சென்னையை சேர்ந்தவர் தான் காரணமா? எலான் மஸ்க்கிற்கு உதவும் ஸ்ரீராம் கிருஷ்ணன் யார்?

|

சமீபத்தில் ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க், அதில் பல உயர்மட்ட மாற்றங்களை செய்து வருகிறார். இதற்காக அவர் தன்னுடன் ஒரு ஆலோசகர்கள் குழுவையும் வைத்திருக்கிறார். இதில் துணிகர முதலீட்டாளரான டேவிட் சாக்ஸ் உள்ளிட்ட பலர் இடம்பெற்றிருக்கின்றனர். இந்த ஆலோகர்கள் குழுவில் ஸ்ரீராம் கிருஷ்ணன் என்பவர் முக்கிய பங்கு வகிக்கிறார். யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் என பார்க்கலாம்.

ட்விட்டரை வாங்க உதவிய ஸ்ரீராம் கிருஷ்ணன் நிறுவனம்

ட்விட்டரை வாங்க உதவிய ஸ்ரீராம் கிருஷ்ணன் நிறுவனம்

முன்னதாக ட்விட்டரில் பணிபுரிந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், தற்போது A16z என்றும் அழைக்கப்படும் சிலிக்கான் வேலி முதலீட்டு நிறுவனமான Andreesen Horowitz இல் பங்குதாரராகவும் முழுநேர பணியாளராகவும் இருக்கிறார். இந்த நிறுவனம் மஸ்க் சமூகவலைதளத்தை வாங்குவதற்கு உதவும் வகையில் முதலீடு செய்தது.

நம்ம சென்னையை சேர்ந்தவரா ஸ்ரீராம்?

நம்ம சென்னையை சேர்ந்தவரா ஸ்ரீராம்?

இதுகுறித்து NYT இல் வெளியான தகவலை பார்க்கலாம். ஸ்ரீராம் கிருஷ்ணன் அக்டோபர் 31 அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட்டர் அலுவலகத்தின் படத்தை வெளியிட்டார். அதோடு ஸ்ரீராம் கிருஷ்ணன், எலான் மஸ்க்கிற்கு தற்காலிகமாக உதவுவதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டார். ஸ்ரீராம் கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தி ஆகிய இருவரும் சென்னையில் பிறந்தவர்கள். இவர்கள் சென்னையில் நடுத்தர வர்க்க இந்திய வளர்ப்பில் வளர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்?

யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் கிருஷ்ணன், 2003 ஆம் ஆண்டு சாஃபட்வேர் இன்ஜினியரிங் படிக்கும் போது கல்லூரியில் ஸ்ரீராம் கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தி ஆகிய இருவரும் சந்தித்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த தம்பதியினர் சான் பிரான்சிஸ்கோவின் நோயே பள்ளத்தாக்கில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

ஸ்ரீராம் கிருஷ்ணன் பணிபுரியும் நிறுவனம்..

ஸ்ரீராம் கிருஷ்ணன் பணிபுரியும் நிறுவனம்..

ஸ்ரீராம் கிருஷ்ணன் ஆரம்பத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கினார். தொடர்ந்து யாஹூ, பேஸ்புக் மற்றும் ஸ்னாப் ஆகியவற்றில் நிர்வாகப் பதவிகளை வகித்திருக்கிறார். 2020 இல் வெளியிடப்பட்ட சமூக ஆடியோ செயலியான கிளப்ஹவுஸில் முக்கிய முதலீட்டாளரான Andreesen Horowitz இல் 2021 இல் இவர் இணைந்திருக்கிறார். தற்போது வரை இவர் இங்கு தான் முழுநேர பணியாளராக பணியாற்றி வருகிறார்.

ஸ்ரீராம் கிருஷ்ணன் மனைவி ஆர்த்தி ராமமூர்த்தி

ஸ்ரீராம் கிருஷ்ணன் மனைவி ஆர்த்தி ராமமூர்த்தி

ஸ்ரீராம் கிருஷ்ணன் மனைவி ஆர்த்தி ராமமூர்த்தி Netflix மற்றும் Facebook இல் பணிபுரிந்திருக்கிறார். True and Co. மற்றும் Lumoid என்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும் இந்த தம்பதியனர் அறிமுகம் செய்யததாகக் கூறப்படுகிறது.

மஸ்க் மற்றும் ஸ்ரீராம் கிருஷ்ணன் சந்திப்பு

மஸ்க் மற்றும் ஸ்ரீராம் கிருஷ்ணன் சந்திப்பு

பிப்ரவரி 2021 இல், க்ளப்ஹவுஸில் கிருஷ்ணன் மற்றும் ராமமூர்த்தியின் செல்வாக்கு மிக்க நிகழ்ச்சியான 'தி குட் டைம்ஸ் ஷோ'வில் மஸ்க் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தான் மஸ்க் மற்றும் ஸ்ரீராம் கிருஷ்ணன் முதலில் சந்தித்ததாக கூறப்படுகிறது.

மாற்றங்களை தொடங்கிய எலான் மஸ்க்

மாற்றங்களை தொடங்கிய எலான் மஸ்க்

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய நாள் முதலே அதில் பல மாற்றங்களை செய்து வருகிறார். குறிப்பாக ட்விட்டரின் சிஇஓ-வாக இருந்த இந்தியரான பராக் அகர்வாலை அவர் பணி நீக்கம் செய்து அறிவித்தார். ட்விட்டரின் தலைமைப் பொறுப்புக்கு புதிய அதிகாரிகளையும் அவர் நியமித்து வருகிறார்.

மஸ்க் தலைமையில் இயங்கும் ட்விட்டர்

மஸ்க் தலைமையில் இயங்கும் ட்விட்டர்

மஸ்க்கிற்கு இந்திய அமெரிக்கரும், சென்னையை சேர்ந்தவருமான ஸ்ரீராம் கிருஷணன் தான் முக்கிய தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மஸ்க் தலைமையில் இயங்கும் ட்விட்டர் இனி சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஸ்ரீராம் கிருஷணன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இனி பறவை சுதந்திரமாக பறக்கும்

இனி பறவை சுதந்திரமாக பறக்கும்

ட்விட்டரை நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் அதாவது ரூ.3,52,000 கோடிக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மஸ்க் உறுதி செய்தார். எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பொதுவான டிஜிட்டல் தளம் தற்போது முக்கியம் எனவே ட்விட்டரை வாங்கினேன் என மஸ்க் ட்விட்டரை வாங்கியதற்கு காரணமாக குறிப்பிட்டார். அதோடு இனி பறவை சுதந்திரமாக பறக்கும் எனவும் ட்விட்டர் லோகோவை குறிப்பிட்டு மஸ்க் தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
Who is Indian Origin Sriram Krishnan, Why did he help Elon Musk to buy Twitter?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X