Home
News

மே.5 குறிச்சாச்சு.. இனிமே WhatsApp வேலை செய்யாது.. பழைய iPhone மாடல்களுக்கு மட்டும்தான்.. எந்தெந்த மாடல்கள்?

பழைய ஆண்ட்ராய்டு வெர்ஷன் (Android Version) கொண்ட மொபைல்களை வைத்திருந்த யூசர்களுக்கு நடந்ததை போலவே இப்போது ஐபோன்களை (iPhones) வைத்திருக்கும் யூசர்களுக்கும் நடக்க இருக்கிறது. மே 5ஆம் தேதி முதல் சில பழைய ஐபோன்களில் வாட்ஸ்அப் (WhatsApp) சேவை நிறுத்தப்பட இருக்கிறது. ஆகவே, அதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு வேறு மாடல்களுக்கு மாறுவது நல்லது. எந்தெந்த மாடல்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது? எந்த ஐஓஎஸ் வெர்ஷன் (iOS Version) நிறுத்தப்படுகிறது உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு யூசர்களும் சரி, ஐஓஎஸ் யூசர்களும் சரி, வாட்ஸ்அப் ஆப்-ஐ பயன்படுத்தி வருகின்றனர். இதில் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் முக்கிய விவரங்கள் அதிகம் பகிரப்படுகின்றன. இதனால், போதுமான பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் ஆண்ட்ராய்டு வெர்ஷன் மற்றும் ஐஓஎஸ் வெர்ஷனில் வாட்ஸ்அப் சேவை (WhatsApp Services) நிறுத்தப்பட்டு வருகிறது.

மே.5 குறிச்சாச்சு.. இனிமே WhatsApp வேலை செய்யாது.. பழைய iPhone மாடல்!

ஆனால், இது மிகவும் பழைய வெர்ஷன்களில் மட்டுமே இப்படி செய்யப்படுகிறது. ஆகவே, ஒட்டுமொத்த கஸ்டமர்களும் கவலைப்பட வேண்டியது இல்லை. ஐஓஎஸ் 12 (iOS 12) அல்லது அதற்கு மேலான வெர்ஷன்களில் இப்போது வாட்ஸ்அப் சேவை தடையில்லாமல் கிடைக்கிறது. இருப்பினும், ஐஓஎஸ் 15.1 (iOS 15.1) வெர்ஷனிலும் மினிமம் பீச்சர்களுடன் வாட்ஸ்அப் கிடைக்கிறது.

ஆகவே, இதற்கு முன்னதாக வெளியான ஐஓஎஸ் வெர்ஷன்களை கொண்ட ஐபோன்களில் மே 5ஆம் தேதியில் இருந்து வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று மெட்டா நிறுவனம் அறிவித்தது. இந்த அறிவிப்பு கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியானது. ஆகவே, 5 மாதங்களுக்கு காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களுக்குள் ஐஓஎஸ் 15.1 அல்லது அதற்கு மேலான வெர்ஷன்களுக்கு மாற வேண்டும்.

இல்லையென்றால், அதற்கு முன்னதாக இருக்கும் வெர்ஷன்களில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது. இதற்கு முன்னதாக எந்த வெர்ஷன் இருக்கிறது என்று பார்த்தால், ஐஓஎஸ் 12.5.7 (iOS 12.5.7) இருக்கிறது. இந்த வெர்ஷனில் ஐபோன் 5எஸ் (iPhone 5s), ஐபோன் 16 (iPhone 6) மற்றும் ஐபோன் 6 பிளஸ் (iPhone 6 Plus) மாடல்களில் வருகின்றன. ஆகவே, இதில் வாட்ஸ்அப் வேலை செய்யாது.

மே 5ஆம் தேதி வரையில் காலஅவகாம் இருக்கிறது. இதற்குள் ஐஓஎஸ் 15.1 அதற்கு மேலான வெர்ஷன்களுக்கு அப்டேட் செய்துகொள்வது நல்லது. அந்த மாடல்களுக்கு ஐஓஎஸ் 15.1 வெர்ஷன் அப்டேட்டில் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆகவே, ஐபோனில் செட்டிங்ஸ் சென்று ஜெனரல் டேப்-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள். பிறகு சாப்ட்வேர் அப்டேட் தோன்றும்.

அதில் அப்டேட் இருந்தால் செய்து முடியுங்கள். இல்லையென்றால், இனிமேல் அவற்றில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது. ஏற்கனவே, ஜனவரி 1ஆம் தேதி முதல் பல்வேறு ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட்டது. அதில், சாம்சங் கேலக்ஸி எஸ்3, சாம்சங் கேலக்ஸி நோட் 2, சாம்சங் கேலக்ஸி ஏஸ் 3 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்4 மினி ஆகிய போன்களும் அடங்கும்.

அதேபோல மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் ஜெனரேஷன் மடலான மோட்டோ ஜி, மோட்டோரோலோ ரேசர் எச்டி, மோட்டோ ஈ 2014 மாடல்களிலும் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட்டது. மேலும், சோனி எக்ஸ்பிரீயா இசட், சோனி எக்ஸ்பிரீயா எஸ்பி, சோனி எக்ஸ்பிரீயா டி மற்றும் சோனி எக்ஸ்பிரீயா வி மாடல்களிலும் நிறுத்தப்பட்டது. இப்படி பல்வேறு மாடல்கள் பட்டியலில் இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp will stop working on these iPhones from May 2025 check outdated iOS version
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X