சிறந்த பண பரிவர்த்தனை செயலிகள் எது: கூகுள்பே, போன்பே, பேடிஎம்!

|

டிஜிட்டர் பரிவர்த்தனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் பேமெண்ட் செயலிகளில் பிரதானமாக இருப்பது கூகுள்பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்டவைகள் ஆகும். பிரதான டிஜிட்டல் பேமெண்ட் செயலிகளின் பட்டியல் குறித்து பார்க்கலாம்.

டிஜிட்டல் இந்தியா வளர்ச்சி

டிஜிட்டல் இந்தியா வளர்ச்சி

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா தற்போது பெருமளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என்றே கூறலாம். தற்போதைய நிலைப்படி இந்தியாவில் அதிகளவிலானோர் டிஜிட்டர் பரிவர்த்தனை முறையையே மேற்கொள்கின்றனர். டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு பல்வேறு டிஜிட்டல் பேமெண்ட் செயலிகள் உள்ளன.

டிஜிட்டல் பேமெண்ட் செயலிகள்

டிஜிட்டல் பேமெண்ட் செயலிகள்

டிஜிட்டல் பேமெண்ட் செயலிகளில் பிரதானமாக இருப்பது கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்டவையாகும். ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்கு சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை தற்போது அதிகரித்து வருகிறது.

நெட்வொர்க் அல்லது சர்வர் பிரச்சனை

நெட்வொர்க் அல்லது சர்வர் பிரச்சனை

இருப்பினும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பெரிய தொகைகள் பரிமாற்றம் செய்யும்போது சிறிய தயக்கம் இருக்கும். காரணம் தொகை பரிமாறும் நேரத்தில் நெட்வொர்க் அல்லது சர்வர் பிரச்சனை ஏற்பட்டு பரிவர்த்தனை முடக்கப்பட்டு விடுமோ என்று. அப்படி முடக்கப்படும் பரிவர்த்தனையின் போது பணம் கணக்கில் இருந்து கழிக்கப்பட்டால் அது மீண்டும் கணக்கில் வரவு வைக்கப்பட குறிப்பிட்ட நாட்கள் ஆகும்.

சிறந்த முன்னேற்றம் கண்டுள்ள நாடு இந்தியா., இந்தியாவை கூர்ந்து கவனிக்க வேண்டும்: புகழ்ந்து தள்ளிய பில்கேட்ஸ்!சிறந்த முன்னேற்றம் கண்டுள்ள நாடு இந்தியா., இந்தியாவை கூர்ந்து கவனிக்க வேண்டும்: புகழ்ந்து தள்ளிய பில்கேட்ஸ்!

பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படும் செயலி

பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படும் செயலி

கூகுள் பே செயலி தற்போது பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படும் செயலியாகும். பணம் அனுப்புவது, கட்டணம் செலுத்துவது போன்ற பல்வேறு பயன்பாடுகள் இந்த செயலியில் உள்ளது. இந்த செயலியில் பணம் அனுப்பும் போது கிஃப்ட் கார்டுகள் வழங்கப்படுகிறது. இதில் கிடைக்கும் ரொக்க பரிசுகள் அதில் இருக்கும் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.

பிரதான செயலியாக போன்பே

பிரதான செயலியாக போன்பே

போன்பே செயலியும் டிஜிட்டல் பேமெண்ட் செயலிகளில் பிரதானமாக இருக்கிறது. இந்த செயலியின் பணம் அனுப்புபவர்களின் கணக்கை தேர்வு செய்து சேட்டிங் சேவையில் அனுப்பும் பணத்தை டைப் செய்தால் மட்டும் போதும் தாமாக ரூபாய் குறி பதிவாகி பணம் அனுப்பும் தேர்வு காண்பிக்கப்படும். இதில் பணம் அனுப்பும்போது கிடைக்கும் கிஃப்ட் கார்டுகள் பெரும்பாலானவை ஆன்லைன் ஷாப்பிங் தேர்வாகவே இருக்கிறது.

பல்வேறு சேவைகள் வழங்கும் பேடிஎம்

பல்வேறு சேவைகள் வழங்கும் பேடிஎம்

பேடிஎம் பயன்பாடு பல்வேறு சேவைகளை ஒருங்கிணைத்து வருகிறது. இதில் உள்ள வாலட் சேவை பல்வேறு தேவைகளுக்கு பயனளிக்கிறது. இதிலும் பணம் அனுப்பும் தேர்வு இருக்கிறது என்றாலும் அதையும் தாண்டி பேடிஎம் சிறிய வங்கியை போல் பல சேவைகளை கொண்டு இயங்குகிறது.

Best Mobiles in India

English summary
Which one is Best Digital Payment Apps in India: Here the List

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X