இனி இந்த iPhone மாடல்களில் WhatsApp இயங்காதா? எப்படி இதை சரி செய்வது?

|

இன்றைய காலகட்டத்தில், ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்களின் சாதனத்தில் 'WhatsApp' ஆப்ஸ் நிச்சயமாக இல்லாமல் இருக்காது. உண்மையைச் சொல்லப் போனால், ஸ்மார்ட்போன் வைத்துள்ள பெரும்பாலான பயனர்கள் அனைவரும் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இந்த அளவிற்கு இந்த மெசேஜ்ஜிங் ஆப்ஸை நாம் அதிகமாகப் பயன்படுத்துகிறோம். இப்படி மிக முக்கியமான ஆப்ஸ் இனி சில ஐபோன் (iPhone) மாடல்களில் செயல்படாது என்ற அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது.

இனி சில iPhone மாடல்களில் WhatsApp செயல்படாதா?

இனி சில iPhone மாடல்களில் WhatsApp செயல்படாதா?

ஆம், சரியாகத் தான் படித்தீர்கள், வரும் அக்டோபர் மாதம் முதல் சில iPhone மாடல்களில் WhatsApp செயல்படாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த ஐபோன் மாடல்களில் இனி அக்டோபர் முதல் வாட்ஸ்அப் செயல்படாது என்ற விபரங்களைப் பார்க்கலாம். உங்கள் ஐபோனில் வாட்ஸ்அப் தொடர்ந்து தடையின்றி செயல்பட நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

எந்தெந்த ஐபோன் மாடல்களில் வாட்ஸ்அப் இனி செயல்படாது?

எந்தெந்த ஐபோன் மாடல்களில் வாட்ஸ்அப் இனி செயல்படாது?

சில பழைய மாடல் ஐபோன்களில் தான் வரும் அக்டோபர் முதல் வாட்ஸ்அப் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. WABetaInfo வெளியிட்டுள்ள ஒரு தகவலின் படி, புதிய iOS அப்டேட் உடன் இணையாத பழைய ஐபோன் மாடல்களில் வாட்ஸ்அப் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி முதல் செயல்படாது என்று கூறியுள்ளது. குறிப்பாக iOS 10 மற்றும் iOS 11 இயங்குதளத்தில் இயங்கும் ஐபோன்களில் கட்டாயமாக வாட்ஸ்அப் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!

ஐபோன் பயனர்களுக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கை நோட்டிபிகேஷன் மெசேஜ் என்ன சொல்கிறது?

ஐபோன் பயனர்களுக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கை நோட்டிபிகேஷன் மெசேஜ் என்ன சொல்கிறது?

கூடுதலாக, இது தொடர்பான எச்சரிக்கை அறிவிப்புகளை நிறுவனம் இப்போது iOS 10 மற்றும் iOS 11 இயங்குதளத்தில் இயங்கும் ஐபோன் பயனர்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சில ஐபோன் பயனர்கள் இப்போதே, தங்கள் ஸ்மார்ட்போன்களில் இனி வாட்ஸ்அப்பை விரைவில் அணுக முடியாது என்று தெரிவிக்கும் நோட்டிபிகேஷன் மெசேஜ்களையும் ஏற்கனவே பெறத் துவங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிக்கலை சரி செய்ய ஐபோன் பயனர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்த சிக்கலை சரி செய்ய ஐபோன் பயனர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தச் சூழ்நிலையிலிருந்து வாடிக்கையாளர்கள் தப்பித்து, வாட்ஸ்அப் மெசேஜிங் ஆப்ஸை தொடர்ந்து பயன்படுத்த, iOS 10 மற்றும் iOS 11 பயனர்கள் அனைவரும் அவர்களின் ஐபோன் iOS பதிப்பை அப்டேட் செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். ஐபோன் பயனர்கள் iOS 12 அல்லது அதற்கு மேல் உள்ள iOS சேவையைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது, அவர்களுக்கு வாட்ஸ்அப் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புது iPhone 14 மாடல் விலை iPhone 13-ஐ விட குறைவாக இருக்குமா? என்னப்பா சொல்றீங்க உண்மையாவா?புது iPhone 14 மாடல் விலை iPhone 13-ஐ விட குறைவாக இருக்குமா? என்னப்பா சொல்றீங்க உண்மையாவா?

உங்கள் ஐபோனை புதிய வெர்ஷனிற்கு அப்டேட் செய்வது எப்படி?

உங்கள் ஐபோனை புதிய வெர்ஷனிற்கு அப்டேட் செய்வது எப்படி?

இன்னும் உங்கள் ஐபோனின் OS ஐ நீங்கள் அப்டேட் செய்யவில்லை என்றால் உடனே அதைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி அப்டேட் செய்யுங்கள். மிகச் சமீபத்திய iOS சாப்ட்வேர் அப்டேட்டை உங்கள் ஐபோன் ஏற்கனவே பெற்றிருக்கும் என்பதனால், அப்டேட் செய்வது மிகவும் சுலபமானது. iOS 10 மற்றும் iOS 11 ஆகியவை இப்போது காலாவதியான OS இயக்க முறைமைகள் என்பதனால் கட்டாயம் நீங்கள் உங்களுடைய பழைய ஐபோன்களை அப்டேட் செய்தாக வேண்டும்.

புது வெர்ஷனிற்கு அப்டேட் செய்ய இதை செய்யுங்கள்

புது வெர்ஷனிற்கு அப்டேட் செய்ய இதை செய்யுங்கள்

உங்கள் ஐபோன் இன்னும் அப்டேட் ஆகவில்லை என்றால் உடனே அப்டேட் செய்வது நல்லது. இல்லையென்றால் சில ஆப்ஸ்கள் இனி வேலை செய்யாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். சரி, உங்கள் ஐபோனை எப்படி அப்டேட் செய்வது என்று பார்க்கலாம். உங்கள் ஐபோனில் Settings > General சென்று select Software Upgrade என்பதைத் தேர்ந்தெடுத்து, சமீபத்திய iOS பதிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

Jio 5G Phone அறிமுகத்தை உறுதி செய்தது ரிலையன்ஸ்.! என்ன விலையில் எப்போது வாங்கலாம்?Jio 5G Phone அறிமுகத்தை உறுதி செய்தது ரிலையன்ஸ்.! என்ன விலையில் எப்போது வாங்கலாம்?

இப்படி செய்தால் வாட்ஸ்அப்பை தடையின்றி பயன்படுத்த முடியுமா?

இப்படி செய்தால் வாட்ஸ்அப்பை தடையின்றி பயன்படுத்த முடியுமா?

குறிப்பிடத்தக்க உண்மை என்னவென்றால், iOS 10 மற்றும் iOS 11 வெர்ஷன்கள் ஐபோன்களில் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை. இந்த மாற்றம் iPhone 5 மற்றும் iPhone 5c ஆகிய இரண்டு iPhone மாடல்களை மட்டுமே பாதிக்கும். சமீபத்திய சாப்ட்வேர் அப்டேட் உடன் ஐபோனில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துவதை நீங்கள் தொடர முடியும். அப்டேட் செய்யும் போது உங்கள் சாதனம் தடையில்லாத வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
WhatsApp Will Stop Working For iOS 10 and 11 iPhone Users From October 24 How To Solve This Issue

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X