இந்தியாவிற்கு 5G வந்துடுச்சு.! ஓகே.! எங்க போனுக்கு எப்போப்பா வரும்? இதோ முழுத் தகவல்.!

|

எங்கு திரும்பினாலும் 5ஜி (5G) நெட்வொர்க் சேவை பற்றி தான் பேச்சாக இருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில், இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, உங்க போன்ல 5ஜி கிடைச்சுதா..?

உங்க போன்ல 5ஜி சப்போர்ட் இருக்கா.! இல்லையா?, என் போன்ல எப்படி 5ஜி ஆக்டிவேட் செய்வது? என்று ஊர் முழுக்க ஒரே 5ஜி தொடர்பான பேச்சு தான் நிரம்பியுள்ளது.

5ஜி வந்துச்சா..! இல்லை இன்னும் வரல..! 4ஜி தான் காட்டுது..!

5ஜி வந்துச்சா..! இல்லை இன்னும் வரல..! 4ஜி தான் காட்டுது..!

என்ன தான் இந்தியாவில் 5ஜி (5G) அறிமுகம் செய்யப்பட்து என்றாலும், இன்னும் போன்களில் 5ஜியை பார்க்க முடியவில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாகி போச்சு இந்த 5ஜி ஆட்டம்.

5G இந்தியாவில் படிப்படியாக வெளிவரத் தொடங்கியுள்ளது என்கிறது டெலிகாம் நிறுவனங்கள். ஆனால், 'எங்க இன்னும் வரல' என்று மக்களின் மைண்ட் வாய்ஸ் உரக்கக் கேட்கிறது.

இந்த 5ஜி நெட்வொர்க் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

இந்த 5ஜி நெட்வொர்க் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதனால் காத்திருக்க யாருக்கும் விருப்பமில்லை என்பதே உண்மை.

சமீபத்தில், ஏர்டெல் (Airtel) மற்றும் ஜியோ (Jio) நிறுவனங்கள் தங்களின் 5ஜி மொபைல் நெட்வொர்க்கை மும்பை, டெல்லி, வாரணாசி, ஹைதராபாத் மற்றும் சில நகரங்களில் கிடைக்க செய்துள்ளன.

மார்ச் 2024-க்குள் 5ஜி சேவை முழுமையான பான்-இந்தியாவில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சரி, இதை விடுங்க, இந்த 5ஜி நெட்வொர்க் யாருக்கெல்லாம் கிடைக்கும் அதை மொத சொல்லுங்க.. அதானே.!

ரூ.699 முதல் வாட்டர் ஹீட்டர்-ஆ.! அடடே.! இவ்வளவு கம்மி விலையில் இத்தனை மாடலா?ரூ.699 முதல் வாட்டர் ஹீட்டர்-ஆ.! அடடே.! இவ்வளவு கம்மி விலையில் இத்தனை மாடலா?

கையில் 5G போன் இருந்தும் இன்னும் 5ஜி கிடைக்கவில்லையா? காரணம் இது தான்.!

கையில் 5G போன் இருந்தும் இன்னும் 5ஜி கிடைக்கவில்லையா? காரணம் இது தான்.!

சொல்கிறோம்.. 5G நெட்வொர்க் உடன் இணக்கமான போனைக் (5G Network Supporting Phones) கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் இந்த புதிய 5ஜி சேவை கிடைக்கும்.

ஆனால், 5ஜி டிவைஸ் (5G Device) கையில் இருந்தும் இன்னும் 5ஜி நெட்வொர்க் கிடைக்கவில்லை என்று மக்கள் புகாரளித்துள்ளனர்.

இதற்கான காரணம், OEMகள் 5G அணுகலைச் செயல்படுத்தும் சாப்ட்வேர் அப்டேட்டை (Software Update) இன்னும் வெளியிடவில்லை என்பதே சிக்கலாக இருக்கிறது.

5ஜி கிடைக்கும் ஆண்ட்ராய்டு போன் லிஸ்ட் ஒகே.! ஐபோன் லிஸ்ட் என்னாச்சு?

5ஜி கிடைக்கும் ஆண்ட்ராய்டு போன் லிஸ்ட் ஒகே.! ஐபோன் லிஸ்ட் என்னாச்சு?

ஏர்டெல் ஏற்கனவே Samsung, Realme, Xiaomi, Vivo, iQOO, OPPO போன்ற பல்வேறு பிராண்டுகளின் ஆதரிக்கப்படும் 5G ஸ்மார்ட்போன் மாடல்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இது முழுமையாக ஆண்ட்ராய்டு பக்கத்தை உள்ளடக்கியது என்பதனால், ஐபோன் (iPhone) பயனர்கள் குழப்பத்திலும், சந்தேகத்திலும் மூழ்கியுள்ளனர். புதிய ஐபோன் மாடல் கையில் இருந்தும் ஏன் இன்னும் 5ஜி கிடைக்கவில்லை? என்பது தான் ஆப்பிள் பயனர்களின் கேள்வியாக இருக்கிறது.

இந்த லிஸ்ட்ல உங்க போன் இருந்தா நீங்க லக்கி.! இல்லனா 5G யூஸ் பண்ண வாய்ப்பே இல்லை.!இந்த லிஸ்ட்ல உங்க போன் இருந்தா நீங்க லக்கி.! இல்லனா 5G யூஸ் பண்ண வாய்ப்பே இல்லை.!

iPhone பயனர்களுக்கு கொஞ்சம் சங்கடமான செய்தி தான் இது.!

iPhone பயனர்களுக்கு கொஞ்சம் சங்கடமான செய்தி தான் இது.!

உண்மையை, சொல்ல எங்களுக்கே கொஞ்சம் சங்கடமாகத் தான் இருக்கிறது.

என்ன தான் அதிக காசு கொடுத்து, லேட்டஸ்ட் ஐபோன் மாடலை (Latest iPhone Models) நீங்கள் வாங்கி இருந்தாலும், உங்களுக்கு, 5ஜி இப்போதைக்குக் கிடைக்கப் போவதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.

காரணம், ஆப்பிள் நிறுவனம் இப்போதைக்கு 5ஜி இணக்கத்திற்கான சாப்ட்வேர் அப்டேட்டை (5G support software update) வெளியிடப் போவதில்லை என்று தெரிவித்துவிட்டது.

அப்படியானால், ஐபோனில் 5ஜி எப்போது கிடைக்கும்?

அப்படியானால், ஐபோனில் 5ஜி எப்போது கிடைக்கும்?

அப்படியானால், ஐபோன் பயனர்களுக்கு எப்போது 5ஜி சேவை கிடைக்கும் என்பது தான் உங்களுடைய அடுத்த கேள்வி.! வாங்கச் சொல்கிறோம்.

5G நெட்வொர்க்கிற்கான சாதனங்களைச் சோதித்துச் சரிபார்த்த பிறகு, டிசம்பர் மாத இறுதிக்குள் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன்களுக்கான 5G அப்டேட்டை கொண்டுவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 12 மாடலுக்கு மேல் உள்ள அனைத்து ஐபோன்களிலும் 5ஜி ஆதரவு டிசம்பர் மாதத்தில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jio 5G & Airtel 5G யூஸ் பண்ண புது சிம் கார்டு வாங்க வேண்டுமா? உடனே படிங்க.!Jio 5G & Airtel 5G யூஸ் பண்ண புது சிம் கார்டு வாங்க வேண்டுமா? உடனே படிங்க.!

பல ஸ்மார்ட்போன் மாடல்கள் சமீபத்திய 5ஜி வேகத்தில் இயங்கவில்லையா?

பல ஸ்மார்ட்போன் மாடல்கள் சமீபத்திய 5ஜி வேகத்தில் இயங்கவில்லையா?

ஏர்டெல் மற்றும் ஜியோ 5ஜி ஆபரேட்டர்கள் ஏற்கனவே மும்பை மற்றும் புதுதில்லியில் பல ஐபோன் மாடல்களில் ஆப்பிள் 5ஜி சோதனையைச் செய்து வருவதாக சமீபத்திய தகவல் குறிப்பிடுகிறது.

ஆனால், பல ஸ்மார்ட்போன் மாடல்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அதிவேக இணைப்பிற்கு இன்னும் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால், உரிய சாப்ட்வேர் அப்டேட் வரும் வரை மக்கள் காத்திருக்க வேண்டும் என்பதே இப்போதைய நிலையாக உள்ளது.

Best Mobiles in India

English summary
When Will iPhone Models Get Airtel and Jio 5G Network Support In India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X