எங்கு பார்த்தாலும் TTF, யாருயா இவரு? நேரில் குவிந்த 1000 கணக்கான ரசிகர்கள்!

|

ஒருவரின் வாழ்க்கையில் புகழும் வளர்ச்சியும் கிடைப்பது சர்வ சாதாரணம் அல்ல. அனைவருக்கும் அறிந்த பிரபலங்களாக மாறுவதற்கு ஒவ்வொருவரும் எடுக்கும் முயற்சி என்பது அவ்வளவு எளிதல்ல. இந்த காலக்கட்டத்தில் சமூகவலைதளம் என்பது பிரதான பயன்பாடாக மாறி இருக்கிறது. இதன் மூலம் பிரபலமடைவர்களும் ஏராளம். அதன்படியான ஒருவரை தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

யார் இந்த TTF?

யார் இந்த TTF?

சினிமா நடிகர், நடிகைகளுக்கு இணையான புகழை யூடியூபர்கள் பெற்று வருகின்றனர். இப்படியான புகழை தான் TTF வாசன் என்ற கோவையை சேர்ந்த இளைஞர் பெற்றிருக்கிறார். 90ஸ் கிட்ஸ்களுக்கு TTF என்ற வார்த்தை புதிதாக இருக்கும். இப்படி ஒரு வார்த்தையை கேள்விக்கூட பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் 2K கிட்ஸ்களிடம் மிகவும் பிரபலமடைந்த வார்த்தை TTF. யூடியூப்பில் அதிக பின்தொடர்பவர்கள் இவருக்கு இருந்தாலும் இவரது பிறந்தநாள் விழாவிற்கு பிறகு மிகவும் டிரெண்டிங்காக இருக்கிறார்.

ஆர்வத்தை ஈர்க்கும் யூடியூப் வீடியோக்கள்

ஆர்வத்தை ஈர்க்கும் யூடியூப் வீடியோக்கள்

யூடியூப்பில் சேனல் ஆரம்பித்து அதை நல்ல முறையில் பயன்படுத்தி பலரும் பிரபலமடைந்து பணம் சம்பாதித்து வருகின்றனர். மேக்-அப் அலங்கார பயிற்சிகள், சமையல், மூவிஸ் ரிவ்யூ, பயணம், அன்பாக்சிங் வீடியோக்கள் என பல ஆக்கப்பூர்வமான வீடியோக்கள் பார்வையாளர்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

டிராவல் Vlog வீடியோ பதிவிடும் TTF வாசன்

டிராவல் Vlog வீடியோ பதிவிடும் TTF வாசன்

யூடியூப் சேனலில் தொடர்ந்து டிராவல் Vlog வீடியோ பதிவிட்ட TTF வாசன் இன்று இணையத்தில் மிகவும் பிரபலமாக இருக்கிறார். TTF வாசன் கோயம்புத்தூரை சேர்ந்தவர். 23 வயதான இவர் யூடியூப்பில் 2020 இல் Twin Throttlers என்ற யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் சில நூறு சப்ஸ்க்ரைபர்கள் மட்டுமே இருந்த நிலையில் சில மாதங்களிலேயே அவரது சந்தாதாரர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது. தற்போது அவரது Twin Throttlers யூடியூப் சேனலில் 2.74 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் இருக்கின்றனர்.

2K கிட்ஸ்களிடம் அமோக வரவேற்பு

2K கிட்ஸ்களிடம் அமோக வரவேற்பு

டிடிஎஃப் வாசனின் Twin Throttlers சேனலில் வெளியிட்ட ஒரு குறிப்பிட்ட வீடியோ மில்லியன் கணக்கான விருப்பங்களை பெற்றிருக்கிறது. அது டிடிஎஃப் வாசன் கோயம்புத்தூரில் இருந்து லடாக் வரை பயணித்த டிராவல் வ்லாக் வீடியோ ஆகும். டிடிஎஃப் வாசன் வெளியிட்ட வீடியோவில் அதிவேகமாக பைக் ஓட்டுவார், அதேபோல் பைக்கில் பல அசாத்திய சாகசங்களை செய்வார். இது பெரும்பாலான 2K கிட்ஸ்களின் வரவேற்பை பெற்றது.

சூப்பர் பைக் வாங்கிய டிடிஎஃப்

சூப்பர் பைக் வாங்கிய டிடிஎஃப்

ஆரம்பத்தில் பழைய என்ஃபீல்ட் வாகனத்துடன் பயணத்தை தொடங்கிய டிடிஎஃப் வாசன் தற்போது பல சூப்பர் பைக்குகளை வைத்திருக்கிறார் என கூறப்படுகிறது. இந்த பைக்குகள் மூலம் பயணம் செய்து பல ரசிகர்களை சம்பாதித்ததோடு அதை யூடியூப்பில் வீடியோவாக வெளியிட்டு நிறைய பணமும் ஈட்டி இருக்கிறார்.

குவிந்த ரசிகர்கள் கூட்டம்

குவிந்த ரசிகர்கள் கூட்டம்

இந்த நிலையில் சமீபத்தில் டிடிஎஃப் வாசன் தனது பிறந்தநாள் கொண்டாடினார். இதற்காக ஒரு மீட்-அப் ரெடி செய்திருந்தார். இந்த மீட்-அப்பில் அவரை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். இவரை காண திரண்ட கூட்டத்தை பார்த்த பலரும் ஆச்சரியமடைந்தனர். அந்த வீடியோவில் தன்னை காண 7000 பேர் வந்ததாக TTF Vasan குறிப்பிட்டார். கோயம்புத்தூரில் உள்ள TN 43 ஹோட்டலில் இந்த சந்திப்பு நடந்தது. இவர் ஹோட்டலுக்கு செல்லும் வழி நெடுகிலும் இவரை காண ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

பிரபலமான பிறந்தநாள் வீடியோ

TN 43 ஹோட்டலில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறிய போலீஸார், முன்னறிவிப்பின்றி இதுபோன்ற கூட்டத்தை என எச்சரித்தனர். தொடர்ந்த கூட்டத்தை கலைக்கும் அறிவுறுத்தி டிடிஎஃப் வாசனை அந்த இடத்தில் இருந்து கிளப்பி விட்டனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்கள் வேகமாக பரவி வருகிறது.

தவறாக இளைஞர்களை வழிநடத்துவதாக கண்டனம்

தவறாக இளைஞர்களை வழிநடத்துவதாக கண்டனம்

டிடிஎஃப் வாசன் வீடியோவில் பைக்கை 250 கிமீ வேகத்தில் ஓட்டுவதோடு பல சாகசங்களை செய்கிறார். அதிவேக பயணம், சூப்பர் பைக்குகள் சாகசம் என்பது இளைஞர்களை தவறாக வழிநடத்தும் செயல்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Source: newsbricks.com

Best Mobiles in India

English summary
Who is TTF? Youtuber TTF Vasan Youtube Channel and Birthday Celebration Video

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X