WhatsApp கால்ஸ் பயனர்களே வருகிறது புதிய வாய்ஸ் கால் இடைமுகம்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?
உலகின் மிகவும் பிரபலமான ஆன்லைன் குறுஞ்செய்தி பயன்பாடுகளில் ஒன்றான WhatsApp, இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தனது பீட்டா ஆண்ட்ராய்டு பயனர்களுக்குக் குரல் அழைப்புக்கான புதிய இடைமுகத்தை உருவாக்கி வருகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த புதிய இடைமுகம், நிச்சயமாக, ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்காக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது இது பீட்டா அம்சமாக ஆண்ட்ராய்டு பயனர்களுடன் இப்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது.

புதிய வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் என்ன உள்ளது?
சமீபத்தில் வெளியான தகவலின் படி, வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.22.5.4 என்ற வாட்ஸ்அப் அப்டேட்டில் இந்த சோதனை அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளதாக WABetaInfo அறிக்கை தெரிவிக்கிறது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த புதிய குரல் அழைப்பு இடைமுகத்தைக் வழங்குகிறது என்று WABetaInfo அறிக்கை தெரிவிக்கிறது. புதிய இடைமுகம் பயன்பாட்டை மிகவும் அழகியல் மற்றும் செயல்பாட்டில் எளிதாக்குவதற்கு உதவுகிறது என்று WABetaInfo கூறியுள்ளது.

புதிய வாட்ஸ்அப் அழைப்பு இடைமுகம் சோதனையா?
ஒட்டுமொத்தமாக, WABetaInfo பகிர்ந்த படத்திலிருந்து, இடைமுகம் நவீனமாகவும் நேர்த்தியாகவும் மாற்றப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. இந்த புதிய அம்சத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்கள் மேற்கொள்ளும் குரல் அழைப்புகளுக்கான அலைவடிவங்களை அறிமுகம் செய்துள்ளது என்று கூறப்படுகிறது. குழு குரல் அழைப்பில் யார் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்காக, வாட்ஸ்அப் அலைவடிவங்களை இப்போது கொண்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.

குழு அரட்டைகளில் யார் பேசுகிறார்கள்?
இதன் மூலம், இனி வாட்ஸ்அப் பயனர்கள் குழு அரட்டைகளில் யார் பேசுகிறார்கள் என்பதை ஸ்பீக்கர் அடையாளம் மூலம் காண முடியும். தற்போது, அழைப்பின் போது எந்தப் பயனர் பேசுகிறார் என்பதை அடையாளம் காண வழி எதுவும் இல்லை என்பதனால் வாட்ஸ்அப் நிறுவனம் இந்த அம்சத்தை உருவாக்கி சோதனை செய்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இடைமுகம் மூலம், பயனர்கள் இனி அந்த சிக்கலைச் சந்திக்கவேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி யார் பேசுகிறார் என்பதை உங்களால் எளிதில் அடையாளம் காண முடியும்.

எப்படி வாட்ஸ்அப் இன் புதிய பீட்டா வெர்ஷனை பதிவிறக்கம் செய்வது?
அதே நேரத்தில், பயனர்கள் தங்கள் கணக்குத் தடை கோரிக்கைகளை மதிப்பாய்வு செய்ய வரும்போது அவர்களுக்குப் பதிலளிக்கும் திரையில் கூட WhatsApp இப்போது செயல்பட்டு வருகிறது. பீட்டா பதிப்பில் இந்த அம்சங்கள் அனைத்தையும் அனுபவிக்க, ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் பிளே சென்று, வாட்ஸ்அப் பீட்டா திட்டத்திற்குச் சென்று, வாட்ஸ்அப்பின் சமீபத்திய பீட்டா பதிப்பை தங்கள் சாதனத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். மாற்றாக, பயனர்கள் APKMirror இலிருந்து APK இல் பீட்டா பயன்பாட்டைப் பதிவிறக்கலாம்.

வாட்ஸ்அப் கால்ஸ் சேவையை அதிகம்
அதிகமான மக்கள் தங்கள் வீடுகளுக்குள் தெளிவான குரல் அழைப்பு அனுபவத்திற்காக வாட்ஸ்அப் அழைப்பைப் பயன்படுத்துவதால், புதிய இடைமுகம் அதன் சேவையை மேம்படுத்தி பயனரின் தேவையைப் பூர்த்தி செய்ய முயல்வது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. நல்ல வைஃபை இணைப்புடன், பயனர்கள் வாட்ஸ்அப் குழுக்களையும் தனிப்பட்ட அழைப்புகளையும் எளிதாகச் செய்யலாம். இது பலருக்குச் சிறந்த வசதியாக உள்ளது. பெரும்பாலானோர் இன்றைய சூழ்நிலையில் வாட்ஸ்அப் கால்ஸ் சேவையையே அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

எப்போது இந்த அம்சம் வெளியாகும்?
குறிப்பாக வீடியோ அழைப்புகள் அதிகமாக வாட்ஸ்அப் இல் இருந்து மேற்கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் புதிய இடைமுகத்தை சோதித்து வரும் நிலையில், iOS பயனர்கள் கவலைப்படத் தேவையில்லை; ஏனெனில், எப்படியும் நிறுவனம் ஆப்பிள் பயனர்களுக்கான அப்டேட்டை விரைவில் அவர்களுக்கு வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. வாட்ஸ்அப் பயன்பாட்டின் இந்த நிலையான பதிப்பைக் கொண்ட புதிய இடைமுகத்தின் வெளியீடு எதிர்காலத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்கான சரியான காலக்கெடு நமக்குத் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications