மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க உதவும் வீல்சேர்: சென்னை ஐஐடி-க்கு குவியும் பாராட்டுக்கள்!

|

இப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் தான் இருக்கிறது, அதன்படி மாற்றுத்திறனாளிகள் நின்று கொண்டே பயன்படுத்தம் வகையிலான சக்கர நாற்காலியை செனை ஐஐடி வடிவமைத்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க உதவும் வீல்சேர்: சென்னை ஐஐடி.!

குறிப்பாக நின்றவாறு பயணிக்க இது மிகவும் பயனுள்ளதாக அமைந்திருப்பதாக மாற்றுத்திறனாளிகள் கூறுகின்றனர். பெரும்பாலும நடக்க இயலாத மாற்றுதிறனாளிகள் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகின்றனர், இதனை அடிப்படையாக வைத்து சென்னை ஐஐடி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் எழுந்து நிற்கும் வகையிலான சக்கர நாற்காலியை வடிமைத்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க உதவும் வீல்சேர்: சென்னை ஐஐடி.!

மாணவர்கள் கண்டுபிடித்த இந்த சக்கர நாற்காலியை மத்திய அமைச்சர் தாவர்சந்த கெஹ்லோத் சென்னை தரமணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார். மாணவர்கள் வடிவமைத்த சக்கர நாற்காலியை பீனிக்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து பயனாளிகளுக்கு வழங்கியுள்ளது.

மாணவர்கள் உருவாக்கிய இந்த வீல் சேர் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்றும், எப்போதுமே அமர்ந்து கொண்டே இருக்கிறோம் என்ற எண்ணத்தில் இருந்து மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மாற்றுதினாளிகள் கூறுகின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க உதவும் வீல்சேர்: சென்னை ஐஐடி.!

குறிப்பாக வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை பிறக்கிறது என்றும், மிக மிக பயனுள்ளதாக வீல் சேர் வடிவமைக்க்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் பல கட்ட சோதனைகளுக்கு பிறகு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் பீனிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க உதவும் வீல்சேர்: சென்னை ஐஐடி.!

மாணவர்கள் உருவாக்கிய இந்த சக்கர நாற்காலியை மானிய விலையில் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் தாவர்சந்த கெஹ்லோத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

photo courtesy:ANI

Best Mobiles in India

English summary
Wheelchair to Help Disabled People Stand Up: Acclaim to IIT Chennai: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X