'இந்த' ரேஷன் அட்டை பயனர்களுக்கு மட்டும் தான் ரூ.1000 உதவி தொகையா? குழப்பம் வேண்டாம் மக்களே.. உண்மை இதுதான்.!

|

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் அட்டைகளில் உள்ள குடும்பத் தலைவர்களின் பெயர்கள் தற்போது ஆன்லைன் மூலமாக குடும்ப தலைவிகளின் பெயர்களால் மாற்றப்பட்டு வருவதாக உணவுப் பொருள் விநியோக துறை அறிவித்துள்ளது. அரசாங்கம் சொன்ன விஷயத்தை மக்கள் தவறுதலாகப் புரிந்துகொண்டனர் என்றும், இதனால் ஏரளாமானோர் தங்களின் ரேஷன் அட்டைகளில் தேவையில்லாத மாற்றங்களைச் செய்து வருகின்றனர். இந்த குழப்பத்தை தற்போது உணவுப் பொருள் விநியோக துறை தெளிவாக்கியுள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்?

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்?

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை திட்டத்தின் அறிவிப்பு வெளியான பிறகு, புதிய வதந்தி பரவத்தொடங்கியது. ரேஷன் அட்டைகளில் குடும்ப தலைவரின் பெயரில் ஆண் பெயர் இருந்தால், இந்த உதவித் தொகை கிடைக்காது என்ற வதந்தி பரவியது. மக்கள் இதை உண்மை என்று நம்பி, பல ரேஷன் அட்டை பயனர்கள் தங்களின் ரேஷன் அட்டையில் இருக்கும் ஆண் குடும்பத் தலைவர் பெயரை ஆண்லைன் மூலமாக குடும்பத் தலைவி பெயர்களுக்கு மாற்றம் செய்து வருகின்றனர்.

வெளியான புரளியால் மக்கள் குழப்பம்.. உணவுப் பொருள் விநியோக துறை சொன்ன உண்மை என்ன?

வெளியான புரளியால் மக்கள் குழப்பம்.. உணவுப் பொருள் விநியோக துறை சொன்ன உண்மை என்ன?

குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உதவித் தொகை திட்டத்தின் அறிவிப்பிற்குப் பின்னர், இது போன்ற விண்ணப்பங்கள் ஆன்லைனில் ஏராளமாகக் குவிந்துள்ளது என்று உணவுப் பொருள் விநியோக துறை தெரிவித்துள்ளது. இன்னும், சிலர் புதிய ரேஷன் அட்டையை வாங்கவும் விண்ணப்பித்துள்ளனர் என்று உணவுப் பொருள் விநியோக துறை அறிவித்துள்ளது.

ஏர்டெல் சைலெண்டாக செய்த வேலை: இனி இந்த 3 திட்டம் கிடையாது.. அதுக்கு பதில் 'இந்த' திட்டமா?ஏர்டெல் சைலெண்டாக செய்த வேலை: இனி இந்த 3 திட்டம் கிடையாது.. அதுக்கு பதில் 'இந்த' திட்டமா?

தமிழ்நாட்டில் உள்ள 5 வகையான ரேஷன் அட்டைகள்

தமிழ்நாட்டில் உள்ள 5 வகையான ரேஷன் அட்டைகள்

இப்படி குழப்பங்களைத் தவிர்க்க, யாருக்கெல்லாம் இந்த உதவித் தொகை கிடைக்கும் என்பதை தற்போது உணவுப் பொருள் விநியோக துறை விளக்கியுள்ளது.தமிழ்நாட்டில் மொத்தமாக 5 வகையான ரேஷன் அட்டைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உபயோகத்தில் இருக்கும் ரேஷன் அட்டை ஸ்மார்ட் காடுகளில் இருக்கும் புகைப்படத்துக்குக் கீழே PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என ரேஷன் அட்டைகளின் குறியீடுகள் காணப்படும்.

இந்த மூன்று வகை ரேஷன் அட்டை பயனர்களுக்கு மட்டுமே உதவி தொகை கிடைக்கும்

இந்த மூன்று வகை ரேஷன் அட்டை பயனர்களுக்கு மட்டுமே உதவி தொகை கிடைக்கும்

இந்த 5 குறியீடுகளில் உள்ள 3 குறியீட்டு அட்டைகளுக்கு மட்டுமே இந்த ரூ. 1000 உதவி தொகை கிடைக்கும் என்பதை உணவுப் பொருள் விநியோக துறை தற்போது தெரிவித்துள்ளது.

ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்படும் பொருட்களின் அடிப்படையில் இந்த 5 வகை அட்டைகள் தனித்தனியாகக் குறியீடுகள் மூலம் பிரிக்கப்பட்டுள்ளது.

புதிய ரேஷன் அட்டையை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? உடனே அப்ளை செய்யுங்கள்..புதிய ரேஷன் அட்டையை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? உடனே அப்ளை செய்யுங்கள்..

எந்த-எந்த அட்டைகளுக்கு என்ன-என்ன சலுகைகள் கிடைக்கும்?

எந்த-எந்த அட்டைகளுக்கு என்ன-என்ன சலுகைகள் கிடைக்கும்?

 • இதில் PHH என்ற குறியீட்டைக் கொண்ட ரேஷன் அட்டைகளுக்கு மட்டும் தான் ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாங்க அனுமதி கிடைக்கிறது.
 • இரண்டாவதாக இருக்கும் PHH- AAY என்ற குறியீட்டைக் கொண்ட அட்டைகளுக்கு, ரேஷன் கடைகளில் 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் வாங்கிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
 • இந்த ரேஷன் அட்டை பயனர்களுக்கு அரிசி கிடையாது; ஆனால் சர்க்கரை உண்டா?

  இந்த ரேஷன் அட்டை பயனர்களுக்கு அரிசி கிடையாது; ஆனால் சர்க்கரை உண்டா?

  • மூன்றாவதாக NPHH என்ற குறியீட்டைக் கொண்ட அட்டைகளுக்கு அரிசி உள்பட அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ள அனுமதி உண்டு.
  • NPHH-S என்ற குறியீடு கொண்ட அட்டைகளுக்கு ரேஷன் கடைகளில் அரிசியைத் தவிர்த்து சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை மட்டும் வாங்க அனுமதி உண்டு.
  • 5ஜிபி டேட்டா வரை இனி ஜியோவிடம் இருந்து நீங்கள் கடனாகப் பெறலாம்.. எப்படித் தெரியுமா?5ஜிபி டேட்டா வரை இனி ஜியோவிடம் இருந்து நீங்கள் கடனாகப் பெறலாம்.. எப்படித் தெரியுமா?

   இந்த ரேஷன் அட்டை பயனர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது

   இந்த ரேஷன் அட்டை பயனர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது

   • இறுதியாக, NPHH-NC என்ற குறியீட்டைக் கொண்ட அட்டைகளுக்கு ரேஷன் கடைகளில் எந்தப் பொருட்களும் வழங்கப்படமாட்டாது. இந்த அட்டைகளைப் பயனர்கள், அடையாள அட்டையாகவும் முகவரிச் சான்றிதழாகவும் மட்டுமே பயன்படுத்த முடியும்.
   • உங்கள் ரேஷன் அட்டையில் இந்த குறியீடுகள் இருந்தால் ரூ.1000 நிச்சயமாக கிடைக்கும்

    உங்கள் ரேஷன் அட்டையில் இந்த குறியீடுகள் இருந்தால் ரூ.1000 நிச்சயமாக கிடைக்கும்

    தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அறிவிப்பின் படி, PHH, PHH-AAY, NPHH ஆகிய 3 வகையான குறியீடுள் கொண்ட ரேஷன் அட்டை தாரர்களுக்கு மட்டுமே குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று உணவுப் பொருள் விநியோக துறை தெரிவித்துள்ளது.

    'பறக்கும் கேமரா'வுடன் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.. விவோ செய்யும் நம்ப முடியாத காரியம் இது தான்..'பறக்கும் கேமரா'வுடன் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.. விவோ செய்யும் நம்ப முடியாத காரியம் இது தான்..

    தேவையில்லாமல் ஆன்லைனில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம்

    தேவையில்லாமல் ஆன்லைனில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம்

    NPHH-S மற்றும் NPHH-NC ஆகிய 2 வகை அட்டை பயனர்களுக்கு இந்த உதவித் தொகை கிடைக்காது என்பதையும் உணவுப் பொருள் விநியோக துறை தெளிவாக்கியுள்ளது. இதனால், தேவையில்லாமல் யாரும் ரேஷன் அட்டைகளில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Which Type Of Ration Cards Are Eligible To Get Rs 1000 From Tamil Nadu Government : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X