கடைசியாக அழுதது எப்போது?- கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உருக்கமான பதில்!
கூகுள் மற்றும் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள சுந்தர்பிச்சை, தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. இதன்காரணமாக இந்தியா அவருள் வேரூன்றி இருப்பதாகவும் தான் இப்போது இருக்கும் இடத்திற்கு பெரும்பங்கு இந்தியாவையே சேரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பிபிசி செய்திதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கோவிட்-19 தொற்று பரவலால் ஏற்பட்ட விளைவு, இணைய அச்சுறுத்தல் உட்பட பல கேள்விகளுக்கு அவர் தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதில் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

கடைசியாக அழுதது எப்போது
கடைசியாக அழுதது எப்போது என்ற செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த சுந்தர்பிச்சை., கோவிட் தொற்று இரண்டாம் அலையில் ஏப்ரல் முதல் மே மாத வரையிலான காலக்கட்டம் இந்தியாவின் கொடிய நிலையாக இருந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகினர், இணையத்தில் பகிரப்பட்ட கங்கை ஆற்றில் மிதந்த இறந்த உடல்களின் புகைப்படங்கள் ஆகியவை. இதன்காரணமாகவே இந்தியாவுக்கு கூடுதல் நிதியும் வழங்கப்பட்டது.

நான் என்றால் இந்தியாதான் அதில் பெரும் பங்கு
தான் ஒரு அமெரிக்க குடிமகன் என்றாலும் இந்தியா தனக்குள் வேரூன்றி இருப்பதாக ஒரு கேள்விக்கு பதிலளித்தார். மேலும், தமிழ்நாட்டில் பிறந்து சென்னையில் வளர்ந்த பிச்சையிடம் இந்தியா ஆழமாக வேரூன்றி இருப்பதாகவும், அவர் யார் என்பதில் பெரும் பங்கு இந்தியாவுக்கு உள்ளது என்றும் கூறினார். பல்வேறு தொழில்நுட்பங்கள் அவருக்குள் மாற்றத்தக்கத தாக்கத்தையும் ஏற்படுத்தியதாக கூறினார்.

இணைய சுதந்திரம் என்பது கட்டாயம்
இணைய சுதந்திரம் என்பது கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று. இருப்பினும் சில நாடுகளில் இதன் மீது தாக்குதல்களும் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் பேச்சுரிமை குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இணைய சுதந்திரம் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. கூகுள் நிறுவனம் ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டு சட்டப்படியே முறையாக செயல்படுகிறது என கூறினார்.

புரட்சிகரமான இரண்டு பிற முன்னேற்றங்கள்
மேலும் அடுத்த 25 ஆண்டுகிளில் நமது உலகில் புரட்சிகரமான இரண்டு பிற முன்னேற்றங்கள் நடக்கக்கூடும். அது குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆகும். நெருப்பு, மின்சாரம், இன்டெர்நெட் எப்படி இருக்கிறதோ அதைவிட ஆழமான தாக்கம் (மாற்றம்) ஏற்படுத்த இருக்கிறகு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.

புதிய தலைமுறைக்கான தொழில்நுட்பங்கள்
மேலும் தான் இளமையாக இருந்தபோது ஒவ்வொரு புதிய தொழில்நுட்பங்களும் கற்றுக் கொள்வதற்கும் வளரவும் புதிய வாய்ப்புகளை கொண்டு வந்தது. இருப்பினும் அது வேறுஇடங்களில் இருந்து நமக்கு வரும் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இன்று இந்தியாவில் உள்ளவர்கள் தொழில்நுட்ப வருகைக்கு காத்திருக்க வேண்டிய தேவையில்லை, காரணம் புதிய தலைமுறைக்கான தொழில்நுட்பங்கள் முதலில் இந்தியாவில் நடக்கின்றன.

தொழில்நுட்பம் மீதான ஆர்வமே காரணம்
அதேபோல் சுந்தர் பிச்சை 27 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பயணித்த போது சந்தித்த சவால்களையும் விவரித்தார். அதில் யு.எஸ் விமான டிக்கெட் வாங்குவதற்கு எனது தந்தையின் ஒரு வருட சம்பளம் தேவைப்பட்டது. இதுதான் விமானத்தின் என் முதல் பயணமாகும். மேலும் அமெரிக்காவில் தான் நினைத்தது போல் சூழ்நிலைகள் அமையவில்லை. காரணம் அமெரிக்கா விலை உயர்ந்தது வீட்டிற்கு தொலைபேசியில் பேச ஒரு நிமிடத்திற்கு 2 டாலருக்கு அதிகமாக செலவிட வேண்டியிருந்தது, தனக்கு இங்கும் அங்கும் கிடைத்த ஒரே விஷயம் அதிர்ஷ்டத்தை தாண்டி தொழில்நுட்பம் மீதான ஆர்வம், திறந்த மனது என சுந்தர் பிச்சை குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications