Just In
- 19 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 23 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 23 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 24 hrs ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க சந்தோஷமா இருக்கவே பூமிக்கு அனுப்பப்பட்டவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- News
குலுங்கிய கட்டிடங்கள்.. நிலநடுக்கத்தால் அதிர்ந்த துருக்கி.. 7.9 ரிக்டர் பதிவு.. அச்சத்தில் மக்கள்
- Sports
எங்கள் இனிய நாளை கெடுத்து விடாதீர்கள்.. மன வேதனையாக இருக்கு.. திருமணமான முதல் நாளே ஆப்ரிடி டிவிட்
- Movies
36 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் இணைந்த ஜாக்கி ஷெராஃப்..ஜெயிலர் மாஸ் அப்டேட்!
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இவர் வாழ்க்கையிலும் இது விளையாடி இருக்கு: மனைவியுடன் ஒரு ஒப்பந்தம்- பில்கேட்ஸ்-ன் சிலிர்க்க வைக்கும் காதல்!
பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தங்களது 27 வருடத் திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டனர். இந்த நிலையில் பில்கேட்ஸ் தனது முன்னாள் காதலியான அன் வின்பிளாட் உடன் ஒவ்வொரு ஆண்டும் சிறிது நேரம் செலவிடுவார் என்ற தகவல் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

அன் வின்பிளாட் சான்
அன் வின்பிளாட் சான் பிரான்ஸிகோ நகரில் தனியார் புலனாய்வு நிறுவனம் நடத்தி வருகிறது. இவர் எட்வர்டு அலெக்ஸ் கிளெய்ன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பில் கேட்ஸ்-க்கு அன் வின்பிளாட்டுடன் நேரம் செலவிடுவதில் பெரிதும் விருப்பப்படுவார். மேலும் பில்கேட்ஸ் மெலிண்டா திருமணத்திற்கு பிறகும் பில் கேட்ஸ் மெலிண்டா சம்மதத்துடன் அன் வின்பிளாடை வருடத்திற்கு ஒருமுறை சந்தித்து வந்திருக்கிறார்.

பில்கேட்ஸ் குறித்து பரவி வரும் இந்த தகவல்
தற்போது பில்கேட்ஸ் குறித்து பரவி வரும் இந்த தகவல் பில்கேட்ஸ் 1997 ஆம் ஆண்டு டைம்ஸ் அளித்த பேட்டியில் தெரிவித்த தகவல்தான். அதில் மெலிண்டாவை ப்ரபோஸ் செய்வதற்கு அன் வின்பிளாட்தான் தன்னை ஊக்கப்படுத்தியாக குறிப்பிட்டார். அன் வின்பிளாட் பில்கேட்ஸை விட ஐந்து வயது மூத்தவர், இவர் பில்கேட்ஸ்-க்கு மெலிண்டாதான் பொருத்தமான ஜோடி என கூறியுள்ளார்.

அன் உடன் நல்ல நட்பு
பில்கேட்ஸ் மெலிண்டா திருமணத்துக்கு பிறகும் அன் வின்பிளாட் உடன் பில்கேட்ஸ்-க்கு நல்ல நட்பு இருந்துள்ளது. இருவரும் சந்திக்கு கொள்ளும் தருணங்களில் உலக நிகழ்வு குறித்த தங்களது கருத்துகளை பரிமாறிக் கொள்வார்களாம். இந்த தகவல் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

27 ஆண்டு திருமண வாழ்க்கை நிறைவு
அண்மையில் வெளிவந்த தகவலின்படி, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா 27 ஆண்டு திருமண வாழ்விற்கு பின்பு விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர். உலகத்தில் உள்ள அனைவருக்கும் பில் கேட்ஸ் என்றால் யார் என்று தெரிந்திருக்கும். பெரும்பாலானவர்களுக்கு இவர் உலகத்தின் பணக்காரர் பட்டியலில் முதல் இடம் பிடித்தவர் என்று தான் தெரிந்திருக்கும். ஆனால், மக்களுக்கு உதவும் பல விசித்திரமான யோசனைகளுக்குச் சொந்தக்காரர் என்பது பலரும் அறியாத ஒரு உண்மையாகும்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பில்கேட்ஸ்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் பில் ம்ற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் ஆரம்பித்து உலகில் பல சமுதாய நற்காரியங்களை செய்து வருபவர் தான் பில் கேட்ஸ். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை ஒரு புதுமையான தொழில்முனைவோராகவும், ஒரு எழுச்சியூட்டும் நன்கொடையாளராகவும் நாம் அனைவரும் அறிவோம். இந்நிலையில் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா ஆகியோர் சரியாக 27 ஆண்டுகளுக்கு பின்பு விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர். இந்த விவகாரத்து முடிவை அறிவித்தாலும் உலகளாவிய சுகாதாரம், பாலின சமத்துவம்,கல்வி மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு நிதியளிக்கும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் தங்களது கூட்டுப் பணிகளை தொடரப் போவதாக பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பில்கேட் தம்பதி வெளியிட்ட அறிவிப்பு
மேலும் பில்கேட் தம்பதி வெளியிட்ட அறிவிப்பில், கடந்த 27 ஆண்டுகளில் 3 குழுந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி,அதனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் சுகாதாரமுடன் வாழ்வதற்கான வழிகள் செய்து வரப்பட்டு உள்ளன. குறிப்பாக இதே பணியில் நாங்கள் இருவரும் தொடர இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ். எங்களது திருமண வாழ்வை முடித்து கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதாவது எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து தம்பதியாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470