Home
News

புதிய வழி.. WhatsApp பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. இனி வாய்ஸ் மெசேஜ்களை ஹெட்செட் போட்டு கேட்க வேண்டாம்!

ஆண்ட்ராய்டு, ஐபோன், வெப் வெர்ஷன் என்று பாரபட்சம் பாராமல்.. வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் புதிய க்ரூப் கால் (Group Call) மற்றும் வீடியோ கால் (Video Call) அம்சங்களை அறிமுகம் செய்த வேகத்தில், தற்போது அதன் வாய்ஸ் மெசேஜ் அம்சத்தையும் மேம்படுத்தியுள்ளது. நம்பகமான சோர்ஸ்களில் ஒன்றான டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ வழியாக கிடைத்த சமீபத்திய தகவலின்படி வாட்ஸ்அப் நிறுவனம் வாய்ஸ் நோட்களை அப்படியே டெக்ஸ்ட் ஆக மாற்ற அனுமதிக்கும் (Transcribe Voice Notes To Text) புதிய அம்சத்தை சோதனை செய்து வருகிறது.

வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சமானது வாய்ஸ் மெசேஜ்களை கேட்பதை விட அதை டெக்ஸ்ட் ஆக படிக்க விரும்பும் பயனர்களுக்கானதாக இருக்கும். டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ (WABetaInfo) அறிக்கையின்படி, வாட்ஸ்அப்பின் இந்த வாய்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சமானது (Voice transcription feature) மொத்தம் 5 மொழிகளில் சோதனை செய்யப்படுகிறது: ஆங்கிலம், ரஷ்யன், ஸ்பானிஷ், போர்த்துகீசியம் (பிரேசில்) மற்றும் இந்தி.

இனி வாய்ஸ் மெசேஜ்களை ஹெட்செட் போட்டு கேட்க வேண்டாம்!

சோதனை கட்டத்தை தாண்டிய பின்னர் இந்த அம்சத்தின் கீழ் மேலும் பல மொழிகள் சேர்க்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்த புதிய அம்சம் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) வழியாக அணுக கிடைக்கும் ஆண்ட்ராய்டு 2.24.13.8 வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் (Android Beta Version) காணப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த அம்சம் இன்னமும் டெவெலப்மென்ட் கட்டத்தில் இருப்பதால் பீட்டா டெஸ்டர்களுக்கு (Beta Testers) இது கிடைக்கவில்லை. கூடிய விரைவில் இது பீட்டா டெஸ்டர்களுக்கும், அதன் பின்னர் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு, அதனை தொடர்ந்து ஐஓஎஸ் பயனர்களுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப்பில் புதிதாக அறிமுகமான க்ரூப் கால் மற்றும் வீடியோ கால் அம்சங்களை பொறுத்தவரை, முதலாவதாக ஆடியோவுடன் ஸ்கிரீன் ஷேரிங் (Video Sharing With Audio) அம்சம். இது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வீடியோக்களை பார்ப்பதற்கு உதவும் ஒரு அம்சமாகும். மேலும் தற்போது இது பயனர்கள் தங்கள் ஸ்க்ரீனை ஷேர் செய்யும் போது ஆடியோவையும் சேர்த்தே ஷேர் செய்யலாம்.

இனி வாய்ஸ் மெசேஜ்களை ஹெட்செட் போட்டு கேட்க வேண்டாம்!

இரண்டாவதாக வீடியோ காலில் அதிக பங்கேற்பாளர்களை (More Participants in a Video Call) சேர்க்கும் ஆதரவு. இப்போது 32 பேர் வரை ஒரு வீடியோ காலில் கலந்துகொள்ளலாம் என்று வாட்ஸ்அப் கூறியுள்ளது. இந்த ஆதரவு ஐபோன்கள், ஆண்ட்ராய்டு, வெப் வெர்ஷன் மற்றும் பிசிக்கள் என எந்த டிவைஸ்களையும் பொருட்படுத்தாமல் அணுக கிடைக்கும்.

கடைசியாக ஸ்பீக்கர் ஸ்பாட்லைட் (Speaker Spotlight) அம்சம். இது யார் பேசுகிறார்கள் என்பதை எளிதாக கண்டுபிடிக்கும் ஒரு அம்சமாகும். ஒரு வீடியோ காலில் அதிக எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்கள் இருக்கும்போது, ​​ஒரு குறிப்பிட்ட நேரத்தில் யார் பேசுகிறார்கள் என்பதை கண்டறிவது சில நேரங்களில் சிக்கலாக இருக்கும். இந்த அப்டேட் அந்த சிக்கலை காணாமல் அடிக்கும்; யார் பேசுகிறார்கள் என்பதை கண்டறிய தாங்கவே ஸ்பீக்கரை ஹைலைட் செய்து அதை ஸ்க்ரீனிலும் காட்சிப்படுத்தும்.

இனி வாய்ஸ் மெசேஜ்களை ஹெட்செட் போட்டு கேட்க வேண்டாம்!

வாட்ஸ்அப் கொண்டுவரும் இந்த 3 முக்கிய அப்டேட்களுமே ஐபோன்கள், ஆண்ட்ராய்டு, வெப் மற்றும் பிசிக்கள் என வாட்ஸ்அப் ஆதரவை கொண்ட அனைத்து டிவைஸ்களுக்கும் அணுக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசுகையில் "வாட்ஸ்அப்பில் அழைப்பதை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துவோம், எனவே நீங்கள் உலகில் எங்கிருந்தாலும் சிறந்த தரமான, தனிப்பட்ட அழைப்புகளைச் செய்யலாம்" என்றும் வாட்ஸ்அப் உறுதி அளித்துள்ளது.

மேலும் "2015 ஆம் ஆண்டு வாட்ஸ்அப்பில் காலிங் வசதியை கொண்டு வந்ததில் இருந்து, க்ரூப் கால்கள் (Group Calls), வீடியோ கால்கள் (Video Calls) மற்றும் மல்டி-பிளாட்ஃபார்ம் ஆதரவின் (Multi-Platform Support) அறிமுகத்துடன், வாட்ஸ்அப் கால் வசதியை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். அந்த வரிசையில் மேலும் 3 அப்டேட்களை சேர்க்கிறோம்" என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
WhatsApp working on new feature will Allow Transcribe voice notes to text with 5 Language Options
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X