Just In
- 4 hrs ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 5 hrs ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 5 hrs ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 6 hrs ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
Don't Miss
- News
முதல்வர் ஸ்டாலின் மிக நாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.. அவரை பாராட்டுகிறேன்.. கே.எஸ்.அழகிரி பேட்டி!
- Sports
6 பந்தால் தோல்வியை தழுவிய இந்தியா.. தனி ஆளாக போராடிய வாசிங்டன் சுந்தர்.. காலை வாரிய டாப் ஆர்டர்
- Finance
கௌதம் அதானி தூக்கத்தைக் கெடுத்த Hindenburg.. இந்த நிறுவனம் யாருடையது தெரியுமா..?
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
நீங்களே இப்படி சொல்லிட்டா எப்படி வாத்தியாரே.! பணி நீக்கம் குறித்த கேள்விக்கு சுந்தர் பிச்சையின் பதில்?
உலகம் முழுவதும் பல முன்னணி டெக் நிறுவனங்கள் குறிப்பிட்ட ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகின்றன. அதாவது ட்விட்டர் நிறுவனம் தொடங்கி பேஸ்புக் வரை பல்வேறு நிறுவனங்கள் ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளன.

அதேபோல் ஏற்கனவே கூகுள் நிறுவனத்தில் உள்ள சில ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என தகவல் வெளிவந்தது. இந்நிலையில் பணி நீக்கம் குறித்த கேள்விக்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஒரு சூசகமான பதிலைத் தெரிவித்துள்ளார். இப்போது அது பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

மிகவும் கடினம்..
சமீபத்தில் பணி நீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய ஊழியருக்குச் சுந்தர் பிச்சை கூறியது என்னவென்றால், எதிர்காலத்தினை கணிப்பது மிகவும் கடினம் என்று தெரிவித்துள்ளார். அதாவது கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறியது வைத்துப் பார்க்கையில் விரைவில் சில ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்பதைக் குறிப்பதாகத் தெரிகிறது. எனவே தான் எதிர்காலத்தைக் கணிப்பது கடினம் என்று ஊழியர்களிடம் கூறினார்.

6 சதவீதம்..
மேலும் கடந்த மாதம் வெளியான அறிக்கையில், கூகுள் உயர் அதிகாரிகள் மத்தியில் 6 சதவீதம் அல்லது 10,000 ஊழியர்களை அடையாளம் காண கூறியதாகத் தகவல்கள் வெளியானது. அதாவது இந்த நடவடிக்கை மூலம் குறைந்த செயல்திறன் உள்ள ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில்...
எனவே இந்த மாதம் கடைசியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் சில கூகுள் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. மேலும் சுந்தர் பிச்சையின் இந்த தகவல் மூலம் கூகுள் ஊழியர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல் புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுப்பதையும் குறைத்துள்ளது கூகுள் நிறுவனம்.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் கடந்த ஆறு மாதங்களில் அமெரிக்காவில் பல டெக் நிறுவனங்கள் கணிசமான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. அதேபோல் தான் கூகுள் நிறுவனமும் தங்களது கணிசமான ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வதாகத் தெரிகிறது.

பத்ம பூஷண் விருது
அதேபோல் சமீபத்தில் இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்குப் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும்.

இந்தியத் தூதர்..
அதன்படி இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை மத்திய அரசு கடந்த ஜனவரி 25-ம் தேதி அறிவித்து இருந்தது. இதில் சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா உள்ளிட்ட 17 பேருக்குப் பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக விருது பட்டியலில் இருந்தவர்களுக்கு சமீபத்தில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால் சுந்தர் பிச்சைக்கு விருது வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவின் பத்ம பூஷண் விருதை சுந்தர் பிச்சை பெற்றுக் கொண்டார்.
இந்த விருதை இந்தியா சார்பில் சுந்தர் பிச்சைக்கு அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து வழங்கினார்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470