அணு ஆயுத போர் நடந்தால் பாகிஸ்தானுக்கு பேரழிவு: இந்தியாவின் பலம்.!
தற்போது இருக்கும் சூழ்நிலையில், இந்தியாவுடன் பாகிஸ்தான் அணு ஆயுத போர் நடத்தினால், அதிலும் இந்தியா தான் வெல்லும் படை பலம் மட்டும் இல்லாமல் பல்வேறு துல்லியமாக தாக்கும் நுட்படும், ஆயுத ஆயுத ஆற்றலும் கொண
இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கும் தற்போது போர் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுடன் நடந்த பல்வேறு போர்களிலும் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது.

தற்போது இருக்கும் சூழ்நிலையில், இந்தியாவுடன் பாகிஸ்தான் அணு ஆயுத போர் நடத்தினால், அதிலும் இந்தியா தான் வெல்லும் படை பலம் மட்டும் இல்லாமல் பல்வேறு துல்லியமாக தாக்கும் நுட்படும், ஆயுத ஆயுத ஆற்றலும் கொண்டுள்ளது இந்தியா.
மேலும், இரு நாடுகளிடம் உள்ள அணு ஆயுதங்கள் குறித்து இனி காணலாம்.
இந்தியா-பாகிஸ்தான் முழு வீடியோ:
இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் குறித்து தெளிவாக இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு வீடியோ குறித்து நாம் காணலாம்.

இந்தியா பாகிஸ்தான் அணு குண்டுகள்:
இந்தியா- பாகிஸ்தான் நாடுகளிடம் உள்ள ஆயுதங்கள் மற்றும் ராணுவ பலம் குறித்து வாஷிங்டனில் உள்ள சர்வதேச ஆய்வுகள் மையம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவிடம் 130 முதல் 140 அணுகுண்டுகள் உள்ளன என்றும் பாகிஸ்தானிடம் 140 முதல் 150 அணு குண்டுகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஏவுகணைகள்:
ஏவுகணைகளை பொருத்தவரை, இந்தியாவிடம் 5000 முதல் 9000 கிலோ மீட்டர் வரை தாக்குதல் நடத்தும் ஒன்பது வகையான ஏவுகணைகள் உள்ளன.

பாகிஸ்தான் ஏவுகணைகள்:
இந்தியாவின் எந்த பகுதியையும் தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பாகிஸ்தான் வைத்துள்ளது. சீன உதவியுடன் உருவாக்கப்பட்ட குறுகிய, நடுத்தர ரக ஏவுகணைகளும் பாகிஸ்தானிடம் உள்ளன.
அதிகபட்சமாக 2000 கிலோ மீட்டர் தூரம் வரை பாயும் ஷாஹீன் தான் பாகிஸ்தான் உச்சவல்லமை கொண்ட ஏவுகணை.

இந்திய ராணுவ வீரர்கள்:
இந்திய ராணுவத்தில் 21.40 லட்சம் வீரர்கள் உள்ளனர். 4426 போர் டாங்கிகள் உள்ளன. 5681 கவச வாகனங்கள், 290 இலகு ரக பீரங்கிகள், 292 ராக்கெட் ஏவும் லாஞ்சர்கள் உள்ளன.

பாகிஸ்தான் ராணுவம்:
பாகிஸ்தானிடம் 6,53,000 போர்வீரர்கள், 2735 டாங்கிகள், 3066 கவச வாகனங்கள், 325 இலகு ரக பீரங்கிகள், 134 ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளன.

இந்திய விமானப்படை பலம்:
இந்தியாவிடம் மொத்தம் 2216 விமானங்கள், 323 போர் விமானங்கள், 329 பல் உபயோக விமானங்கள், 220 தாக்குதல் ரக விமானங்கள், 725 ஹெலிகாப்டர்கள், ஏழு வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்களையும், ஆளில்லா ஹெரன் ரக விமானங்கள், விண்ணிலேயே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் விமானங்கள் என நவீன வசதிகளை கொண்டுள்ளது இந்திய விமானப்படை

பாகிஸ்தான் விமானப்படை:
பாகிஸ்தான் விமானப்படையில் 1143 விமானங்கள், 186 போர் விமானங்கள், 225 பல் உபயோக விமானங்கள், 90 தாக்குதல் விமானங்கள், 323 ஹெலிகாப்டர்கள் உள்ளன. பத்து வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்களும் பாகிஸ்தானிடம் உள்ளன.

இந்திய கடற்படை:
இந்தியா கடற்படையில் மொத்தம் 214 கப்பல்கள் உள்ளன. இரு விமானம் தாங்கி கப்பல்கள், 16 நீர்மூழ்கிக் கப்பல்கள், 11 அழிக்கும் கப்பல்கள் , 15 சிறிய போர்க்கப்பல்கள், 106 ரோந்து மற்றும் கடற்கரை போர் கப்பல்கள், 75 போர் விமானங்களும் இந்திய கடற்படையில் உள்ளன.

பாகிஸ்தான் கடற்படை:
சிறிய கடலோரப்பகுதி கொண்ட பாகிஸ்தானின் கடற்படை மொத்தம் 231 கப்பல்களை கொண்டுள்ளது. 9 போர் கப்பல்கள், 5 நீர்மூழ்கிக் கப்பல்கள், 17 ரோந்து மற்றும் கடலோரக் கப்பல்கள் அங்கு உள்ளன.

4வது இடத்தில் இந்தியா ராணுவம்:
உலக அளவில் இந்தியா ராணுவ பலத்தில் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 17-வது இடத்திலும் உள்ளன.


Click it and Unblock the Notifications