இந்த மேட்டரை தெரிஞ்சுக்காம.. டக்குனு OnePlus Nord 2T வாங்கிடாதீங்க!

|

இந்தியாவில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக நோர்ட் 2டி 5ஜி (OnePlus Nord 2T 5G) மாடல் இன்று காலை (ஜூலை 1) அறிமுகமானது.

ஒருவேளை நோர்ட் 2டி, உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அதாவது இந்த மாடல் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்படி இல்லை என்றால், ஆனாலும் வாங்கினால் ஒரு ஒன்பிளஸ் மாடலை தான் வாங்குவேன் என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால்.. கவலையை விடுங்க.. கைவசம் ஒரு சூப்பர் ஐடியா இருக்கு!

அந்த ஐடியாவின் பெயர் - ஒன்பிளஸ் 10டி!

அந்த ஐடியாவின் பெயர் - ஒன்பிளஸ் 10டி!

ஒன்பிளஸ் 10டி (OnePlus 10T) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் கூடிய விரைவில் நடக்கும் என்பது போல் தெரிகிறது.

இன்னும் சுவாரசியமான விடயம் என்னவென்றால், ஒன்பிளஸ் நிறுவனம் இந்த மாடலின் வழியாக அதன் 'டி' பிளாக்ஷிப்பை மீண்டும் கொண்டு வரத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

(நினைவூட்டும் வண்ணம், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் OnePlus 9T மாடலை தவிர்த்துவிட்டதால், OnePlus 8T தான் கடைசியாக வெளியான பிளாக்ஷிப் 'டி' சீரீஸ் ஸ்மார்ட்போன் ஆகும்)

அதை விட அல்டிமேட் ஆன மேட்டர் என்னவென்றால் - இந்த ஸ்மார்ட்போனின் விலை தான். அதுபற்றி கடைசியாக பார்ப்போம். முதலில் இதன் அம்சங்களை பற்றி "ஒரு ரவுண்டு" அடிப்போம்!

தவற விட்டதை மொத்தமாக பிடிக்க திட்டம் போடும் ஒன்பிளஸ்!

தவற விட்டதை மொத்தமாக பிடிக்க திட்டம் போடும் ஒன்பிளஸ்!

ஒன்பிளஸ் 8டி மாடலுக்கு பிறகு, நிறுவனத்தின் பிளாக்ஷிப் 'டி' சீரீஸில் வெற்றிடம் மட்டுமே உள்ளது. அதை நிரப்பும் நோக்கத்தின் ஒன்பிளஸ் தீயாக வேலை செய்து வருகிறது.

இன்னும் சொல்லப்போனால் ஒன்பிளஸ் 10டி மாடல் ஆனது இந்த ஜூலை மாதத்தின் இறுதியிலேயே கூட இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

அதாவது OnePlus 10T ஆனது இந்த 2022 ஆம் வெளியாகும் நிறுவனத்தின் கடைசி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக கூட இருக்கலாம்.

இந்திய கம்பெனி-னா என்ன அவ்ளோ கேவலமா போச்சா? ஜூலை 7 பார்த்துக்கலாம்!இந்திய கம்பெனி-னா என்ன அவ்ளோ கேவலமா போச்சா? ஜூலை 7 பார்த்துக்கலாம்!

ஒன்பிளஸ் 10 ப்ரோ-வை உரிச்சி வச்ச மாதிரி இருக்கும்!

ஒன்பிளஸ் 10 ப்ரோ-வை உரிச்சி வச்ச மாதிரி இருக்கும்!

Steve Hemmerstoffer உடன் இணைந்து Smartprix வழியாக வெளியான சில ரெண்டர்கள் (அதாவது ஒரு தயாரிப்பு இப்படி இருக்கலாம் என்பதை காட்சிப்படுத்தும் புகைப்படங்கள்) வழியாக ஒன்பிளஸ் 10டி ஆனது "அச்சு அசல்" ஒன்பிளஸ் 10 ப்ரோவைப் போலவே ரியர் கேமரா செட்டப்பை பெறுவதை பார்க்க முடிகிறது.

இருந்தாலும் ஒன்பிளஸ் 10 ப்ராவில் காணப்படுவது போல் ஒன்பிளஸ் 10T ஆனது Hasselblad கேமராக்களுடன் வராது என்றும் தெரிகிறது.

அதே ரெண்டர்கள், ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போன் ஆனது "மீண்டும்" பிளாஸ்டிக் ஃப்ரேம் மற்றும் கிளாஸ் பேக்-ஐ பெறும் என்பதையும், இது க்ரீன் மற்றும் பிளாக் வண்ண விருப்பங்களில் வரும் என்பதையும் வெளிப்படுத்துகிறது.

OnePlus 10T சிப்செட், டிஸ்பிளே - எப்படி இருக்கும்?

OnePlus 10T சிப்செட், டிஸ்பிளே - எப்படி இருக்கும்?

இதுவரை வெளியான 'லீக்' தகவல்களின் படி, ஒன்பிளஸ் 10T ஆனது FHD+ ரெசல்யூஷன் மற்றும் 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் LTPO 2.0 E4 அமோஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கலாம்.

மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் உடனாக 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்படலாம்.

1-இன்ச் கேமராவுடன் வரும் அடுத்த Xiaomi போன்; iPhone-களின் ஆட்டம் முடிந்தது!1-இன்ச் கேமராவுடன் வரும் அடுத்த Xiaomi போன்; iPhone-களின் ஆட்டம் முடிந்தது!

கேமராக்கள் - கலக்குமா? குழப்புமா?

கேமராக்கள் - கலக்குமா? குழப்புமா?

முன்னரே குறிப்பிட்டபடி, இதில் Hasselblad கூட்டாண்மையின் கீழ் உருவான கேமராக்கள் இருக்காது. ஆனால், 10 ப்ரோ மாடலில் இருக்கும் கேமரா செட்டப் இடம்பெறும் என்கிற தகவல் எங்களுக்கே கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது; வெளியான பின்னரே அந்த குழப்பம் தீரும்.

மற்றபடி, இது ட்ரிபிள் ரியார்ட் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம். அதாவது 50MP மெயின் சென்சார் + 16MP வைட்-ஆங்கிள் லென்ஸ் + 2MP மேக்ரோ கேமரா இடம்பெறலாம். முன்பக்கத்தில் 32MP செல்பீ கேமரா உட்பொதிக்கப்படலாம்.

இந்த ஸ்மார்ட்போனில் 150W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,800mAh பேட்டரி பேக் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus 10T என்ன விலைக்கு அறிமுகமாகும்?

OnePlus 10T என்ன விலைக்கு அறிமுகமாகும்?

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் வெண்ணிலா OnePlus 10 மாடலை அறிமுகப்படுத்தவே இல்லை, எனவே OnePlus 10T மாடல் ஆனது 10 சீரீஸில் உள்ள ரூ.50,000 என்கிற வெற்றிடத்தை நிரப்பும் என்பது போல் தெரிகிறது.

நினைவூட்டும் வண்ணம், OnePlus 8T ஸ்மார்ட்போன் ரூ.42,999 என்கிற விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது, OnePlus 10R மற்றும் OnePlus 10 Pro மாடல்கள் ஆனது முறையே ரூ.38,999 மற்றும் ரூ.66,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இதை வைத்து பார்க்கும் போது, இந்தியாவில் ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் ஆனது சுமார் ரூ. 50,000 என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாக வாய்ப்புகள் அதிகம் என்பது வெளிப்படை!

Best Mobiles in India

English summary
Which is Better Buying OnePlus Nord 2T Or Wait for OnePlus 10T Expected to launch July 2022 in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X