Home
News

Jio டெலிகாம் துவங்க அம்பானிக்கே ஐடியா கொடுத்தது யார் தெரியுமா? இதனால் தான் இந்தியாவே இலவச 4G டேட்டா பெற்றதா?

ரிலையன்ஸ் (Reliance) குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி (Mukesh Ambani), சாம்பலை கூட தங்கமாக மாற்றி அதனை வியாபாரம் செய்து, அதிலிருந்து லாபம் ஈட்டிவது எப்படி என்று சிம்பிள்ளாக யோசித்து, அதற்கேற்ற முயற்சிகளை வெற்றி அடைய செய்வதில் அம்பானி பெயர் பெற்றவர். இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தலைமை தாங்கினாலும், அவரது மிகவும் குறிப்பிடத்தக்க வெற்றி திட்டம் என்றால் அது ஜியோ டெலிகாம் (Jio Telecom) தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இத்தகைய நிறுவனத்தை துவங்க அம்பானிக்கு தூண்டுகோலாக இருந்தது யார்? என்பதை பற்றி தான் இங்கு பார்க்கவிருக்கிறோம்.

செப்டம்பர் 5, 2016 அன்று தொடங்கப்பட்ட ஜியோ (Jio) நிறுவனம், இலவச 4ஜி இணையத்தை வழங்கி தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கை உலகளவில் பிராட்பேண்ட் டேட்டா பயன்பாட்டில் இந்தியா முன்னணி நாடாக மாறுவதற்கு கணிசமாக பங்களித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ நிறுவனத்தை உருவாக்க, அம்பானிக்கு தூண்டுகோலாக இருந்தது யார்? என்ன காரணத்தினால் அம்பானி இந்தியா முழுக்க இலவச 4ஜி டேட்டா திட்டத்தை அறிமுகம் செய்தார்? என்பதை பார்க்கலாம்.

Jio டெலிகாம் துவங்க அம்பானிக்கே ஐடியா கொடுத்தது யார் தெரியுமா?

Jio டெலிகாம் துவங்க முகேஷ் அம்பானிக்கே ஐடியா கொடுத்தது யார் தெரியுமா?

மார்ச் 2018-ல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முகேஷ் அம்பானி தனது மகள் இஷா அம்பானி மெதுவான இன்டர்நெட் சேவை குறித்து விரக்தி அடைந்து அழுததாக கூறியிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இஷா அம்பானி (Isha Ambani), 2011ம் ஆண்டு விடுமுறை நாட்களில் வீட்டில் இணைய சேவை மோசமாக இருந்த காரணமாக, அவருடைய படிப்பு தகவல்களை இணையம் மூலம் அனுப்ப முடியாமல் தவித்திருக்கிறார்.

இந்த பிரச்சினைக்கு பிறகு, வேகமான இணைய இணைப்பு எவ்வளவு முக்கியம் என்பதை அம்பானி உணர்ந்திருக்கிறார். அதேபோல், முகேஷின் மகன் ஆகாஷ் அம்பானி டிஜிட்டல் தகவல் தொடர்புக்கான மாற்றத்தை பற்றியும் தந்தையுடன் பகிர்ந்திருக்கிறார். டெலிகாம் இனி வெறும் குரல் அழைப்பை மட்டும் நம்பி இருக்காது, பல்வேறு ஆன்லைன் செயல்பாடுகள் விரைவில் இந்தியாவிற்குள் நுழையும் என்று ஆண்ட்ரே கணித்து தனது தந்தையின் காதில் சில முக்கிய தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

இந்த இரண்டு நிகழ்வுகளின் அடிப்படையில் தான் முகேஷ் அம்பானி டெலிகாம் துறைக்குள் கால் பதிக்க திட்டமிட்டிருக்கிறார். 2010 இல், முகேஷ் இந்தியாவில் 22 பிராந்தியங்களில் 4G பிராட்பேண்ட் உள்கட்டமைப்பை நிறுவிய இன்ஃபோடல் பிராட்பேண்ட் சர்வீஸ் லிமிடெட் (Infotel Broadband Services Limited - IBSL) இல் 95% பங்குகளை வாங்கினார். ஐபிஎஸ்எல் நிறுவனத்தை ரூ.4,800 கோடிக்கு வாங்கி அதை ரிலையன்ஸ் ஜியோ என மறுபெயரிட்டார்.

இதனால் தான் இந்தியாவிற்கு ஜியோவிடம் இருந்து இலவச 4ஜி டேட்டா கிடைத்ததா?

இந்த மூலோபாய நடவடிக்கை இந்தியாவின் முன்னணி பிராட்பேண்ட் வழங்குனராக மாறுவதற்கான அடித்தளத்தை அமைத்தது. ஜியோ களத்தில் இருங்கியதும் இலவச 4G இன்டர்நெட் சேவையை அறிமுகம் செய்து, தொலைத்தொடர்பு சந்தையை சீர்குலைத்தது மற்றும் போட்டியாளர்கள் தங்கள் உத்திகளை மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்தியது. இந்நிறுவனத்தின் விரைவான வளர்ச்சி, இந்தியா முழுவதும் இணைய அணுகலை அதிகரிப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளது.

இன்று, ஜியோ சுமார் 45 கோடி பயனர்களுக்கு சேவை செய்கிறது. முகேஷ் அம்பானியின் தொலைநோக்குப் பார்வையும், உறுதியும், ரிலையன்ஸ் நிறுவனத்தை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல் இந்தியாவின் டிஜிட்டல் நிலப்பரப்பில் புரட்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஜியோ நிறுவனம் உருவாக இரண்டு தூண்களாக இருந்து ஐடியாவை மறைமுகமாக அம்பானிக்கு வழங்கியது இஷா மற்றும் ஆகாஷ் அம்பானி என்பதே உண்மையாகும். வேகமான இன்டர்நெட் சேவை எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்து அம்பானி ஜியோ நிறுவனத்தை துவங்கியிருக்கிறார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Who Gave The Great Idea To Mukesh Ambani To Launch Reliance Jio Telecom Business In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X