என்ன போன் யூஸ் பண்றீங்க! இந்த போன் இருந்தா உடனே இதை செய்யுங்க: நல்லதுக்கு சொல்றோம் உங்க இஷ்டம்!

|

iPhone 14 சீரிஸ் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட ஐபோன் மாடல்கள் வைத்திருக்கும் இந்திய பயனர்களுக்கு 5ஜி அணுகல் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மாடல்களுக்கான iOS 16.2 பீட்டா புதுப்பிப்பை வெளியிடத் தொடங்கி இருக்கிறது. இந்த ஓஎஸ் அப்டேட் ஆனது ஏர்டெல் மற்றும் ஜியோவுக்கான 5ஜி அணுகலை கொண்டு வருகிறது.

iOS அப்டேட்

iOS அப்டேட்

தேர்ந்தெடுக்கப்பட்ட ஐபோன் மாடல்களுக்கான புதிய ஓஎஸ் அப்டேட்டை iOS 16.2 என பீட்டாவில் ஆப்பிள் வெளியிட்டுள்ளது. iOS 16.2 பீட்டா அப்டேட் ஆனது ஐபோன் பயனர்களுக்கான 5ஜி ஆதரவை வழங்குகிறது. இந்த அப்டேட் விரைவில் அனைவருக்கும் கிடைக்க இருக்கிறது.

ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பயனர்களும் தற்போது தங்களது ஐபோன் 14, ஐபோன் 13, ஐபோன் 12 மாடல்களில் 5ஜியைப் பயன்படுத்தலாம்.

நாடு முழுவதும் 5ஜி சேவை

நாடு முழுவதும் 5ஜி சேவை

இந்தியாவில் உள்ள ஐபோன் பயனர்கள் ஜியோ மற்றும் ஏர்டெல் இன் 5ஜி சேவைப் பெற தயாராகி இருக்கின்றனர். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் கடந்த சில தினங்களுக்கு முன்பு குறிப்பிட்ட பகுதிகளில் தங்களது 5ஜி சேவையை அறிமுகம் செய்தது. விரைவில் நாடு முழுவதும் இந்த சேவை அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்

ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்

பெரும்பாலான ஆண்ட்ராய்ட் போன் நிறுவனங்கள் தங்களது குறிப்பிட்ட மாடல்களுக்கு 5ஜி அப்டேட்டை ஆரம்பக்கட்டம் முதலே வழங்கி வருகின்றன. ஆனால் அதிக காசு கொடுத்து ஐபோன் வாங்கியவர்கள் 5ஜி அணுகலை அனுபவிக்க முடியாத நிலையில் இருந்தனர்.

இந்த நிலையில் ஆப்பிள் தனது குறிப்பிட்ட மாடல் ஐபோன்களுக்கு 5ஜி அப்டேட்டை வெளியிடத் தொடங்கி உள்ளது. அதேபோல் பீட்டா பயனர்களுக்கு iOS 16.2 புதுப்பிப்பை வழங்க ஆப்பிள் தயாராகி இருக்கிறது.

படிப்படியாக வெளியாகும் அப்டேட்

படிப்படியாக வெளியாகும் அப்டேட்

iOS 16.2 பீட்டா ஆனது iPhone 14, iPhone 13, iPhone 12 மற்றும் iPhone SE (3-வது தலைமுறை) மாடல்களுக்கு வெளிவரத் தொடங்கி இருக்கிறது. எனவே இந்தியாவில் இந்த ஐபோன் மாடல்கள் கொண்ட பீட்டா பயனர்கள் தங்கள் போனில் 5ஜி சேவையை பயன்படுத்தலாம். iOS 16 பீட்டா அப்டேட் ஆனது படிப்படியாக வெளியிடத் தொடங்கப்பட்டிருக்கிறது.

பீட்டா பயனர்களுக்கு மட்டுமே

பீட்டா பயனர்களுக்கு மட்டுமே

மேலே குறிப்பிட்டுள்ள iPhone மாடல்கள் உங்களிடம் இருந்தால் iOS 16 பீட்டா உங்களுக்கு கிடைக்கிறதா என்பதை சோதித்துப் பார்த்துக் கொள்ளவும். அதன்படி உங்கள் ஐபோனில் 5ஜி அணுகலையும் பெறலாம்.

அப்டேட் செய்வது எப்படி?

அப்டேட் செய்வது எப்படி?

நீங்கள் முன்னதாகவே பீட்டா பதிப்பு பயனராக இருக்கும் பட்சத்தில் சமீபத்திய பீட்டா ஓஎஸ் புதுப்பிப்பு கிடைக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.

அப்டேட் உள்ளதா என்பதை சரிபார்க்க செட்டிங்க்ஸ் பயன்பாட்டுக்குள் சென்று ஓஎஸ் அப்டேட் என்பதை தேர்ந்தெடுத்து உறுதி செய்து கொள்ளவும்.

அனைவருக்கும் விரைவில்

அனைவருக்கும் விரைவில்

அப்படி இருக்கும்பட்சத்தில் நீங்கள் ஓஎஸ் அப்டேட் செய்து 5ஜி அனுகலை பெறலாம். இன்னும் சில தினங்களில் இந்த அப்டேட் அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி, ஐபோனுக்கு மட்டும் தான் இந்த 5G சேவையா என்றால் அதுதான் இல்லை.

இந்த சேவை அனைவருக்கும் அந்தந்த போன் நிறுவனங்கள் வழங்கி வருகிறது. உங்களிடம் 5ஜி போன் இருக்கிறது, 5ஜி போன் கிடைக்கும் பகுதியிலும் இருக்கிறீர்கள் ஆனால் 5ஜி சேவை பயன்படுத்த முடியவில்லை என்றால். உங்கள் போனுக்கான அப்டேட்டை அந்த நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என அர்த்தம்.

எந்தெந்த போனுக்கு எப்போது 5ஜி?

எந்தெந்த போனுக்கு எப்போது 5ஜி?

ஒவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனமும் அந்தந்த மாடலுக்கான 5ஜி அப்டேட்டை வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும். இதை அப்டேட் செய்த பிறகு தான் 5ஜி சேவை இயக்க முடியும். ஒன்பிளஸ் ஃப்ளாக்ஷிப் போன்கள் மற்றும் நத்திங் போன் 1 ஆகியவற்றில் ஜியோ 5ஜி அணுகலை தற்போதே பெறலாம். இந்த போன்கள் ஜியோ 5ஜிக்கு தயாராக இருக்கிறது. உங்கள் செட்டிங்ஸ் பயன்பாட்டில் சாஃப்ட்வேர் அப்டேட் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Which Phone Are You Using? If You have this Phone Do this Immedietly!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X