முதலில் உங்களுக்கு தான்- இந்த 13 நகர மக்கள் ரெடி ஆகிக்கோங்க, ரொம்ப நேரம் இல்ல!

|

இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்தார். 5ஜி சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் முதற்கட்டமாக எந்தெந்த நகரங்களில் அறிமுகமாகும் என்ற தகவலை விரிவாக பார்க்கலாம்.

இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) தொடக்க விழா

இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) தொடக்க விழா

இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பது ஏரத்தாள முடிவு செய்யப்பட்டு விட்டது.

இந்த போட்டியில் Reliance Jio மற்றும் Airtel முன்னிலையில் இருக்கிறது. செப்டம்பர் 29 ஆம் தேதி இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) தொடக்க விழாவில் இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக 5G சேவையை அறிமுகப்படுத்தும் என சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவித்தது.

4ஜியை விட 10 மடங்கு வேகம்

4ஜியை விட 10 மடங்கு வேகம்

இதை உறுதிப்படுத்தும் விதமாக சுதந்திர தின உரையில் விரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார். 5ஜி வேகமானது 4ஜியை விட 10 மடங்கு அதிகமாகும் இருக்கும் என அறிவிக்கப்பட்ட காரணத்தால் அனைவரும் 5ஜி இணைய வேகத்தை அனுபவிக்க தயாராகி வருகின்றனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே 5ஜி

தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே 5ஜி

விரைவில் 5ஜி அறிமுகமாகும் என்றாலும் படிப்படியாகவே ஒவ்வொரு பகுதிகளிலும் கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

அதன்படி, முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே 5ஜி சேவை கிடைக்கும். அது எந்தெந்த நகரம் என்று பார்க்கலாம்.

இந்தியாவில் முதல் கட்டமாக 13 நகரங்கள் 5G சேவை வேகத்தை ருசிக்க இருக்கின்றன.

எந்தெந்த நகரங்களில் 5G சேவை

எந்தெந்த நகரங்களில் 5G சேவை

13 நகரங்களின் பட்டியலை பார்க்கையில்,

அகமதாபாத்

பெங்களூரு

சண்டிகர்

சென்னை

டெல்லி

காந்திநகர்

குருகிராம்

ஹைதராபாத்

ஜாம்நகர்

கொல்கத்தா

லக்னோ

மும்பை

புனே

அறிமுகத்தின் போதே சேவைகள்

இந்த நகரங்களில் வசிக்கும் அனைவரும் 5ஜி அறிமுகத்தின் போதே இந்த சேவைகளை பெறுவார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை, சென்னை முதற்கட்ட 5ஜி அறிமுக நகரங்களில் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

இது வெளியான தகவல் மட்டுமே, அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இந்த 13 நகரங்களிலும் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே 5G அணுகல் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் 5ஜி சேவை

நாடு முழுவதும் 5ஜி சேவை

நகரம் முழுவதும் உள்ள மக்கள் 5G சேவையை பெறுவதற்கு குறிப்பிட்ட காலம் ஆகலாம். அதேபோல் நாடு முழுவதும் 5ஜி சேவைக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.

அலைக்கற்றை ஒதுக்கீடு கடிதம்

கடந்த வாரம், தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அலைக்கற்றை ஒதுக்கீடு கடிதங்களை வழங்கி 5G வெளியீட்டிற்குத் தயாராகும்படி தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களை கேட்டுக் கொண்டார்.

நாட்டில் 5ஜி சேவைக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தயாராகி வரும் அதே நேரத்தில், ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அதாவது இந்தியாவில் சமீப காலமாக அறிமுகம் செய்யப்படும் பெரும்பாலான போன்கள் 5ஜி சேவையைக் கொண்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் 5ஜி

அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் 5ஜி

சந்தையில் சமீபத்தில் அறிமுகமாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் 5ஜி ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ஆரம்பத்தில் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே 5ஜி ஆதரவு வழங்கப்பட்டு வந்தது, ஆனால் தற்போது மிட் ரேன்ஜ் மற்றும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களிலும் 5ஜி ஆதரவு வழங்கப்படுகிறது.

விலையும் அதிகம், வேகமும் அதிகம்

விலையும் அதிகம், வேகமும் அதிகம்

தொலைத்தொடர்பு நிறுவனங்களை பொறுத்தவரை, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் முதலில் இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது.

இந்த இரண்டு நிறுவனங்கள் கடந்த சில காலமாகவே 5ஜி சேவையை அறிமுகம் செய்ய முணைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இதில் ரிலையன்ஸ் ஜியோ தான் முதலில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் என கணிக்கப்படுகிறது.

4ஜி-யை விட 5ஜி சேவையின் வேகமும் அதிகமாக இருக்கும், விலையும் அதிகமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

4ஜி நெட்வொர்க் விலையை விட குறைந்தது 10% அதிகமாக இருக்கும் எனவும் 4ஜி-யை விட 10 மடங்கு அதிவேகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Where will 5G service be launched first? Which city in Tamil Nadu?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X