என்ன தான் 5G கெத்துனு சொன்னாலும்.. பந்தயத்துல ஜெயிக்கிறது குதிரை 4G தான்.! ஏன் தெரியுமா?

|

இப்போது இந்தியா முழுக்க எங்கு திரும்பினாலும் 5ஜி (5G) நெட்வொர்க்கை பற்றித் தான் பேச்சாக இருக்கிறது. "இது தான் புதிய தலைமுறை நெட்வொர்க்".. "இதோட ஸ்பீடுக்கு ஈடு இணையே இல்லை".. "உன் டவுன்லோட் ஸ்பீடுக்கும் என் டவுன்லோட் ஸ்பீடுக்கும் ஜோடி போடுவோமா? ஜோடி.!" என்ற கலர் கலரா ரீல் விட்டாலும், 5ஜி பெஸ்ட்டா இல்ல 4ஜி பெஸ்ட்டா? என்று கேட்டால் இறுதியில் 4ஜி தான் ஜெயிக்கிறது.

5ஜி-க்கும் 4ஜி-க்கும் போட்டி வைத்தால் 4ஜி ஜெய்கிறதா.!

5ஜி-க்கும் 4ஜி-க்கும் போட்டி வைத்தால் 4ஜி ஜெய்கிறதா.!

எது, 4ஜி நெட்வொர்க்கிற்கும் 5ஜி நெட்வொர்க்கிற்கும் போட்டி வைத்தால் 4ஜி ஜெய்கிறதா.! என்னப்பா சொல்றீங்க, நம்புகிற மாதிரி இல்லையே என்று நீங்கள் நினைப்பது எங்களுக்கு இங்கு வரை கேட்கிறது. 4ஜி மற்றும் 5ஜி இடையிலான போட்டியில், பந்தயம் கட்ட வேண்டும் என்று கூறினால், டெலிகாம் நிறுவனங்களே 4ஜி மீது தான் அதன் முழு நம்பிக்கையும் வைக்கிறது.

ஏன், 4ஜி ஜெயிக்கும் என்று டெலிகாம் நிறுவனங்களே நம்புகின்றன

ஏன், 4ஜி ஜெயிக்கும் என்று டெலிகாம் நிறுவனங்களே நம்புகின்றன

இதை நாங்கள் சொல்லவில்லை, இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தில் தலைமை பொறுப்பில் இருக்கும் நபரே சமீபத்தில் நடந்த ஒரு கலந்துரையாடலில் தெரிவித்திருக்கிறார். ஏன், 4ஜி ஜெயிக்கும் என்று டெலிகாம் நிறுவனங்களே நம்புகின்றன, அதற்குப் பின்னால் என்ன காரணம் இருக்கிறது என்று விரிவாகப் பார்க்கலாம் வாங்க. சரி, உங்க பந்தயம் எதன் மீது என்று ஒரு விருப்பத்தை லாக் செய்யுங்கள்.

BSNL, Airtel, Jio, Vi மக்களே: இது தெரியலனா நீங்க அதிகமா வீண் செலவு பண்ணுறீங்கனு அர்த்தம்.!BSNL, Airtel, Jio, Vi மக்களே: இது தெரியலனா நீங்க அதிகமா வீண் செலவு பண்ணுறீங்கனு அர்த்தம்.!

5ஜி பற்றிய ஓவர் பேச்சு எல்லாம் கொஞ்சம் அடங்கட்டும்.!

5ஜி பற்றிய ஓவர் பேச்சு எல்லாம் கொஞ்சம் அடங்கட்டும்.!

5ஜி தான் அடுத்த தலைமுறை நெட்வொர்க் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அதற்காக 5ஜி தான் பெஸ்ட் என்று சொல்லும் கதை எல்லாம் கொஞ்சம் ஓவர் பேச்சு தான். 5G என்பது பலரின் வாழ்க்கையை மாற்றும் தொழில்நுட்பமாக வருங்காலத்தில் இருக்கப் போகிறது. இது வெறும் துவக்கம் தான். டெலிகாம் துறைக்குள் 5ஜி செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் ஏராளமாக இருக்கிறது.

Samsung செய்த சத்தியம்.! சாம்சங் ஸ்மார்ட்போன் பயனர்கள் குஷி.! இனி எல்லாமே சூப்பர் பாஸ்ட் தான்.!Samsung செய்த சத்தியம்.! சாம்சங் ஸ்மார்ட்போன் பயனர்கள் குஷி.! இனி எல்லாமே சூப்பர் பாஸ்ட் தான்.!

4ஜி பெருசா இல்லை 5ஜி பெருசா? உண்மை என்ன?

4ஜி பெருசா இல்லை 5ஜி பெருசா? உண்மை என்ன?

நிறுவன இடமாக இருந்தாலும் சரி அல்லது சில்லறை நுகர்வோர் இடமாக இருந்தாலும் சரி, 5G ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. COAI இன் DG (இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம்) SP கோச்சார், சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு கலந்துரையாடலில் இது பற்றி தெளிவாகக் கூறியுள்ளார். மக்கள் 3G இல் இருந்து 4G நெட்வொர்க்கிற்கு மாறியது வெறும் மேம்படுத்தலாக இருந்தது.

300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?

5G நெட்வொர்க்கிற்கு மாற இவ்வளவு வேலைகளை நாம் செய்ய வேண்டுமா?

5G நெட்வொர்க்கிற்கு மாற இவ்வளவு வேலைகளை நாம் செய்ய வேண்டுமா?

ஆனால் 4G இல் இருந்து 5G-க்கு மாற மக்கள் தொழில்நுட்பங்களின் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. இப்போது, ​​இது சிந்திக்க வேண்டிய ஒன்று. 5G நுகர்வோருக்கு மிகப்பெரிய மாற்றத்தை தொழில்நுட்பத்தின் மூலமாகவும், கேஜெட்டுகள், நெட்வொர்க்குகள் மற்றும் தயாரிப்புகளின் மூலமாகவும் மாற்றம் பெற வேண்டியதுள்ளது. அதற்கு பிறகு தான் பயன்படுத்த கிடைக்கிறது.

டெல்லியை வளைத்து பிடித்த Jio 5G.! இப்போ இலவசமா அன்லிமிடெட் 5ஜி.! ஒரு ரூபா கூட வேண்டாம்.!டெல்லியை வளைத்து பிடித்த Jio 5G.! இப்போ இலவசமா அன்லிமிடெட் 5ஜி.! ஒரு ரூபா கூட வேண்டாம்.!

டெலிகாம் நிறுவனங்களுக்கு 5ஜி நஷ்டத்தை தருகிறதா?

டெலிகாம் நிறுவனங்களுக்கு 5ஜி நஷ்டத்தை தருகிறதா?

5G நெட்வொர்க்கை சரியான முறையில் ஒருங்கிணைத்து, அதிலிருந்து சிறந்த பலனைப் பெற வேண்டும் என்றால் ஹார்ட்வெர் மாற்றங்கள் மற்றும் சாப்ட்வேர் மாற்றங்கள் இரண்டையும் நாம் மேற்கொள்ள வேண்டியதுள்ளது. இது தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் பெரியளவு தொகையைச் செலவு செய்ய வைக்கிறது. இருப்பினும் ஏன் இந்த போட்டி என்று கேட்க்கும் போது, "இது தான் சார் வியாபாரம்" என்ற விடை கிடைக்கிறது.

உங்க Smart TV-ல அமேசான் பிரைம் பயன்படுத்துவது எப்படி? பெரிய ஸ்கிரீனில் பிரைம் யூஸ் பண்ணுங்க.!உங்க Smart TV-ல அமேசான் பிரைம் பயன்படுத்துவது எப்படி? பெரிய ஸ்கிரீனில் பிரைம் யூஸ் பண்ணுங்க.!

லாபம் இல்லாமல் ஏன் இந்த 5ஜி போட்டி?

லாபம் இல்லாமல் ஏன் இந்த 5ஜி போட்டி?

5ஜி அறிமுகம் உடனடியாக குறிப்பிடத்தக்க வருமானத்தைத் தரப்போவதில்லை. இது இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் நன்றாகத் தெரியும். இருப்பினும், போட்டியின் காரணமாக நிறுவனங்கள் இதைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது என்பதே உண்மை. ஒரு நிறுவனம் மட்டும் 5ஜி அறிமுகம் செய்து மற்றொரு போட்டியாளர் இதைச் செய்யவில்லை என்றால் என்னவாகும்?

13 ஆம் நம்பர் அவ்வளவு மோசமானதா? Xiaomi கூட ஒதுக்கிடுச்சு.! அடுத்த போன் பெயர் என்ன தெரியுமா?13 ஆம் நம்பர் அவ்வளவு மோசமானதா? Xiaomi கூட ஒதுக்கிடுச்சு.! அடுத்த போன் பெயர் என்ன தெரியுமா?

லாபம் தரக்கூடிய ரேஸ் குதிரையே 4ஜி தானா? எப்படி?

லாபம் தரக்கூடிய ரேஸ் குதிரையே 4ஜி தானா? எப்படி?

மார்க்கெட்டிங் கண்ணோட்டத்தில் இதைப் பார்த்தால், இது ஒரு மிகப்பெரிய பின்னடைவாக முடிந்துவிடும். இதனால், தான் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்களும் 5ஜி அறிமுகத்துடன் போட்டியிடும் போது கூட, அதன் 4ஜி நெட்வொர்க்குகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. உண்மையைச் சொல்லப் போனால், இந்த நிறுவனங்களுக்கு வருமானத்தைஈட்டு கொடுக்கும் ரேஸ் குதிரையாக 4ஜி தான் செயல்படுகிறது.

Jio அறிமுகம் செய்த 5 புது பிளான்.! Jio அறிமுகம் செய்த 5 புது பிளான்.! "இதை" ரீசார்ஜ் செய்ய ஒரு தனி கெத்து வேணும்.!

எப்படி பார்த்தாலும் 4ஜி தான் இறுதியில் கெத்தாக நிற்கிறது

எப்படி பார்த்தாலும் 4ஜி தான் இறுதியில் கெத்தாக நிற்கிறது

டெலெகாம் நிறுவனத்திற்குத் தேவையான ஒட்டுமொத்த பெருந்தொகையையும் 4ஜி தான் ஈட்டு தருகிறது. இதனால் தான் டெலிகாம் நிறுவனங்கள் கூட, பந்தயம் என்று வந்தால், அவர்களுடைய முழு மனதோடும், நம்பிக்கையோடும் 4ஜி மேல் பந்தயம் வைப்பார்கள் என்று கூறப்படுகிறது. 4G தான் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும், நுகர்வோருக்கும் வேலைக் குதிரையாகச் செயல்படப்போகிறது என்பதை நாம் இதன் மூலம் புரிந்துகொள்ள வேண்டும். இறுதியில் 4ஜி தான் கெத்தாக நிற்கிறது.

ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!

5ஜி பயனர்கள் கூட இறுதியில் 4ஜி நெட்வொர்க்கிற்கு தான் வரப்போகிறார்கள்.. ஏன் தெரியுமா?

5ஜி பயனர்கள் கூட இறுதியில் 4ஜி நெட்வொர்க்கிற்கு தான் வரப்போகிறார்கள்.. ஏன் தெரியுமா?

4G நெட்வொர்க்குகளில் அதிக திறமையான டேட்டா நுகர்வுடன் இயங்கக்கூடிய அப்ளிகேஷன்களில் வேகமாக செயல்படுகிறது. குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டாவை வழங்குவதால் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் 4G உடன் ஒட்டிக்கொள்ளப் போகிறார்கள் என்பதே உண்மை. மறுபக்கம், 5ஜி தேவைப்படும் மக்கள் அதிக காசு கொடுத்து ஒரு குறிப்பிட்ட அளவு டேட்டாவை வாங்கி வேகமாகத் தீர்த்துமுடித்துவிட்டு, மீண்டும் 4ஜி இல் அவர்களுடைய அனுபவத்தைத் தொடரப் போகிறார்கள் என்பதே நடைமுறையாகஇருக்கப் போகிறது.

Best Mobiles in India

English summary
Why 4G Wins The Race When Compared With 5G This Again Proves Slow Steady Always Wins the Race

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X