"ப்ரோ" என்ற வார்த்தையில் தான் டுவிஸ்ட்: ஐபோன் 13 மற்றும் 13 ப்ரோ சாதனத்துக்குள் இருக்கும் வித்தியாசம் என்ன?

|

ஸ்மார்ட்போன்களை விட ஆப்பிள் ஐபோனுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். காரணம் ஐபோனின் தனித்துவமான அம்சங்களும் வடிவமைப்பும் தான். ஸ்மார்ட்போன்கள் ஐபோன்கள் என எந்த ஒரு சாதனம் அறிமுகமானாலும், ஒரு தொடரை (Series) குறிப்பிட்டு அதில் பல மாடல்களை உள்ளடக்கியே வெளியிடப்படும். எதற்கு ஒரு தொடரில் பல மாடல்கள் என்று பார்க்கலாம்.

ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 ப்ரோ சாதனத்தில் என்ன வித்தியாசம்?

ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 ப்ரோ சாதனத்தில் என்ன வித்தியாசம்?

எடுத்துக்காட்டுக்காக, ரெட்மி நோட் 11 சீரிஸ், சாம்சங் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் என ஸ்மார்ட்போன் தொடர்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த சீரிஸ்களில் ப்ரோ, மேக்ஸ், அல்ட்ரா என பல மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு காரணம், ஒரே தொடரிலும் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் பூர்த்தி செய்ய வெவ்வேறு விலைப் பிரிவில் மேம்பட்ட அம்சங்களை வழங்குவதற்கான நிறுவனங்களின் முயற்சியே ஆகும். அதன்படி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 ப்ரோ மாடல்களுக்குள் என்ன வித்தியாசம் என்று பார்க்கலாம்.

வாடிக்கையாளர்கள் குழப்பம்

வாடிக்கையாளர்கள் குழப்பம்

ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 ப்ரோ சாதனத்துக்கு மட்டும் விளக்கம் எதற்கு என்று தோன்றலாம். ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 ப்ரோ சாதனத்தை தேர்ந்தெடுப்பதில் பல வாடிக்கையாளர்களுக்கும் குழப்பம் இருக்கிறது. இதை பூர்த்தி செய்யவே இந்த தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய மாடல்களை போன்ற வடிவமைப்பு

முந்தைய மாடல்களை போன்ற வடிவமைப்பு

கடந்த செப்டம்பர் மாதம் ஆப்பிள் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 ப்ரோ மாடல்கள் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோவின் வாரிசாக வெளியிடப்பட்டது. புதிய ஐபோன் 13 சாதனமானது அதன் முந்தைய மாடல்களை போன்ற அதே வடிவமைப்பு, ஏ15 பயோனிக் சிப், நீண்ட கால பேட்டரி ஆயுள் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. இதையடுத்து ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 ப்ரோ சாதனங்களை ஒப்பிட்டு அதில் உள்ள வித்தியாசங்களை பார்க்கலாம். அதன்படி எந்த மாடலை வாங்கலாம் என்பதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம்.

பிளாட் எட்ஜ் ஸ்கொயர் வடிவமைப்பு

பிளாட் எட்ஜ் ஸ்கொயர் வடிவமைப்பு

ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 ப்ரோ ஆகிய இரண்டு சாதனங்களும் ஐபோன் 12 தொடரில் இருந்தது போன்றே அதே பிளாட் எட்ஜ் ஸ்கொயர் தொழில்துறை வடிவமைப்பைக் கொண்டுள்ளன. வடிவமைப்பு அடிப்படையில் இரண்டு சாதனங்களுக்கும் வேறு எந்த வித்தியாசமும் இல்லை.

இரண்டையும் வேறுபடுத்தி காட்டுவதற்கு ஒரே வழி

இரண்டையும் வேறுபடுத்தி காட்டுவதற்கு ஒரே வழி

ஐபோன் 13 ப்ரோ சாதனமானது ஆடம்பரமான தோற்றத்தை கொண்டிருக்கிறது. கையில் தொடக் கூடிய உணர்வு மிகவும் ப்ரீமியம் ஆக இருக்கிறது. அதேபோல் ஐபோன் 13 சாதனமானது நான்கு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இரண்டு சாதனங்களின் வடிவமைப்பும் ஒரே மாதிரியாக இருப்பதால் இரண்டையும் வேறுபடுத்தி காட்டுவதற்கு ஒரே வழி அதன் பின்புற பேனலில் பொருத்தப்பட்ட கேமரா வடிவமைப்பு மட்டுமே.

சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே

சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே

இரண்டு மாடல்களும் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. ஆனால் இரண்டு காட்சி ஆதரவுகளுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஐபோன் 13 சாதனம் 800 நிட்ஸ் பிரகாசத்தையும் ஐபோன் 13 ப்ரோ சாதனம் 1000 நிட்ஸ் பிரகாசத்தையும் கொண்டிருக்கிறது. அதேபோல் ஐபோன் 13 ப்ரோ மாடல் 120 ஹெர்ஸ் மோஷன் ரெஃப்ரெஷ் ரேட்டிங்கை கொண்டிருக்கிறது.

பெரிய மாற்றங்கள் இல்லாத சிப்செட்

பெரிய மாற்றங்கள் இல்லாத சிப்செட்

அதேபோல் ஐபோன் 13 மாடல் அதன் முந்தைய மாடல் ஐபோன் 12 போன்ற அதே 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக ஒப்பிடும் போது ஐபோன் 13 ப்ரோ வேகமான புதுப்பிப்பு வீதம் மற்றும் அதிக பிரைட்னஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 ப்ரோ சாதனங்களில் ஏ15 பயோனிக் சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு சிப்செட்கள் செயல்பாடுகளிலும் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.

மூன்று 12 எம்பி கேமராக்கள்

மூன்று 12 எம்பி கேமராக்கள்

இரண்டு சாதனங்களிலும் எளிதாக கண்டுபிடிக்கக் கூடிய அம்சம் அதன் கேமராக்கள் தான். காரணம் ஐபோன் 13 சாதனமானது இரட்டை 12 எம்பி கேமராக்களைக் கொண்டிருக்கிறது. ஐபோன் 13 ப்ரோ சாதனமானது மூன்று 12 எம்பி கேமராக்களைக் கொண்டிருக்கிறது. அதேபோல் ஐபோன் 13 ப்ரோ சாதனத்தில் டெலிபோட்டோ ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. பிற அம்சங்கள் இரண்டுக்கும் ஒத்ததாகவே இருக்கிறது. இரண்டின் முன்புறத்தில் ஒரே மாதிரியான அம்சங்கள் கொண்ட 12 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

3095 எம்ஏஎச் பேட்டரி உடன் ஐபோன் 13 ப்ரோ

3095 எம்ஏஎச் பேட்டரி உடன் ஐபோன் 13 ப்ரோ

ஐபோன் 13 சாதனமானது 3240 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. அதேபோல் ஐபோன் 13 ப்ரோ சாதனமானது 3095 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. அது ஏன் ப்ரோ மாடலை விட ஐபோன் 13 மாடலில் அதிக பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது என்ற கேள்வி வரலாம். இதை சரிசெய்ய நிறுவனம், ஐபோன் 13 ப்ரோ சாதனத்தில் ரெஃப்ரெஷ் ரேட் டெக்னாலஜி வழங்கப்பட்டிருக்கிறது. இது ஒளிக்கேற்ப காட்சி தன்மையை சரி செய்து கொள்கிறது. இதன்மூலம் ஐபோன் 13 ப்ரோ சாதனமானது 22 மணிநேர வீடியோ ப்ளேபேக் ஆதரவை வழங்குகிறது. அதேபோல் ஐபோன் 13 ஆனது 19 மணிநேர வீடியோ ப்ளேபேக் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

எதை வாங்கலாம் என்பது உங்கள் தீர்மானம்

எதை வாங்கலாம் என்பது உங்கள் தீர்மானம்

இரண்டு மாடல்களுக்கும் ஆன வித்தியாசங்கள் தெளிவாக தற்போது புரிந்திருக்கும். விலை அடிப்படையில் தங்களுக்கான தேவையான அம்சங்களை கருத்தில் கொண்டு எந்த மாடல்கள் வாங்கலாம் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Which is Best?- Iphone 13 Vs Iphone 13 pro: Specs Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X