ஆரோக்கிய சேது உருவாக்கியது யார்?- மத்திய மின்னணு அமைச்சகம் அளித்த விளக்கம் இதுதான்!

|

வளர்ந்து வரும் தொழில்நுட்பக் காலத்தில் கொரோனா போன்ற பரவல் நோயை தடுக்க தொழில்நுட்ப பங்கு என்பது அவசியம். அதன்படி கொரோனா பரவலைத் தடுக்க வெளியிடப்பட்ட செயலிதான் ஆரோக்கிய சேது. ஆரோக்கிய சேது செயலி GPS மற்றும் Bluetooth-ன் சேவையைக் கொண்டு செயல்படுகிறது.

ஆரோக்கிய சேது செயலி

ஆரோக்கிய சேது செயலி

ஆரோக்கிய சேது செயலி கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசுக்கு உதவி வருகிறது. ஆரோக்கிய சேது செயலி ஆரம்பத்தில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம் வெளியிட்டது என அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு

இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த சவுரவ் தாஸ் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியது யார் என்ற கேள்வி உட்பட சில கேள்விகளை எழுப்பினார். இந்த செயலியை உருவாக்கியது யார் என்பது குறித்த விவரங்கள் தங்களுக்கு தெரியாது என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தேசிய தகவல் மையம் பதிலளித்தது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

அதன்பின் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த விஷயத்தை தேசிய மின் நிர்வாகப் பிரிவுக்கு மாற்றியது. பின் அங்கிருந்தும் இந்த தகவலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லாதவை என பதில் வந்தது. தொடர்ச்சியாக இந்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத்துறையும் மழுப்பலான பதில்களையே வழங்கியது. தேசிய தகவல் மையம் உருவாக்கிய செயலி என மக்களுக்கு தெரியவந்த செயலி வடிவமைப்பு குறித்து யாரிடமும் தகவல் இல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மத்திய தகவல் ஆணையம் விசாரணை

மத்திய தகவல் ஆணையம் விசாரணை

அதன்பின் மூன்று அரசுத் துறைகள் அளித்த பதில்கள் தொடர்பாக சவுரஸ் தாஸ் மத்திய தகவல் ஆணையத்தில் புகாரளித்தார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தகவல் ஆணையம், இந்த செயலி தொடர்பான தகவலை வழங்க மறுப்பது தவறு, மனுதாரரின் மனுவை ஒவ்வொருத்துறைக்கும் மாற்றிக் கொண்டே இருப்பது முறையல்ல, தகவல் இல்லை எனவும் பதிலளிக்கக் கூடாது என ஆணையம் அறிவுறுத்தியது.

குறைந்தபட்சம் முயற்சி செய்திருக்க வேண்டும்

குறைந்தபட்சம் முயற்சி செய்திருக்க வேண்டும்

இரண்டு மாதங்களாக மனுதாரரின் மனுவை இழுத்தடிக்கப்படுகிறது. செயலியை தயாரித்தது யார் என்று அறிய குறைந்தபட்சம் முயற்சி செய்திருக்க வேண்டும். நிதி ஆயோக்கிடம் செயலி தயாரிப்பு குறித்து சில தகவல்கள் மட்டுமே இருக்கிறது என கூறும் அரசுத்துறைகளிடம் செயலி உருவாக்கும் குறித்து தகவல் இல்லை என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது என ஆணையம் தெரிவித்தது.

2020 அடுத்த அற்புத நிகழ்வு: அக்டோபர் 31 வானில் தெரியும் ப்ளூ மூன்- மிஸ் பண்ணாதிங்க!

ஆரோக்கிய சேது குறித்து விளக்கமளிக்க உத்தரவு

ஆரோக்கிய சேது குறித்து விளக்கமளிக்க உத்தரவு

இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டப் பிரவு 20-ன் கீழ் உரிய பதில் அளிக்காத சிறப்பு தகவல் அதிகாரிகள், தேசிய தகவல் மையம், மத்திய மின்னணு அமைச்சகம் ஆகியவற்றுக்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது எனவும் ஆரோக்கிய சேது குறித்து விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டதோடு சிறப்பு தகவல் அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கம்

இதற்கிடையில் நேற்று(புதன்கிழமை) இரவு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆரோக்கிய சேது தயாரிப்பு குறித்து செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 21 நாட்களில் உருவாக்கப்பட்ட ஆரோக்கிய சேது செயலி கோவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பெருமளவு உதவி வருகிறது. முன்னதாக கூறியது போல் ஆரோக்கிய சேது அரசு மற்றும் தனியார் கூட்டுடன் உருவாக்கப்பட்டது. தொடர்புகளை கண்டறிதல் என்பதை நோக்கமாகக் கொண்டு ஆரோக்கிய சேது உருவாக்கப்பட்டது.

சுகாதார பணியாளர்களுக்கு பெரிதளவு உதவிய செயலி

சுகாதார பணியாளர்களுக்கு பெரிதளவு உதவிய செயலி

இந்த செயலியை இதுவரை 16.23 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலி மிக வெளிப்படையான முறையில் உருவாக்கப்பட்டது. ப்ளூ டூத் தொழில்நுட்பம் மூலம் வைரஸ் பாதிப்பு, அறிகுறி உள்ளவர்களை கண்டறிய இந்த செயலி உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த செயலி சுகாதார பணியாளர்களுக்கு பெரிதளவு உதவியாக இருக்கிறது.

WHO ஆல் பாராட்டப்பட்ட செயலி

WHO ஆல் பாராட்டப்பட்ட செயலி

ஆரோக்கிய சேது, தொழில்துறை மற்றும் கல்வியாளர்கள் இணைந்து தயாரிக்கப்பட்ட தயாரிப்பாகும். இந்த செயலி WHO ஆல் பாராட்டப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ஆரோக்கிய சேது மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனவும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Who Created Aarogya setu App: Clarification issued by Ministry of Electronics and IT

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X