பிஎஸ்என்எல் 4ஜி சேவை எப்போது அறிமுகமாகும் ? தற்போதைய நிலை என்ன?
பிஎஸ்என்எல் இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் நான்காவது பெரிய பொதுத்துறை நிறுவனமாகும். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட சிறந்த திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அதுவும் மலிவு விலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் பல திட்டங்களை வைத்துள்ளது.

ஆனாலும் ஜியோ, ஏர்டெல் உட்பட பல தனியார் நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்கிறது. பின்பு இந்த தனியார் நிறுவனங்கள் 5ஜி சேவையை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. இருந்தபோதிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னமும் 4ஜி சேவையை வழங்கவில்லை.

அண்மையில், கடுமையான நிதி நெருக்கடியால் மூடலின் விளிம்பில் இருந்த பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது பல மேம்பாடுகளுடன் அருமையாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 4ஜி உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மொபைல் சேவையை வழங்கி வருகின்றன. ஆனால் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம்
இப்போது வரை 4ஜி உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மொபைல் சேவையை வழங்க மத்திய அரசு அனுமதி மறுத்து வருகிறது.

பின்பு நீண்ட கால தாமத்துக்குப் பிறகு, 8 ஆண்டுகள் கழித்து, கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மொபைல் சேவை வழங்க அனுமதித்தது. ஆனால் ஓராண்டு ஆகியும் இதுவரை அந்த முடிவை அமல்படுத்தவில்லை. பிஎஸ்என்எல் நிறுவனம் இன்றுவரை 3ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் மொபைல் சேவையை வழங்கி வருகிறது. இதனால் தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

அண்மையில் இந்தியாவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை வர்த்தக வெளியீடு பற்றி மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் விரைவில் முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாக உள்ளது. ஆனாலும் 4ஜி சேவை அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இருந்தபோதிலும் அரசாங்கம் விரைவில் இதுபற்றிய அறிவிப்பை வெளியிடும் என தெரிகிறது.

வர்த்தக ரீதியில் 4ஜி வெளியீட்டு விவகாரத்தில் நாங்கள் எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்க முடியாது. மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் தான் இதுபற்றிய இறுதி முடிவை எடுக்க வேண்டும் என மூத்த அதிகாரி ஒருவர் தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்
தெரிவித்து இருக்கிறார்.

அதேபோல் பிரதமர் மோடி விரைவில் அமலாக்க விரும்பும் 5ஜி உயர் தொழில்நுட்பம் மொபைல் சேவையையும் தனியார் நிறுவனங்கள் தான் வழங்க காத்திருக்கின்றன. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மொபைல் சேவையின் தரத்தை உயர்த்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பிரதமரின் இந்த அறிவிப்பு பிஎஸ்என்எல் ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications