இனி "இந்த" போன்களில் WhatsApp எடுக்காது.! தொடர்ந்து வாட்ஸ்அப் யூஸ் பண்ண என்ன செய்யணும்?

|

நீங்கள் பழைய iPhone மாடலை பயன்படுத்துகிறீர்களா? அல்லது உங்கள் ஃஐபோனின் iOS வெர்ஷன் பழைய பதிப்பில் இயங்குகிறதா? அல்லது உங்கள் ஆண்ட்ராய்டு போன் பழைய OS இல் இயங்கும் மாடலாக இருக்கிறதா?

அப்படியானால், இந்த பதிவை நீங்கள் முழுமையாக படிக்க வேண்டும். இந்த விஷயங்களில் ஏதேனும் ஒரு விஷயமாவது உங்களுடன் ஒத்துப் போகிறது என்றால் உஷார் மக்களே. தீபாவளி முதல் உங்கள் வாட்ஸ்அப் (WhatsApp) சேவை முற்றிலுமாக துண்டிக்கப்படும்.!

தீபாவளி முதல்

தீபாவளி முதல் "இந்த" போன்களில் WhatsApp செயல்படாதா?

ஆம், சரியாகத் தான் படித்தீர்கள், தீபாவளி முதல் சில குறிப்பிட்ட ஐபோன் மாடல்கள் மற்றும் ஆண்ட்ராய்டு மாடல்களில் இனி வாட்ஸ்அப் செயல்படாது என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கான தீர்வாக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை படிப்படியாகத் தெளிவாகப் பார்க்கலாம்.

முதலில், உங்கள் மொபைலை நீங்கள் மேம்படுத்த வேண்டும் அல்லது iOS இன் சமீபத்திய வெர்ஷனிற்கு நீங்கள் உங்களை அப்டேட் செய்ய வேண்டும்.

யாருக்கெல்லாம் இனி வாட்ஸ்அப் சேவை கிடைக்காது?

யாருக்கெல்லாம் இனி வாட்ஸ்அப் சேவை கிடைக்காது?

இல்லையெனில், இந்த தீபாவளி முதல் காலாவதியான ஐபோன் மாடல்கள் என்று அறிவிக்கப்பட்ட சில குறிப்பிட்ட மாடல்களில் WhatsApp மெசேஜிங் ஆப்ஸ் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுடைய ஆப்பிள் ஐபோன் iOS 10 மற்றும் iOS 11 வெர்ஷனில் இயங்கும் சாதனம் என்றால், அக்டோபர் 24 ஆம் தேதி முதல் உங்களுக்கு WhatsApp ஆதரவு நிறுத்தப்படும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

உஷார் மக்களே.! இனி உங்க WhatsApp சாட் பாதுகாப்பானதல்ல.! உண்மைய உடைச்சுட்டாங்க.!உஷார் மக்களே.! இனி உங்க WhatsApp சாட் பாதுகாப்பானதல்ல.! உண்மைய உடைச்சுட்டாங்க.!

வாட்ஸ்அப் சேவையை தடை இல்லாமல் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்?

வாட்ஸ்அப் சேவையை தடை இல்லாமல் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்?

WhatsApp இனி iOS 10 அல்லது iOS 11 இல் இயங்காது என்பதை ஆப்பிள் நிறுவனம் iPhone பயனர்களுக்கு அறிவிக்கத் தொடங்கியுள்ளது.

வாட்ஸ்அப் இன்ஸ்டன்ட் மெசேஜ்ஜிங் ஆப்ஸை தொடர்ந்து பயன்படுத்த, பயனர்கள் தங்கள் iOS ஐ அப்டேட் செய்ய வேண்டும்.

WhatsApp இன் உதவி மையப் பக்கத்தின்படி, iPhone பயனர்கள் பயன்பாட்டைத் தொடர்ந்து பயன்படுத்த iOS 12 அல்லது அதற்குப் புதிய வெர்ஷனில் செயல்பட வேண்டும் என்பதைப் பரிந்துரைக்கிறது.

"இதை" செய்தால் மட்டுமே இனி ஐபோன் யூசர்ஸ் WhatsApp பயன்படுத்த முடியும்.!

குறிப்பிடத்தக்க வகையில், iOS 10 மற்றும் iOS 11 மென்பொருள் பதிப்புகளில் இயங்கும் ஐபோன்கள் அதிகம் இல்லை என்பதனால் இது பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும் கூட, இன்னும் சில பயனர்கள் இந்த வெர்ஷனில் இயங்குவதால், அவர்களுக்குச் சிரமம் ஏற்படக்கூடும்.

iPhone 5 அல்லது iPhone 5C ஐப் பயன்படுத்தும் iPhone பயனர்கள் iOS மற்றும் WhatsApp ஐப் புதுப்பித்த பிறகு WhatsApp ஐப் பயன்படுத்த முடியும்.

இவர்களுக்கு இனி இந்த ஜென்மத்தில் வாட்ஸ்அப் கிடைக்காது.!

இவர்களுக்கு இனி இந்த ஜென்மத்தில் வாட்ஸ்அப் கிடைக்காது.!

இருப்பினும், ஐபோன் 4 மற்றும் ஐபோன் 4S பயனர்களுக்கு புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஏனெனில் இவர்களுக்கு இனி எந்தவித அப்டேட்டும் கிடைக்காது.

இதனால், தீபாவளிக்கு பிறகு இவர்களால் WhatsApp பயன்படுத்த முடியாது.

ஐபோன் 5 மற்றும் அதற்கு மேல் இருக்கும் மாடல் ஐபோன்களில் உரிய அப்டேட்டிற்கு பிறகு வாட்ஸ்அப் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

BSNL 4G மற்றும் 5G அறிமுக தேதி உறுதியானது.! சூப்பர் பாஸ்ட் வேகத்திற்கு நீங்க ரெடியா.!BSNL 4G மற்றும் 5G அறிமுக தேதி உறுதியானது.! சூப்பர் பாஸ்ட் வேகத்திற்கு நீங்க ரெடியா.!

எந்த Android போன்களில் WhatsApp எடுக்காது? இனி கிடைக்காது?

எந்த Android போன்களில் WhatsApp எடுக்காது? இனி கிடைக்காது?

ஒருவேளை, நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர் என்றால், உங்கள் ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டன்ட் மெசேஜ்ஜிங் வாட்ஸ்அப் செயலியைத் தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால், உங்கள் ஆண்ட்ராய்டு டிவைஸ், ஆண்ட்ராய்டு 4.1 அல்லது அதற்குப் பிந்தைய வெர்ஷனில் இயங்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் ஆண்ட்ராய்டு என்ற வெர்ஷனில் இயங்குகிறது என்பதை அறிய Setting >> About Phone கிளிக் செய்யுங்கள்.

ஐபோன் இல் வாட்ஸ்அப்பை அப்டேட் உடன் இயக்குவது எப்படி?

ஐபோன் இல் வாட்ஸ்அப்பை அப்டேட் உடன் இயக்குவது எப்படி?

உங்கள் ஐபோன் தானாகப் புதுப்பிக்கப்படவில்லை என்றால், Settings >> General >> Software Update கிளிக் செய்து iOS இன் புதிய வெர்ஷனிற்கு உங்களை அப்டேட் செய்யலாம்.

நீங்கள் புதிய ஐபோன் வாங்கத் திட்டமிட்டிருந்தால், பண்டிகை கால சிறப்பு விற்பனைகள் இப்போது Amazon மற்றும் Flipkart போன்ற இ-காமர்ஸ் இணையதளங்களில் நடப்பதால் அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

குறிப்பாக, iPhone 12, iPhone 13 ஆகியவற்றின் மீது இப்போது சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
WhatsApp Will Stop Working On These iPhones and Android Models From Diwali Check The List Now

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X