Home
News

அக்டோபர் 24 முதல் இந்த ஆண்ட்ராய்டு, ஐபோனில் WhatsApp இயங்காது.. சைலெண்டாக ஆப்பு வைத்த வாட்ஸ்அப்..

ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐபோன் (iPhone) மொபைல் சாதனங்களை வைத்திருக்கும் பயனர்களின் கவனத்திற்கு, வரும் அக்டோபர் 24ம் தேதி முதல் சில குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் சாதனங்களில் இனி வாட்ஸ்அப் (WhatsApp) வேலை செய்து என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

பழைய போன்களுக்கான காலக்கெடு நிறைவடைந்தது.. உடனே அப்கிரேட் (upgrade) செய்யுங்கள் என்று வாட்ஸ்அப் இப்போது அதனுடைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட சில ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் மொபைல் போன்களில் (mobile phone) அடுத்த வாரம் முதல் வாட்ஸ்அப் செயல்படாது என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

அக்டோபர் 24 முதல் இந்த ஆண்ட்ராய்டு, ஐபோனில் WhatsApp இயங்காது..

இந்த போன்களில் அடுத்த வாரம் முதல் வாட்ஸ்அப் இயங்காதா?

அதவது, வரும் அக்டோபர் 24 ஆம் தேதி முதல், குறிப்பிட்ட பழைய ஆண்ட்ராய்டு வெர்ஷனில் இயங்கும் மற்றும் ஐஓஎஸ் (iOS) தளத்தில் இயங்கும் சாதனங்களில் வாட்ஸ்அப் முடக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எந்த வகை போன்களில் எல்லாம் இனி வாட்ஸ்அப் இயங்காது என்ற விபரத்தை நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ளது.

ஒருவேளை உங்களுடைய பழைய ஆண்ட்ராய்டு அல்லது ஐபோனில் வாட்ஸ்அப் இயங்குகிறது என்றால் உடனே அதன் வெர்ஷன் விபரத்தை சோதனை செய்யவும். கவனிக்காமல் விட்டுவிட்டால், உங்கள் வாட்ஸ்அப் கணக்கு டெலீட் செய்யப்படுவதோடு, சில பாதுகாப்பு சிக்கல்களையும் பயனர்கள் அனுபவிக்க நேரிடும் என்று வாட்ஸ்அப் எச்சரித்துள்ளது. சரி, எந்த போன்களில் எல்லாம் இனி வாட்ஸ்அப் இயங்கும் மற்றும் இயங்காது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

எந்த ஆண்ட்ராய்டு போன்களில் இனி வாட்ஸ்அப் செயல்படாது?

வாட்ஸ்அப் இப்போது (இன்று) வரை, ஆண்ட்ராய்டு 4.1 வெர்ஷன் (Android 4.1 version) மற்றும் அதற்கு பிந்தைய வெர்ஷன்களில் செயல்படுகிறது. அடுத்த வாரம் முதல் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 5.1 மற்றும் அதற்கு மேல் உள்ள ஸ்மார்ட்போன் மாடல்களில் மட்டுமே இயங்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. ஒருவேளை உங்களிடம் ஆண்ட்ராய்டு 5 வெர்ஷன் கீழ் இயங்கும் ஸ்மார்ட்போன் இருந்தால், உடனே அதை அப்கிரேட் செய்வது அவசியம்.

அக்டோபர் 24 முதல் இந்த ஆண்ட்ராய்டு, ஐபோனில் WhatsApp இயங்காது..

எந்த மாடல் ஐபோனில் இனி வாட்ஸ்அப் இயங்காது?

அதேபோல், ஐபோன் பயனர்களில் iOS 12 வெர்ஷன் கீழ் உள்ள இயங்குதளத்தில் இயங்கும் சாதனங்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது என்று நிறுவனம் அறிவித்துள்ளது. iOS 12 சாதனங்களில் வாட்ஸ்அப் செயல்படும். அதேபோல், KaiOS 2.5.0 மற்றும் அதற்கு மேல் உள்ள மாடல்கள், ஜியோபோன் 1 (JioPhone) மற்றும் ஜியோபோன் 2 (JioPhone) சாதனங்களில் வாட்ஸ்அப் இயங்கும்.

வாட்ஸ்அப் இப்படி பழைய மாடல் போன்களில் சேவையை முடக்க என்ன காரணம்?

மற்ற பழைய மாடல் இயங்குதளத்தில் இயங்கும் சாதனங்களில் இனி வாட்ஸ்அப் செயல்படாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் ஏன் இத்தகைய செயலை செய்கிறது? என்பதற்கான காரணத்தையும் அதன் பயனர்களுக்காக விளக்கியுள்ளது. வாட்ஸ்அப் இப்போது பல புதிய அம்சங்களுடன் தொடர்ந்து அப்டேட் (WhatsApp update) செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், பாதுகாப்பு அம்சங்களும் பல மடங்கு இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது ஆபத்தானது.. அதனால் தான் - வாட்ஸ்அப்

புதிய வாட்ஸ்அப் வெர்ஷனுடன் பழைய மாடல் மொபைல் சாதனங்களால் ஈடுகொடுக்க முடிவதில்லை. இதனால், பயனர்களுக்கு பாதுகாப்பு இல்லாத (WhatsApp safety) மற்றும் மெதுவான வாட்ஸ்அப் அனுபவம் கிடைக்கிறது. இது பயனர்களை கட்டாயம் கடுப்பேற்ற செய்யும். முக்கியமாக, வாட்ஸ்அப் பயனர்களின் பாதுகாப்பு பழைய மாடல் போன்களில் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுகிறது. இதனால் தான் வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களை வலுக்கட்டாயமாக அப்கிரேட் செய்ய முன்நகர்த்துவதாக கூறியுள்ளது.

தொடர்ந்து உங்கள் போனில் வாட்ஸ்அப்பை இயக்க என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்கு தடையில்லாத வாட்ஸ்அப் அனுபவம் வேண்டும் என்றால், கட்டாயம் உங்களின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் சாதனங்களின் இயங்குதளங்களை உடனே நீங்கள் அப்கிரேட் செய்தாக வேண்டும். இல்லையென்றால், வாட்ஸ்அப்பிற்கு பதிலாக மாற்று பயன்பாட்டை நீங்கள் உங்கள் பழைய போனில் பயன்படுத்த துவங்க வேண்டும் என்பதே இந்த சிகளுக்கான மாற்றுவழியாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp Will Stop Working On These Android and iOS Mobiles From October 24 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X