி, ஆப்பிள் நிறுவனம் அதன் பாரம்பரிய எடிஷனை பின்பற்றுவதற்கு பதிலாக, அதன் ஆப்ரேட்டிங் சிஸ்டம்களை, அந்தந்த ஆண்டை அடிப்படையாக கொண்டு மறுபெயரிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 2025 ஆம் ஆண்டில் வெளியாகும் சாஃப்ட்வேர் ஐஓஎஸ் 19 ஆக இருக்காது - இது ஐஓஎஸ் 26 (iOS 26) என்று அழைக்கப்படும்.

ஐஓஎஸ் 19 ஆனது - இந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி நடைபெறும் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் ஆப்பிளின் இந்த தைரியமான முடிவு குறித்த தகவல் கிடைத்துள்ளது. எனவே நீங்கள் ஐஓஎஸ் 19-க்காக காத்திருந்தால் அதை மறந்துவிடுங்கள், அடுத்த ஐபோன் சாஃப்ட்வேர் ஆனது ஐஓஎஸ் 26 என்றே அழைக்கப்படும்.

மேலும் இது ஐபோன் மாடல்களுக்கு மட்டுமின்றி காலப்போக்கில் மற்ற ஆப்பிள் டிவைஸ்களுக்கும்பரவும். ஐஓஎஸ் 26-ஐ தொடர்ந்து ஐபேட் ஐஓஎஸ் 26 (iPadOS 26), மேக் ஓஎஸ் 26 (macOS 26), டிவி ஓஎஸ் 26 (tvOS 26), வாட்ச் ஓஎஸ் 26 (watchOS 26) மற்றும் விஷன் ஓஎஸ் 26 (visionOS 26) கூட அறிமுகம் செய்யப்படலாம்

ஆக ஐஓஎஸ் 19, மேக் ஓஎஸ் 16 மற்றும் வாட்ச் ஓஎஸ் 12 போன்ற பொருந்தாத எண்களின் குழப்பமான தொகுப்பை வைத்துக்கொண்டு நம்மை குழப்புவதற்கு பதிலாக, ஆப்பிள் ஒரு க்ளீன் ஆன, காலண்டர் அடிப்படையிலான பெயரிடும் அமைப்பை தேர்வு செய்துள்ளது. அதாவது இது கார் மாடல்களை போல் செயல்படும் 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நீங்கள் 2026 மாடலை வாங்கலாம். இதே லாஜிக்தான் ஐஓஎஸ் 26-இலும் இருக்கும்

ஆனால் இது வெறுமே "மறுபெயரிடுதலாக" மட்டும் இருக்காது. இந்த புதிய பெயர்கள் அற்புதமான டிசைன் சேன்ஜ் உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அனைத்து டிவைஸ்களிலும் விஷன்ஓஎஸ் மூலம் ஈர்க்கப்பட்ட ஒரு நேர்த்தியான, ஒருங்கிணைந்த தோற்றத்தை நாம் எதிர்பார்க்கலாம். அதாவது ஐபோன்கள், ஐபேட்கள், மேக் புக்குகள் மற்றும் உங்கள் ஆப்பிள் வாட்ச் கூட ஒரு டிஸ்பிளே க்ளோ-அப்பை பெறுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் முந்தைய ஆண்டுகளை போலவே, 2025 வருடாந்திர டெவலப்பர் மாநாடு கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க்கில் நடைபெறும், அதே நேரத்தில் உலகெங்கிலும் உள்ளவர்கள் இந்நிகழ்வை ஆன்லைன் வழியாக நேரலையில் பார்க்கலாம். டபுள்யூடபுள்யூடிசி 2025 நிகழ்வின் தேதிகள், நேரம் மற்றும் எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள் குறித்த விவரங்கள் இதோ:

டபுள்யூடபுள்யூடிசி 2025 ஆனது ஜூன் 9 முதல் ஜூன் 13 வரை கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பார்க்கில் நடைபெறும் என்று ஆப்பிள் அறிவித்து உள்ளது. ஜூன் 9 ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன டிம் குக் நடத்தும் ஒரு நேரடி முக்கிய அமர்வுடன் இந்நிகழ்வு தொடங்கும்.

டிம் குக்குன் முக்கிய உரைக்குப் பிறகு, மென்பொருள் மற்றும் தளங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை ஆழமாக ஆராய ஆப்பிள் ஒரு பிளாட்ஃபார்ம்ஸ் ஸ்டேட் ஆஃப் தி யூனியன் மாநாட்டை நடத்தும். இப்படியா டபுள்யூடபுள்யூடிசி 2025 ஆனது ஆப்பிள் நிபுணர்களுடன் 100க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப அமர்வுகளை நடத்தும். இதனால் டெவலப்பர்கள் சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டமைப்புகள் பற்றிய தகவல்களை பெற முடியும். டபுள்யூடபுள்யூடிசி 2025 மாநாட்டின் மிகப்பெரிய அறிவிப்புகள் மற்றும் சிறப்பம்சங்களை விவரிக்கும் வழிகாட்டிகள் மற்றும் ஆவணங்களையும் அவர்கள் அணுக முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Why Apple is Planning to Bring iOS 26 Instead of iOS 19 and What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X