Home
News

Airtel சலாம் ராக்கி பாய்.. 1 ரீசார்ஜ் 84 நாள் வேலிடிட்டி.. 300GB 5ஜி, டெய்லி 2.5GB 4ஜி, ரூ.17000 AI, ஓடிடி!

ஏர்டெல் (Airtel) நிறுவனத்திடம்.. 300 ஜிபி அளவிலான 5ஜி டேட்டா, டெய்லி 2.5 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, ரூ.17,000 மதிப்புள்ள ஏஐ சந்தா, ஓடிடி (OTT) என.. அள்ளி அள்ளி கொடுக்கும் நன்மைகளை கொண்ட ஒரு பெர்பெக்ட் ஆன எண்டர்டெயின்மெண்ட் + ப்ரொடெக்டிவிட்டி (Entertainment + Productivity) பிளான் உள்ளது.

அது பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1199 மதிப்புள்ள ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs.1199 Prepaid Plan) ஆகும். இது ஏன் விலையை மீறிய நன்மைகளை வழங்கும் ஏர்டெல்லின் ஒரு பெஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் + ப்ரொடெக்டிவிட்டி பிளான் என்றால் - இது அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்குகிறது.

Airtel: 300GB 5ஜி.. டெய்லி 2.5GB 4ஜி.. ரூ.17,000 AI சந்தா இலவசம்!

அதாவது இது ஏற்கனவே ஏராளமான டெய்லி 4ஜி டேட்டாவுடன் சேர்த்து அதிவேக 5ஜி இண்டர்நெட் அணுகலையும் வழங்குகிறது. இங்கே அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) என்பது உண்மையில் வரம்பற்றது அல்ல, இது 300 ஜிபி என்கிற வரம்பிற்கு உட்பட்டது.

ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் முழுமையான நன்மைகள்: இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 2.5 ஜிபி டெய்லி டேட்டாவுடன் வருகிறது. மேலே குறிப்பிட்டுள்ளபடி இது வரம்பற்ற 5ஜி உடன் வருகிறது. இது தவிர ஓடிடி நன்மைகளும் உள்ளன.

ஓடிடி நன்மைகளில் அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite), ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) ஆகியவைகள் கிடைக்கும். இதோடு இலவச ரிவார்ட்ஸ்மினி (RewardsMini)சந்தா, இலவச ஹலோட்யூன்ஸ் (Hellotunes) மற்றும் இலவச பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) சந்தா ஆகியவைகளும் கிடைக்கும்.

அறியாதோர்களுக்கு பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ ஏஐ சந்தாவானது ரூ.17,000 மதிப்புடையது மற்றும் இது ஒரு வருடம் முழுவதும் கூடுதல் கட்டணம் இல்லாமல் ரூ.1199 திட்டத்தின் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 84 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. சிலருக்கு இது ஒப்பீட்டளவில் குறைவான வேலிடிட்டி உடனே வரும் திடமாக தெரியலாம்.

ஆனால் 4ஜி டேட்டா, 5ஜி டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ், ஓடிடி, 1 ஆண்டு முழுவதுமான பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ ஏஐ சந்தா ஆகிய நன்மைகளை வழங்வதால், தற்போதைய டெலிகாம் சந்தை நிலவரங்களின்படி - 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியை நியாயப்படுத்தும் நன்மைகளையே வழங்குகிறது.

ஏனென்றால் விரைவில் ஏர்டெல்லில் 10% ரீசார்ஜ் கட்டண விலை உயர்வும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்.இன் தளத்தின் சமீபத்திய அறிக்கையின் படி, புரோக்கரேஜ் நிறுவனமான ஆக்சிஸ் கேபிடல் (Axis Capital) மற்றும் ஆய்வாளர் கௌரவ் மல்ஹோத்ரா (Gaurav Malhotra) ஆகியோர்கள் - டிசம்பர் 2025 முதல் ஜூன் 2026 க்குள் ரீசார்ஜ் கட்டண உயர்வு அமலுக்கு வரலாம் என்று கணித்துள்ளனர்.

மேலும் கம்யூனிகேஷன்ஸ் டுடேவின் (Communications Today) அறிக்கையின் படி, ஜேபி மோர்கனின் (JP Morgan) கூற்றுப்படி, ஜியோவின் ஐபிஓவுக்கு முன் ஒரு மூலோபாய நடவடிக்கையாக 15% வரை சாத்தியமான விலை உயர்வு அமலுக்கு வரலாம். மேலும் கடந்த கால போக்குகளை கருத்தில் கொண்டு, சந்தேகத்திற்கு இடமின்றி ஜியோவை தொடர்ந்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் விலை உயர்வை பின்பற்றும்.

இது செயல்படுத்தப்பட்டால், 2024 க்கு பிறகு, டெலிகாம் சந்தைக்கு வரும் முதல் நேரடி விலை உயர்வாக இது இருக்கும். மேலும் டெலிகாம் நிறுவனங்களானது ஏஆர்பியு (ARPU) என்கிற ஒரு பயனருக்கு சராசரி வருவாயை (ARPU) அதிகரிப்பதற்கான திட்டங்களை வெளிப்படையாக அறிவிக்காமல், மறு மதிப்பீடு செய்யும் நேரத்தில் இந்த விலை உயர்வு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Why Airtel Rs 1199 Prepaid Plan is Best Option For Entertainment and Productivity Lovers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X