மொத்தமா மாறுது.. WhatsApp-ல் டைமிங் மெசேஜ்.. நைட் 12 மணியோ.. காலை 6 மணியோ.. இனி நோ ப்ராப்ளம்!
எவ்வளவு தான் பக்காவாக பிளான் பண்ணாலும், வாட்ஸ்அப் (WhatsApp) வழியாக "சரியான நேரத்திற்கு" ஒரு மெசேஜை அனுப்புவது என்பது பெரும்பாலும் சொதப்பலில் முடியும் காரியாமாகவே இருக்கும். குறிப்பாக சரியாக நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து மெசேஜ் அனுப்புவது, சரியாக காலை 9.30 மணிக்கு "ஏற்கனவே டைப் செய்து வைத்திருக்கும்" அலுவலகம் தொடர்பான மெசேஜை அனுப்புவது - பெரும்பாலும் சொதப்பி கொள்ளும்!
ஏனென்றால் இதுபோன்ற மெசேஜ்களை நீங்கள் "மேனுவல்" ஆக நினைவில் வைத்து கொள்ள வேண்டும் அல்லது பயங்கரமாக சொதப்பிவிட்டு அதன் தொடர்ந்து வரும் பின் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். விரைவில் இது மாறக்கூடும் என்பது போல் தெரிகிறது.

டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ (WABetaInfo) வழியாக கிடைத்துள்ள சமீபத்திய அறிக்கையின்படி, ஷெட்யூல்டு மெசேஜஸ் (Scheduled messages) என்கிற புதிய அம்சத்திற்கான குறிப்புகள் ஐஓஎஸ்-க்கான லேட்டஸ்ட் வாட்ஸ்அப் பீட்டாவில் (வெர்ஷன் 26.7.10.72) காணப்பட்டுள்ளன. இது ஆப்பிளின் (Apple) டெஸ்ட்பிளைட் (TestFlight) நிப்ரோகிராம் மூலம் விநியோகிக்கப்படுகிறது.
இந்த அம்சம் இன்னும் நேரலையில் இல்லை, பீட்டா பயனர்களுக்கு கூட அணுக கிடைக்கவில்லை. ஆனால் கோட்டிங்கில் உள்ள ஸ்ட்ரிங்ஸ் மற்றும் இன்டர்னல் ரெப்ரென்ஸஸ் ஆனது வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு மெசேஜை உருவாக்குவதற்கும், ஒரு குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுப்பதற்கும், அதை தானாக அனுப்புவதற்குமான வழியில் செயல்படுவதை குறிக்கிறது.
டபுள்யூஏபீட்டாஇன்ஃபோவால் பகிரப்பட்ட லீக்டு ஸ்கிரீன்ஷாட் ஆனது, ஷெட்யூல்டு மெசேஜஸ் அம்சம் பட்டியலிடப்படும் சாட்டில் ஒரு பிரத்யேக பிரிவாக தோன்றுவதை காட்டுகிறது. நிலுவையில் உள்ள மெசேஜ்களை அனுப்புவதற்கு முன்பு பயனர்கள் அதை ரிவ்யூ செய்யவோ அல்லது மேனேஜ் செய்யவோ முடியும்.
லீக்கில் காட்டப்பட்டுள்ள உதாரணம் ஒரு க்ரூப் சாட்டில் இருந்து வந்ததாக தெரிகிறது, ஆனால் இந்த அம்சம் க்ரூப்களுக்கு மட்டுமே இருக்குமா என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. பெரும்பாலும் இது ஒன்-ஆன்-ஒன் சாட்களுக்கும் அணுக கிடைக்கலாம். இந்த அம்சம் - முழுமையாக செயல்படுத்தப்பட்டால், இது வாட்ஸ்அப்பை கூகுள் மெசேஜஸ் மற்றும் டெலிகிராம் போன்ற போட்டியாளர்களுடன் இன்னும் நெருக்கமாக கொண்டுவரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். குறிப்பிடத்தக்க வண்ணம் - இவ்விரு சேவைகளும் சிறிது மெசேஜ் ஷெட்யூலிங்கை வழங்குகின்றன.
இப்போதைக்கு ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த அம்சத்தை "நகலெடுக்க" பெரும்பாலும் மூன்றாம் தரப்பு ஆட்டோமேஷன் ஆப்களையே நாடுகிறார்கள். இதற்கு பரந்த அளவிலான பெர்மிஷன்கள் தேவைப்படலாம் மற்றும் தனியுரிமை கண்ணோட்டத்தில் அந்த பெர்மிஷன்கள் எப்போதும் ஆபத்தானவைகள் தான்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஷெட்யூல்டு மெசேஜஸ் அம்சம் ஆனது இன்னும் வளர்ச்சியில் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த அம்சம் கோடிங்கில் மறைக்கப்பட்டுள்ளது மற்றும் இன்னும் அணுக முடியாதாக உள்ளது, அதாவது டைம்லைன்ஸ் மாறக்கூடும். சில நேரங்களில் இந்த கட்டத்தில் காணப்படும் அம்சங்கள், அறிமுகம் செய்யப்படுவதற்கு மாதங்கள் கூட ஆகலாம். பெரும்பாலும் இதுபோன்ற "பெரிய" அம்சங்கள் பல வகையான, தொடர்ச்சியான சோதனைகளை கடக்க வேண்டி இருக்கும் .
இருப்பினும், ஷெட்யூல்டு மெசேஜஸ் அம்சத்தின் சோதனை ஆனது வாட்ஸ்அப் தளத்தில் - மெசேஜிங் எக்ஸ்பீரியன்ஸில் ஒரு தர்க்கரீதியான கூடுதலாக இருக்கும். இது பேப்பரில் ஒரு சிறிய அம்சமாகவே தெரியும். ஆனால் உண்மையில் இது பல பயனர்கள் பல ஆண்டுகளாக கேட்டுவரும் ஒரு அம்சம் ஆகும். நேர மண்டல வேறுபாடுகள், இரவு நேர வாழ்த்துக்கள் அல்லது வேலை தொடர்பான நினைவூட்டல்களை கையாளும் உலகளாவிய பயனர்களுக்கு, பில்ட்-இன் ஷெட்யூலிங் ஆனது நிச்சயமாக பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.


Click it and Unblock the Notifications