மின்னல் வேக ஸ்பீட்.. 5G வேகத்தில் யாரு பெஸ்ட்! ஜியோவா, ஏர்டெல்லா?

|

ஜியோ 5ஜி 4 நகரங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதேபோல் ஏர்டெல் 5ஜி சேவை 8 நகரங்களில் கிடைக்கிறது. இதில் எந்த தொலைத்தொடர்பு நிறுவனம் அதிக இணைய வேகத்தை பதிவு செய்துள்ளது என்று பார்க்கலாம்.

5ஜி சேவை தொடங்கிய ஏர்டெல்?

5ஜி சேவை தொடங்கிய ஏர்டெல்?

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் அக்டோபர் 1 முதல் 5ஜி சேவையை அறிமுகம் செய்தது.

மறுபுறம் சைலண்டாக ஜியோ நான்கு நகரங்களில் மட்டும் 5ஜி சேவையை அறிமுகம் செய்தது. ஜியோவின் 5ஜி சேவையானது டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய நான்கு நகரங்களில் கிடைக்கிறது. அதேபோல் ஏர்டெல் 5ஜி சேவை எட்டு நகரங்களில் கிடைக்கிறது.

மலிவு விலையில் அதிவேக 5ஜி சேவை

மலிவு விலையில் அதிவேக 5ஜி சேவை

மலிவு விலையில் அதிவேக 5ஜி என்ற முழக்கத்துடன் ஜியோ களமிறங்கி இருக்கிறது. Jio 5G வெல்கம் ஆஃபரின் கீழ், தகுதியான பயனர்களுக்கு நிறுவனம் 1gbps இலவச வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது.

தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களான Jio மற்றும் Airtel கடந்த சில காலமாகவே தங்கள் 5ஜி சேவையை சோதித்து வருகிறது என்பதை அனைவரும் அறிந்ததே. இதில் யாரு பெஸ்ட் என பார்க்கலாம்.

சீரான வேகம் வழங்க நடவடிக்கை..

சீரான வேகம் வழங்க நடவடிக்கை..

Ooklas Speedtest Intelligence அறிக்கையின்படி, ஜியோ மற்றும் ஏர்டெல் கடந்த சில காலமாக தங்கள் 5ஜி சேவையை சோதித்து வருகின்றன. இதில் 5ஜி பதிவிறக்க வேகம் 809.94 எம்பிபிஎஸ் வரை எட்டியது.

இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள அறிக்கையை வைத்து பார்க்கும் போது நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க்குகளை மறுபரிசீலனை செய்கிறார்கள் என்பது தெரியவருகிறது.

காரணம் சோதனையில் குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கிவந்த நிலையில் தற்போது நிறுவனங்கள் வணிக நிலைக்கு நுழைகிறது, எனவே அனைவருக்கும் சீரான வேகம் வழங்க நிறுவனம் முனைப்புடன் செயல்படுகிறது.

ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி வேகம்

ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி வேகம்

ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களின் சராசரி 5ஜி பதிவிறக்க வேகத்தை வெளியான ஓக்லா அறிக்கை ஒப்பிட்டுக்காட்டுகிறது. இந்த ஒப்பீடானது இரண்டு நிறுவனங்களும் 5ஜி சேவை வழங்கும் நான்கு நகரங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் வாரணாசி பகுதியில் வழங்கப்படும் ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி வேகம் ஒப்பிட்டு எது பெஸ்ட் என்ற விவரம் வெளியிடப்பட்டிருக்கிறது.

மின்னல் வேக ஸ்பீட்

மின்னல் வேக ஸ்பீட்

டெல்லியில், ஏர்டெல் கிட்டத்தட்ட 200 Mbps சராசரி பதிவிறக்க வேகத்தை எட்டியுள்ளது. இதன் உடன் ஒப்பிடுகையில், ரிலையன்ஸ் ஜியோ ஜூன் மாதம் முதல் 600mbps சராசரி பதிவிறக்க வேகத்தை பதிவு செய்திருக்கிறது.

ஜியோ Vs ஏர்டெல்., எது பெஸ்ட்?

ஜியோ Vs ஏர்டெல்., எது பெஸ்ட்?

கொலக்கத்தாவைப் பொறுத்தவரை ஏர்டெல் 33.83mbps சராசரி பதிவிறக்க வேகத்தையும், ரிலையன்ஸ் ஜியோ ஜூன் மாதத்தில் 482.02mbps சராசரி பதிவிறக்க வேகத்தையும் எட்டி இருக்கிறது.

மும்பையில் ஏர்டெல் 271.07mbps சராசரி பதிவிறக்க வேகத்தையும் ஜியோ ஜூன் முதல் 515.38mbps சராசரி பதிவிறக்க வேகத்தையும் அடைந்திருக்கிறது.

இறுதியாக வாரணாசியில் பார்க்கும் போது இந்த பகுதியில் ஏர்டெல் வேகம் மேலோங்கி இருக்கிறது. வாரணாசியில் ஏர்டெல் 516.57 எம்பிபிஎஸ் 5ஜி வேகத்தையும், ஜியோ 485.22 எம்பிபிஎஸ் 5ஜி வேகத்தையும் எட்டி இருக்கிறது.

ஒப்பீட்டளவில் ஜியோ பெரும்பாலான பகுதியில் அதிக மற்றும் அதீத 5ஜி வேகத்தை பதிவு செய்திருக்கிறது.

89 சதவீத பயனர்கள் 5ஜிக்கு தயார்..

89 சதவீத பயனர்கள் 5ஜிக்கு தயார்..

Ooklas சமீபத்தில் நுகர்வோர் கணக்கெடுப்பை நடத்தியது. அதில் சுமார் 89 சதவீத இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் 5G க்கு மேம்படுத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போதுள்ள நெட்வொர்க்கை விட 5ஜி வேகம் அதீத வகையில் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

எட்டு நகரங்களில் 5ஜி சேவை

எட்டு நகரங்களில் 5ஜி சேவை

ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் எட்டு நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது.

தமிழத்தின் தலைநகரும் இதில் அடங்கும். டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, சிலிகுரி, வாரணாசி மற்றும் நாக்பூர் ஆகிய எட்டு நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கிறது.

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் 5ஜி நெட்வொர்க் கிடைப்பதை சரிபார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Which Telecomm Network is Best in 5G Speed? Compete between jio and Airtel

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X