பூமியில் தண்ணீர் எப்படி உருவானது? சூரியன் தான் நமக்கு தண்ணீர் கொடுத்ததா? உண்மையை கட்டவிழ்த்த விஞ்ஞானிகள்..

|

நமது பால்வெளி மண்டலத்தில் உயிர் உள்ள ஒரே கிரகமாக நமது பூமி மட்டுமே திகழ்கிறது. இந்த பூமி கிரகத்தின் சிறப்பே இதில் உயிர்கள் உள்ளது என்று பலர் கூறினாலும், உண்மையில் எந்த கிரகத்திலும் இல்லாத ஒரு சிறந்த பொருளை இந்த பூமி கொண்டுள்ளது. அது தான் தண்ணீர். தண்ணீர் இருந்தால் மட்டுமே அந்த கிரகத்தில் உயிர்கள் உருவாகவும், உயிர் வாழவும் முடியும் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும். இதனால் தான் நமது பூமி கிரகம் சிறப்பானதாக இருக்கிறது. சரி, பூமி எப்படி உருவாகியது என்பது தெரியும். ஆனால், பூமியில் தண்ணீர் எப்படி உருவாகியது என்று உங்களுக்குத் தெரியுமா?

பூமியில் தண்ணீர் எப்படி உருவாக்கியது? நீண்ட நாட்கள் கழித்து கட்டவிழ்க்கப்பட்ட உண்மை

பூமியில் தண்ணீர் எப்படி உருவாக்கியது? நீண்ட நாட்கள் கழித்து கட்டவிழ்க்கப்பட்ட உண்மை

பூமியில் தண்ணீர் எப்படி உருவாக்கியது என்பதைத் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். பூமியில் தண்ணீர் எப்படி உருவாகியது என்பதற்கான சாத்தியங்களை இதற்கு முன்னர் வரை பலதரப்பட்ட கருத்துக்கள் மூலம் விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியிருந்தாலும். அது எதுவும் நிரூபிக்க முடியாமல் இருந்தது என்பதே உண்மை. ஆனால், நீண்ட நாட்களுக்குப் பிறகு, இப்போது விஞ்ஞானிகள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டனர். பூமியில் தண்ணீர் எப்படி உருவாகியது என்பதற்கான உண்மை பின்னணியை விஞ்ஞானிகள் தற்பொழுது வெளியிட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த சூரிய குடும்பத்தில் பூமி மட்டும் ஏன் ப்ளூ பிளானட் என்று அழைக்கப்படுகிறது?

ஒட்டுமொத்த சூரிய குடும்பத்தில் பூமி மட்டும் ஏன் ப்ளூ பிளானட் என்று அழைக்கப்படுகிறது?

நமது பால்வெளி மண்டலத்தில் இருக்கும் ஒட்டுமொத்த கிரகத்தின் பிரமிக்க வைக்கும் கிரகமாகத் திகழும் நமது பூமி கிரகமானது, நீரின் அளவு காரணமாகத் தனித்து நிற்கிறது. பூமி பெரும்பாலும் "தி ப்ளூ பிளானட்" என்று இதனால் தான் குறிப்பிடப்படுகிறது. இப்போது, ​​பூமியில் தண்ணீர் எங்கிருந்து வந்தது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்து, அதற்கான உண்மை விளக்கத்தையும் வெளியிட்டுள்ளனர். உண்மையைச் சொல்லப் போனால், இவர்கள் கூறியுள்ள காரணத்தை நீங்கள் நம்ப வாய்ப்பில்லை என்றே கூறலாம். காரணம், பூமியில் நீர் உருவாகியதற்குச் சூரியன் முக்கிய காரணமாக இருந்துள்ளது.

'ஓ மை காட்' உலகமே பயன்படுத்தும் இந்த 15 விஷயங்களை இந்தியர்களா கண்டுபிடித்தார்கள்? சத்தியமா நம்ப மாட்டீங்க..'ஓ மை காட்' உலகமே பயன்படுத்தும் இந்த 15 விஷயங்களை இந்தியர்களா கண்டுபிடித்தார்கள்? சத்தியமா நம்ப மாட்டீங்க..

பூமியில் உள்ள 70 சதவீத தண்ணீர் எங்கிருந்து உருவானது?

பூமியில் உள்ள 70 சதவீத தண்ணீர் எங்கிருந்து உருவானது?

பூமியின் மேற்பரப்பில் சுமார் 70 சதவீதம் நீரால் ஆனது என்பதை நாம் பள்ளிக்கூட படங்களில் இருந்து படித்து வருகிறோம். இந்த 70 சதவீத தண்ணீர் பூமியில் உருவாக முதல் காரணமாகக் கூறப்படுவது கார்பனேசியஸ் அல்லது வெறுமனே "சி-வகை சிறுகோள்கள்" என்று அழைக்கப்படும் சிறுகோள்களின் தாக்குதல் காரணமாக உருவாகியிருக்கலாம் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சிறுகோள் குழுவிலிருந்து தான் பூமிக்கு நீர் வந்திருக்க வாய்ப்புள்ளதாக முன்னர் இருந்தே விஞ்ஞானிகள் சந்தேகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டும் காரணமாக இருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கூற காரணம் என்ன?

இது மட்டும் காரணமாக இருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கூற காரணம் என்ன?

இருப்பினும், இது மட்டும் காரணமாக இருக்க முடியாது என்பதை உணர்ந்த விஞ்ஞானிகள் தொடர்ந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, பூமியில் தண்ணீர் எப்படி உருவாகியது என்பதை நிரூபிக்க முயன்று வந்தனர். இறுதியாக, விஞ்ஞானிகள் இப்போது நிரப்பியிருக்கக்கூடிய ஒரு இடைவெளி கண்டறிந்துள்ளனர். பூமியின் நீர் டியூட்டீரியத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், இது சி டைப் சிறுகோள் தாக்குதல் காரணமாக நமது கிரகத்தில் இருக்கும் நீரின் ஒரே ஆதாரமாக மாறியிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அடிப்படையில் இவை ஹைட்ரஜனின் கனமான பதிப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாக்கவே பயங்கரமா இருக்கு: கரைக்கு வந்த 'ஆழக்கடல் மான்ஸ்டர்'! இணையத்தை வியப்பில் ஆழ்த்திய கடல் உயிரினம்..பாக்கவே பயங்கரமா இருக்கு: கரைக்கு வந்த 'ஆழக்கடல் மான்ஸ்டர்'! இணையத்தை வியப்பில் ஆழ்த்திய கடல் உயிரினம்..

சூரியன் தான் நமக்குத் தண்ணீர் கொடுத்ததா?

சூரியன் தான் நமக்குத் தண்ணீர் கொடுத்ததா?

பூமியில் நீரை உருவாக்குவதில் நமது சூரியன் முக்கிய பங்காற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகள் விஞ்ஞானிகளுக்குச் சாதமான பதில் கிடைத்துள்ளது. சூரியக் காற்றுகள் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் அயனிகளால் சார்ஜ் செய்யப்படுகின்றன, அவை சிறுகோள்கள் அல்லது சிறுகோள் தூசியுடன் தொடர்பு கொண்டால், காற்றில் உள்ள ஹைட்ரஜன் அயனிகள் சிறுகோளில் உள்ள ஆக்ஸிஜன் அணுக்களுடன் தொடர்புகொண்டு பூமியில் H20 மூலக்கூறை உருவாக்கி இருக்கும் என்பதை இது குறிக்கிறது.

ஜப்பானிய விண்வெளி ஏஜென்சியின் ஹயபுசா கொண்டுவந்த இடோகாவா சிறுகோள்

ஜப்பானிய விண்வெளி ஏஜென்சியின் ஹயபுசா கொண்டுவந்த இடோகாவா சிறுகோள்

பூமியின் பரந்த நீர்நிலைகளில் சூரியனின் பங்குக்கான முதல் ஆதாரம் ஜப்பானிய விண்வெளி ஏஜென்சியின் ஹயபுசா விண்வெளி ஆய்வு மூலம் 2010 இல் பூமிக்கு வாங்கப்பட்ட இடோகாவா என்ற சிறுகோள் மாதிரிகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது பூமியில் எப்படி நீர் உருவாகியது என்ற ஆராய்ச்சிக்கு முக்கிய பங்கை வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. நீண்ட காலமாக இருந்த குழப்பத்திற்கு, இப்போது முடிவு கிடைத்துவிட்டது. பூமியில் தண்ணீர் உருவாகியதற்குச் சூரியன் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளது என்பதை விஞ்ஞானிகள் இப்போது நிரூபித்துள்ளனர்.

Google இல் இப்படி கூட சர்ச் செய்யலாமா? டாப் 10 டிப்ஸ்.. ஃபாஸ்டான சர்ச்சுக்கு இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..Google இல் இப்படி கூட சர்ச் செய்யலாமா? டாப் 10 டிப்ஸ்.. ஃபாஸ்டான சர்ச்சுக்கு இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

பூமியில் தண்ணீர் உருவாக்கியதற்கு சூரியன் மற்றும் சிறுகோள் தான் காரணம்

பூமியில் தண்ணீர் உருவாக்கியதற்கு சூரியன் மற்றும் சிறுகோள் தான் காரணம்

நேச்சர் வானியல் இதழில் திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், விஞ்ஞானிகள் பூமியில் தண்ணீருக்குப் பங்களிப்பவர்களில் முக்கிய காரணிகளில் ஒன்றாகச் சூரியனை உறுதிப்படுத்தியுள்ளனர் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியக் காற்றிலிருந்து வரும் ஹைட்ரஜனும் சிறுகோள்களில் இருந்து வெளியான டியூட்டீரியமும் இணைந்து தான் பூமியில் இன்று நாம் உயிர் வாழ முக்கிய காரணமாக அமைந்துள்ள நீரை உருவாக்க முக்கிய முதுகெலும்பாகச் செயல்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பூமி பற்றி இன்னும் ஏரளமான சுவாரசியமான தகவல்கள் பற்றி அறிந்திட

பூமி பற்றி இன்னும் ஏரளமான சுவாரசியமான தகவல்கள் பற்றி அறிந்திட

இந்த தகவல் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். விஞ்ஞானிகள் இப்போது கூறுவது போல் பூமியில் நீர் ஒரு மூலத்திலிருந்து வந்ததா அல்லது பல மூலங்களிலிருந்து வந்ததா? என்று இனி யாரும் கேட்டால், இந்த உண்மையை விளக்கிச் சொல்லுங்கள். பூமி தொடர்பான இன்னும் பல சுவாரசியமான தகவல்களுக்கு மற்றும் தொழில்நுட்பம், அறிவியல், ஸ்மார்ட்போன் போன்ற அதிநவீன செய்திகள் பற்றி உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். மேலும், எங்கள் பக்கத்தில் உள்ள மற்ற பூமி தொடர்பான செய்திகளையும் படியுங்கள்.

Best Mobiles in India

English summary
Where Water On Earth Came From Finally Scientists Include Sun And Asteroids As Answer : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X