Home
News

Jio 5G அறிமுகம் இந்த மாதமா? எந்த நகரங்களில் 5G முதலில் களமிறங்குகிறது? லிஸ்ட் இதோ!

எதிர்பார்த்ததை விட இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்துவிட்டது. இந்த 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா, அதானி குரூப்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் பங்கெடுத்துக்கொண்டன. இந்த 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் நடைபெற்ற கடும் போட்டியில், ரிலையன்ஸ் ஜியோ (Jio 5G) நிறுவனம் அதிக 5ஜி அலைக்கற்றைகளை வாங்கி முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஜியோ எவ்வளவு செலவு செய்தது தெரியுமா?

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஜியோ எவ்வளவு செலவு செய்தது தெரியுமா?

இதனுடன் நாட்டில் 5ஜி நெட்வொர்க் இம்மாத இறுதிக்குள் வெளிவரும் என்று கருதப்படுகிறது. ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் தங்களுக்குத் தேவையான அலைவரிசைகளை வாங்கியுள்ளது. இந்த 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அதிக அலைக்கற்றைகளை வாங்கிய நிறுவனமாக ஜியோ இருக்கிறது. ஜியோ இந்த ஏலத்தில் ரூ. 88,078 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது.

ஜியோவுக்கு சொந்தமான 24,740 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ர் அலைவரிசை

ஜியோவுக்கு சொந்தமான 24,740 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ர் அலைவரிசை

இந்த ஏலத்தின் முடிவில், ஜியோ நிறுவனம் ஒட்டுமொத்தமாக 24,740 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ர் அலைவரிசையை தனக்குச் சொந்தமாக்கியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனமானது பிரீமியம் 700 மெகா ஹெர்ட்ஸில் அலைக்கற்றைகளைப் பெற்ற ஒரே ஆபரேட்டராக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. ஜியோவுக்கு அதிகபட்ச நெட்வொர்க் ஒதுக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் எப்போது சேவைகள் தொடங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

5ஜி சேவை முதலில் எந்த நகரங்களில் எப்போது தொடங்கப்படும்?

5ஜி சேவை முதலில் எந்த நகரங்களில் எப்போது தொடங்கப்படும்?

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நிறைவடைந்தவுடன் ஜியோவின் புதிய தலைவர் கூறிய அறிவிப்பின் படி, 5ஜி சேவை இந்தியாவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்பாக துவங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், நிறுவனம் இன்னும் உறுதியான தகவலை வெளியிடவில்லை என்பதனால், 5ஜி சேவையின் அறிமுகம் இந்த மாத இறுதிக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி சேவை முதலில் எந்த நகரங்களில் தொடங்கப்படும்?

5ஜி சேவைக்காக மக்கள் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்?

5ஜி சேவைக்காக மக்கள் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்?

புதிய 5ஜி சேவைக்காக மக்கள் சேவைகளுக்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பத போன்ற முக்கியமான தகவல்களின் கணிப்பும் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஜியோ 5ஜி எப்போது வெளியாகும்? ஜியோ சுதந்திர தினத்தன்று அதாவது ஆகஸ்ட் 15 அன்று 5G சேவைகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்த தகவலை வெளியிடாமல் மௌனம் சாதிக்கிறது.

ஆகாஷ் அம்பானி சொன்ன மேட்டர் என்ன தெரியுமா?

ஆகாஷ் அம்பானி சொன்ன மேட்டர் என்ன தெரியுமா?

ஆனால், ரிலையன்ஸ் ஜியோவின் தலைவரான ஆகாஷ் அம்பானி, "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" உடன் 5ஜி துவக்கத்தைக் கொண்டாடப் போவதாக அறிவித்திருக்கிறார். ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜியோ 5ஜியை அறிமுகப்படுத்தினால், இந்தியா முழுவதிலும் உள்ள மெட்ரோ நகரங்களில் இது ஒரு பைலட் சோதனையாக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தெந்த இந்திய நகரங்களில் ஜியோ 5ஜி முதலில் அறிமுகம் செய்யப்படும்?

எந்தெந்த இந்திய நகரங்களில் ஜியோ 5ஜி முதலில் அறிமுகம் செய்யப்படும்?

டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, லக்னோ, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் ஜாம்நகர் உள்ளிட்ட ஒன்பது இந்திய நகரங்களில் 5ஜியை அறிமுகப்படுத்த ஜியோ திட்டமிட்டுள்ளது. இத்துடன் சேர்த்து வெகு விரைவில் மற்ற 1000 பிராந்தியங்களில் 5ஜி சேவையை வெளியிட ஜியோ திட்டமிட்டுள்ளது. குர்கான், நொய்டா மற்றும் பிற நகரங்களும் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Which Indian Cities Will Get The 1st Jio 5G Network Service This Month
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X