யாகூவிடம் அடிமாடு விலைக்கு போக இருந்த கூகுள் கதை.! இன்னைக்கு நிலைமை என்ன?

அமெரிக்காவின் ஸ்ரான்போட் (ஸ்டார்ன் போர்டு) பல்கலைக் கழகப் பட்டதாரிகளான டேவிட் பிலோ, ஜெரி ஜாங் என்பவர்களால் ஜனவரி 1994-ல் ஆரம்பிக்கப் பட்டு 2 மார்ச் 1995 இல் யாகூ நிறுவனம் ஒருங்கிணைக்கப்பட்டது.

|

ஆட்டாத ஆட்டம் எல்லாம் பேட்டாவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா....மா.... ஆ.... ஆ.. என மௌனம் பேசியததே படத்தில் நடிகர் சூரியா பாடிய போது புரியவில்லை.

 யாகூவிடம் அடிமாடு விலைக்கு போக இருந்த கூகுள் கதை.!

ஆனால் தற்போது இந்த வரிகளின் பின்னணி தமிழருக்காக இல்லை இந்தியருக்கா என்று நினைத்து இருந்தோம். இது யாகூ நிறுவனத்திற்கும் பொருந்துவதாக உள்ளது. இதுகுறித்து ஸ்சுவாரசியமான தகவல் கீழே இருக்கின்றது.

யாகூ நிறுவனம் தொடக்கம்:

யாகூ நிறுவனம் தொடக்கம்:

அமெரிக்காவின் ஸ்ரான்போட் (ஸ்டார்ன் போர்டு) பல்கலைக் கழகப் பட்டதாரிகளான டேவிட் பிலோ, ஜெரி ஜாங் என்பவர்களால் ஜனவரி 1994-ல் ஆரம்பிக்கப் பட்டு 2 மார்ச் 1995 இல் யாகூ நிறுவனம் ஒருங்கிணைக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் கலிபோர்னியாவில் உள்ளது.

யாகூவின் சேவைகள்:

யாகூவின் சேவைகள்:

யாகூ நிறுவனம் இணைதள தேடல், யாகூ மெயில், யாகூ மெஸ்சேஞ்சர் என்று தனது மேம்பாடுகளை வளர்த்து கொண்டது. மேலும் வர்த்தக ரீதியாகவும் யாகூ நிறுவனம் இணைதள சந்தையில் கொடி கட்டி பறந்தது கொண்டிருந்தது.
உலகம் முழுக்க யாகூவின் இணைதள தேடலையோ, மெயிலையோ, மெஸ்சேஞ்சரையோ யாரும் பயன்படுத்தாவர்கள் இருக்க முடியாது என்று கூறலாம்.

கூகுள் வருகை:

கூகுள் வருகை:

கூகுள் இணைதள தேடல் 1998ல் லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகியோரால் அமெரிக்காவில் 1998ம் ஆண்டு துவங்கப்பட்டது. இணைதளத்தில் முதலில் தேடலும், சாதாரணமாக ஜி மெயில் பொது மக்கள் பயன்படுத்து அளவுக்கு கூகுள் நிறுவனம் உருவாக்கி இருந்தது.

யாகூ ஆதிக்கம்:

யாகூ ஆதிக்கம்:

1990ம் ஆண்டுகளில் யாகூ நிறுவனம் இணைதள சந்தையில், கொடிகட்டி பறந்து கொண்டிருந்தது. வர்த்த ரீதியாகவும் விளம்பர யுகத்திகளை கையாளுவதிலும் முன்னிலை பெற்றதால், யாகூவின் அபார வளர்ச்சியால் கோடிகளை குவித்தது. யாகூவின் வளர்ச்சி சிறிய நிறுவனமான இருந்த கூகுளை என்னவென்று கேட்டது.

யாகூவை அணுகிய கூகுள்:

யாகூவை அணுகிய கூகுள்:

1998 ஆம் ஆண்டில் கூகிள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் யாஹூவை அணுகினர். அதன் பேஜ் தரவரிசையை ( இந்திய மதிப்பில் ரூ. 7,09,45,000) $ 1 மில்லியனுக்கும் குறைவாக வாங்கியது. கூகுள் நிறுவனர்கள் இருவரும் ஸ்டான்ஃபோர்டில் படிப்பில் கவனம் செலுத்த விரும்பினர். ஆனால் பயனர்கள் தங்கள் சொந்த மேடையில் அதிக நேரத்தை செலவிட விரும்பியதால், தொழிலை மேம்படுத்த விரும்பவில்லை. அப்போது உடன்பாடு ஏற்படதால், யாகூ நிறுவனம் கூகுளை வாங்க மறுத்துவிட்டது.

பேஜ் ரேங்க்:

பேஜ் ரேங்க்:

கூகுள் நிறுவனம் பேஜ் ரேங்க் எனப்படும் கூகுள் தேடலில் காட்டப்படும் வரிசையில் வளைதங்களை மதிப்பிடும் பரின் மற்றும் பக்கத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு படி முறை இருந்தது. இது லேரி பேஜ் என பெயரிடப்பட்டது. இது வளைதளங்களை அளவிடும் ஒரு வழி. இதில் முன்னேற்றம் ஏற்பட்டதால் இவர்களுக்கு போதிய வருவாய் கிடைத்தது. இதை வைத்து கூகுள் நிறுவனர்கள் தங்கள் தொழிலை மேம்டுபத்தினர்.

மூன்றாம் தரப்பு ஆன்லைன் வருமானம்:

மூன்றாம் தரப்பு ஆன்லைன் வருமானம்:

இந்நிலையில் கூகுள் நிறுவனம் மூன்றாம் தரப்பில் இருந்து ஆன்லைன் விளம்பர வருவாயின் முக்கியத்துவத்தை விரைவில் கொண்டுவந்தது. பிறகு கூகுள் ஏடுவேட்ஸ் AdWords உருவாக்கிய பின்னர் வருமானத்தையும் உணர்ந்தது.

2ம் முறையும் கூகுளை தவறவிட்ட யாகூ:

2ம் முறையும் கூகுளை தவறவிட்ட யாகூ:

கடந்த 2002ம் ஆண்டு மீண்டும் ஒருமுறை யாகூவிடம் $3 பில்லியனுக்கு (இந்திய ரூபாயில் 2,12,82,75,00,000) விற்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டது. பிறகு யாகூ நிறுவனத்திடம் இதுகுறித்து பேசப்பட்டது. அப்போது யாகூ தலைமை டெர்ரி செசெமல் இந்த வாய்பை மறுத்துவிட்டார்.

கூகுளின் வளர்ச்சி:

கூகுளின் வளர்ச்சி:

கூகுள் நிறுவனம் அதன் பிறகு படிப்படியாக வளர்ந்தது. கூகுளின் மிக விரைவான வளர்ச்சியால், பல புதிய மென்பொருள் சேவைகளையும் நிறுவனம் நிறுவியது. தற்போது கூகுள் இணையத் தேடலுடன் கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்ட்கள், கூகுள் பிளஸ், கூகுள் டாக், கூகுள் வரைபடம், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப், கூகுள் டிரைவ், கூகுள் டியோ போன்ற பல்வேறு சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது.

முடிசூடான மன்னன் கூகுள்:

முடிசூடான மன்னன் கூகுள்:

தற்போது இணைய உலகின் தேடல் மட்டும் அல்லாமல், பல்வேறு பொழுது போக்கு அம்சங்களையும் கொண்டு கூகுள் நிறுவனம் இணைய உலகத்தில் தற்போது முடி சூடான மன்னாக விளங்குகின்றது.

யாகூவின் வீழ்ச்சி:

யாகூவின் வீழ்ச்சி:

கூகுள் நிறுவனத்தின் குரோம் வந்த பிறகு யாகூ நிறுவனம் உடனடியாக சரிவை சந்திக்க துவங்கியது. பிறகு சரியாக திட்டமிடாததாலும் தன்னுடையை வளர்ச்சியை நிறுத்தியதாலும் கீழே விழுந்து விட்டது. தற்போது யாகூ நிறுவனத்தை $ 4.48 பில்லியன் டாலர் ( இந்திய ரூபாய் மதிப்பில் 3,17,69,92,00,000) வெரிசோன் நிறுவனம் வாங்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J2 Core smartphone was launched in August 2018 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X