5G வருமா.. வராதா? நம்பினாலும் நம்பவில்லை என்றாலும் "இது" தான் உண்மை!

|

தற்போது நாட்டில் 5ஜி சேவை எப்போது அறிமுகம் செய்யப்படுமா? அல்லது 5ஜி சேவை அறிமுகமாக இன்னும் சில காலம் ஆகுமா என்பது தான் மக்களின் கேள்வியாக உள்ளது.

இந்தியாவில் 5ஜி சேவை எப்போது அறிமுகமாகும்

இந்தியாவில் 5ஜி சேவை எப்போது அறிமுகமாகும்

அதேபோல் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களில் எந்த நிறுவனம் முதலில் 5ஜி சேவை அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் இந்த கேள்விகளுக்கு தற்போது திட்டவட்டமாக பதில் இல்லை என்றாலும் ஒரு சில விவரங்கள் தெரியவந்துள்ளன.

இந்த ஆண்டு (2022) இறுதிக்குள் 5ஜி சேவை அறிமுகமாகும் என்று தொலைத்தொடர்பு துறை முன்பு கூறியது.

மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் ஏற்கனவே தெரிவித்த தகவலின்படி, இந்த ஆண்டு 5ஜி சேவை துவங்கப்படும். பின்பு இந்த 5ஜி சேவையை வரும் 2023 மார்ச்-இல்முழுமையாக பயன்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்: 150 நாட்கள் வேலிடிட்டி.! என்னென்ன நன்மைகள்?பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்: 150 நாட்கள் வேலிடிட்டி.! என்னென்ன நன்மைகள்?

 5ஜி தொழில்நுட்பம்

5ஜி தொழில்நுட்பம்

குறிப்பாக இந்தியாவின் தொழில்நுட்பத்தில் 5ஜி தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார் அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் .

மேலும் இது பிரதமரின் கனவு, அவர் நம் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி, 5ஜி தொழில்நுட்பம் புழக்கத்துக்கு வரவேண்டும் என்று விரும்பினார்.பின்பு இந்த தொழில்நுட்ப புரட்சிகளைக் கொண்டு நாம் உலகை வெல்ல வேண்டும் என்றார் அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ்.

51வினாடியில் கூகுளை ஹேக் செய்தவருக்கு ரூ.3கோடி சம்பளத்தில் வேலை-பரவிய வதந்தி., இதுமட்டுமே உண்மை: இளைஞர் பதில்!51வினாடியில் கூகுளை ஹேக் செய்தவருக்கு ரூ.3கோடி சம்பளத்தில் வேலை-பரவிய வதந்தி., இதுமட்டுமே உண்மை: இளைஞர் பதில்!

13 இந்திய நகரங்கள்

13 இந்திய நகரங்கள்

அதேபோல் டெல்லி, குருகிராம், பெங்களூரு, கொல்கத்தா, சண்டிகர், ஜாம்நகர், அகமதாபாத், சென்னை, ஹைதராபாத், லக்னோ, புனே மற்றும் காந்திநகர் உள்ளிட்ட 13 இந்திய நகரங்களில் முதலில் 5ஜி சேவை தொடங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணா முதல் சிம்ரன் வரை- உங்க பெயரும் லிஸ்டில் இருக்கலாம்: வீக்கான பாஸ்வேர்ட்கள் பட்டியல் வெளியீடு!கிருஷ்ணா முதல் சிம்ரன் வரை- உங்க பெயரும் லிஸ்டில் இருக்கலாம்: வீக்கான பாஸ்வேர்ட்கள் பட்டியல் வெளியீடு!

5ஜி சோதனை

5ஜி சோதனை

கடந்த 2021-ம் ஆண்டு முதல் வோடபோன் ஐடியா, ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல தனியார் நிறுவனங்களுடன் இணைந்து 5ஜி சோதனைகளை நடத்தின.

பின்பு இந்நிறுவனங்கள் ஏற்கனவே டெல்லி, குருகிராம், பெங்களூரு, கொல்கத்தா, சண்டிகர், ஜாம்நகர், அகமதாபாத், சென்னை, ஹைதராபாத், லக்னோ, புனே மற்றும் காந்திநகர் ஆகிய இடங்களில் 5ஜி சோதனை தளங்களை அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.8000-க்கு கீழ் அட்டகாச ஸ்மார்ட்போன்கள் பட்டியல்- 6000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு10 ஆதரவு: அமேசான் சலுகை!ரூ.8000-க்கு கீழ் அட்டகாச ஸ்மார்ட்போன்கள் பட்டியல்- 6000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு10 ஆதரவு: அமேசான் சலுகை!

ஜியோ, ஏர்டெல், விஐ- யார் முதலில் 5ஜி சேவையை தொடங்குவார்கள்

ஜியோ, ஏர்டெல், விஐ- யார் முதலில் 5ஜி சேவையை தொடங்குவார்கள்

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களில் எது முதலில் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்யும் என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் இந்த மூன்று நிறுவனங்களும் ஒரே நேரத்தில் சேவைகளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது இந்த மூன்று நிறுவனங்களும் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 5ஜி சோதனை நடத்தி வருகின்றன. எனவே ஒரே நேரத்தில் இந்நிறுவனங்கள் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளது.

மாதம் வெறும் ரூ.125 விலையில் 12 'OTT சந்தா' வாங்கலாமா? ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?மாதம் வெறும் ரூ.125 விலையில் 12 'OTT சந்தா' வாங்கலாமா? ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

ஜியோ VS ஏர்டெல்

ஜியோ VS ஏர்டெல்

ஏற்கனவே ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி நெட்வொர்க் தயாராகிவிட்டதாகவும், ஏலம் முடிந்தவுடன் விரைவில் வெளியிடப்படும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார் மிட்டல்.

மறுபுறம், நாடு முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களுக்கு 5ஜி கவரேஜ் திட்டத்தை முடித்துள்ளதாக ஜியோ நிறுவனமும் கூறியுள்ளது. எனவே இந்த தனியார் நிறுவனங்கள் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

காலாவதியாகும் ஐஎஸ்எஸ்- பசிபிக் கடலில் மூழகப் போகும் சர்வதேச விண்வெளி மையம்: 2030-ல் நாசாவின் திட்டம்!காலாவதியாகும் ஐஎஸ்எஸ்- பசிபிக் கடலில் மூழகப் போகும் சர்வதேச விண்வெளி மையம்: 2030-ல் நாசாவின் திட்டம்!

 5ஜி ஏலம்

5ஜி ஏலம்

அதேபோல் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. ஏலம் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் முதல் நாளில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடிக்கு ஏலம் போனது. பின்பு நேற்றைய 2-வது நாளில் நாளில் 4 ஆயிரம் கோடிக்கு ஏலம் போனதாக தகவல்கள் வெளிவந்தன.

எனவே முதல் இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.1,49,454 கோடி அளவுக்கு ஏலம் போயுள்ளது. பின்பு 3வது நாளாக இன்றும் ஏலம் தொடர உள்ள நிலையில் இன்றைய முடிவில் ஏலத் தொகை எவ்வளவு என்பதை காத்திருந்து பார்ப்போம்.

டெலிகிராம் புதிய அப்டேட்: அட்டகாசமான அம்சங்களுடன் வெளியான வெர்ஷன் 8.5! முழு விவரம்.!டெலிகிராம் புதிய அப்டேட்: அட்டகாசமான அம்சங்களுடன் வெளியான வெர்ஷன் 8.5! முழு விவரம்.!

 பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல்

தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய தயாராகி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவை அறிமுகம் செய்ய உள்ளது. ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி, அடுத்த ஆண்டு துவக்கத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்றுகூறப்பட்டுள்ளது.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவையும் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Who will be the First Telecom company to introduce 5G Service in India Jio Airtel or Vodafone Idea: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X