Home
News

ஆண்ட்ராய்டு ஓரியோவுடன் வெளிவரும் மிரட்டலான ஸ்மார்ட்போன்கள்.!

எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் வழங்கப்படும் , மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலியை கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

இன்று அனைத்து இடங்களிலும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் தான அதிமாக உள்ளனர், தற்போது ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளம் அதிகமாக பயன்படுகிறது, இனிமேல் வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் கண்டிப்பாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோவுடன் வெளிவரும் மிரட்டலான ஸ்மார்ட்போன்கள்.!

கூகுள் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் மிக பெரிய வெற்றியை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு ஓரியோவுடன் வெளிவரும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல்;

கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல்;

கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல் ஆகிய கருவிகளுக்கு இடையே அளவு வேறுபாடுகள் தவிர்த்து, பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் பெஸல்லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின் மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள். கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மாடல்கள் பொதுவாக 12மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆரம்பத்தில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் வழங்கப்பட்டது, விரைவில் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அப்டேட்
வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஹவாய் மேட் 10:

ஹவாய் மேட் 10:

ஹவாய் மேட் 10 ஸ்மார்ட்போன் மாடல் 20எம்பி டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் 5.9-இன்ச் க்யுஎச்டி டிஸ்பிளே மற்றும் (1440-2560)பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு தனிகவனம் செலுத்தப்பட்டுள்ளது. பின்பு ஹவாய் மேட் 10 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்9:

சாம்சங் கேலக்ஸி எஸ்9:

சாம்சங் நிறுவனம் வரும் 2018-ம் ஆண்டு சாம்சங் கேலக்ஸி எஸ்9 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும்
இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845செயலி இடம்பெற்றுள்ளது. கைரேகை ஸ்கேனர் மற்றும் பல இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எல்ஜி ஜி7;

எல்ஜி ஜி7;

எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் வழங்கப்படும் , மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலியை கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது.

 எச்டிசி யு11 பிளஸ்:

எச்டிசி யு11 பிளஸ்:

இக்கருவி 6-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் கைரேகை ஸ்கேனர் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ வழங்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Which Smartphones Will Release With Android Oreo; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X