குற்றம் குற்றமே., பிழையை திருத்தனும்: டுவிட்டரில் நீ சொன்ன அம்சம் எங்கே?- "மகனிடம் கேள்வி எழுப்பிய மஸ்க் தாய்"
டுவிட்டரில் பயனர் ஒருவர் ஆக்ரா செங்கோட்டை குறித்து பதிவிட்ட பதிவுக்கு எலான் மஸ்க் ரிப்ளை செய்திருந்தார். அதில், ஆக்ராவில் அற்புதமான வியப்புக்குரிய இடம், 2007 ஆம் ஆண்டு இந்தியா வந்த போது தாஜ்மஹாலை பார்த்தேன், உண்மையில் உலக அதிசியங்களில் ஒன்று என மஸ்க் பதிலளித்தார்.

மே மஸ்க் பதிவிட்ட டுவிட்
தொடர்ந்து எலான் மஸ்க்கின் தாயாரும், பிரபல எழுத்தாளருமான மே மஸ்க்-ம் 2007 ஆம் ஆண்டு தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்ததாகவும், அது மகிவும் அழகாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மே மஸ்க், அதில் மஸ்க்கின் தாத்தா பாட்டி தாஜ்மஹாலுக்கு சென்ற நிகழ்வை குறிப்பிட்டுள்ளார். 1954 ஆம் ஆண்டில், மஸ்கின் தாத்தா பாட்டி தென்னாப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா செல்லும் வழியில் பறந்தனர். அப்போது தாஜ்மஹாலுக்கு சென்றிருக்கின்றனர். ரேடியோ மற்றும் ஜிபிஎஸ் இல்லாத காலக்கட்டத்தில் ஒற்றை எஞ்சின் ப்ரொப்பல்லர் விமானத்தில் அவர்கள் பறந்து சென்றிருக்கின்றனர். இந்த பயணத்தை மேற்கொண்டவர் இவர்கள் மட்டுமே என குறிப்பிட்டு மே மஸ்க் டுவிட் செய்துள்ளார்.

டுவிட்டில் எடிட் பட்டன் அம்சம்
தொடர்ந்து மே மஸ்க் அடுத்ததாக ஒரு புதிய டுவிட்டை பதிவு செய்திருந்தார். அந்த டுவிட்டில் தாஜ்மஹாலுக்கு சென்றது 2007 ஆம் ஆண்டில் இல்லை 2012 ஆம் ஆண்டு என குறிப்பிட்டுள்ளார், அதே டுவிட்டில் எடிட் பட்டன் அம்சம் குறித்து டுவிட்டரிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார். மே மஸ்க் பதிவிட்ட டுவிட்டில், "2012 ஆம் ஆண்டு தாஜ்மஹாலுக்கு சென்றது, 2007 என்று தவறாக குறிப்பிட்டுவிட்டேன், அந்த எடிட் பட்டன் எங்கே? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆக்கப்பூர்வமான அம்சங்கள் விரைவில்
டுவிட்டர் பயனர்கள் பல ஆண்டுகளாக டுவிட்டரில் எடிட் பட்டன் அம்சம் கோரி வருகின்றனர். நிறுவனம் தற்போது இந்த அம்சத்தில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. டுவிட்டரை வாங்குவதற்கு முன்பே எலான் மஸ்க், டுவிட்டரில் அறிமுகம் செய்யப்படக் கூடிய பல ஆக்கப்பூர்வமான அம்சங்கள் குறித்து தெரிவித்துள்ளார். அதில் ஒன்று எடிட் பட்டன் தேவை என்பதாகும். எலான் மஸ்க் பயனர்களிடம் டுவிட்டரில் எடிட் பட்டன் தேவையா? என வாக்கெடுப்பு நடத்தினார். இதில் 73.6% பயனர்கள் டுவிட்டரில் இந்த அம்சம் வேண்டும் என தெரிவித்தனர், அதேபோல் 26.4% பேர் எதிராக வாக்களித்தனர். ஏப்ரல் மாதத்தில் டுவிட்டர் பயனர்கள் தங்கள் டுவிட்களை பதிவிட்ட பிறகு அவற்றை திருத்த அனுமதிக்கும் பட்டனுக்கான அம்சத்தில் பணிபுரிவதாக அறிவித்தது.

டுவிட்டரில் பல்வேறு மாற்றங்கள்
எடிட் பட்டன் தேவை, ப்ளூ டிக் ப்ரீமியம் சந்தா சேவை கட்டணம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை டுவிட்டரில் எலான் மஸ்க் மேற்கொள்ள இருக்கிறார். டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு முன்னரே எலான் மஸ்க், டுவிட்டரில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து பல ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். டுவிட்டரை வாங்கிய மஸ்க், டுவிட்டர் சாதாரண பயனர்களுக்கு எப்போது போல் இலவசமாக இருக்கும் எனவும் ஆனால் வர்த்தக ரீதியாக அல்லது அரசு சார்ந்து டுவிட்டரை பயன்படுத்துவோருக்கு சிறிய கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மோசமான விமர்சகர்கள் கூட டுவிட்டரில் இருப்பார்கள்
டுவிட்டரின் பெரும் பங்குகளை வாங்கிய எலான் மஸ்க், அதை தன் வசமாக்க பெரும் முயற்சியை மேற்கொண்டார். டுவிட்டருக்கு டிமான்ட் வைத்து அதை வாங்கத் தயார் என மஸ்க் கூறினார். அதன்படி மஸ்க்கிற்கு டுவிட்ரை விற்க இயக்குனர் குழு ஒப்புக் கொண்டது. எலான் மஸ்க் டுவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு விற்க டுவிட்டர் நிறுவனம் ஒப்புக் கொண்டது. இதன்பின் டுவிட்டரின் உரிமையாளராக தனது டுவீட்டை மஸ்க் பதிவிட்டார். அதில், எனது மோசமான விமர்சகர்கள் கூட டுவிட்டரில் இருப்பார்கள் என நம்புகிறேன் ஏனெனில் அதுதான் பேச்சு சுதந்திரம் என மஸ்க் டுவிட் செய்தார்.


Click it and Unblock the Notifications