குறிப்பிட்ட காண்டாக்டிற்கு மட்டும் இனி 'லாஸ்ட் சீன்' மறைக்கலாமா? புதிய WhatsApp அப்டேட் சூப்பர்ப்பா.!

|

வாட்ஸ்அப் பயன்பாட்டை உலகளவில் பல பில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அனைத்து பயனர்களுக்கு அதிகம் தேவைப்படும் அம்சமாக வாட்ஸ்அப் இன் லாஸ்ட் சீன் (Last Seen) அம்சம் செயல்படுகிறது. ஆனால், இந்த அம்சத்தை நாம் பயன்படுத்தும் போது நமது வாட்ஸ்அப் காண்டாக்ட்டில் உள்ள அனைத்து பயனர்களுக்குப் பெயரின் Last Seen மறைக்கப்படும். இதனால் பயனர்களுக்கு சில சிக்கல்கள் இருந்து வந்தது, அதை வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது.

வாட்ஸ்அப் இன் 'லாஸ்ட் சீன்' அம்சத்தில் சில புதிய மாற்றங்களா?

வாட்ஸ்அப் இன் 'லாஸ்ட் சீன்' அம்சத்தில் சில புதிய மாற்றங்களா?

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, வரவிருக்கும் அம்சம் வாட்ஸ்அப் நிபுணர் WABetaInfo வின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. WABetaInfo வின் புதிய அறிக்கையின்படி, வாட்ஸ்அப் நிறுவனம் அதன் லாஸ்ட் சீன் அம்சத்தில் சில புதிய மாற்றங்களை மேற்கொண்டு சோதனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, முன்னர் இருந்த லாஸ்ட் சீன் அம்சமானது பயனர்கள் தங்கள் "Last seen" அம்சத்தை ஆன் செய்ததும், அவர்களின் வாட்ஸ்அப் காண்டாக்ட்டில் உள்ள அனைத்து பயனர்களுக்கு அவர்களின் லாஸ்ட் சீன் மறைக்கப்படும்.

வாட்ஸ்அப் லாஸ்ட் சீன் என்றால் என்ன? இது எப்படி செயல்படுகிறது?

வாட்ஸ்அப் லாஸ்ட் சீன் என்றால் என்ன? இது எப்படி செயல்படுகிறது?

லாஸ்ட் சீன் என்பது பயனர்கள் கடைசியாக வாட்ஸ்அப் இல் ஆன்லைன் வந்து சென்ற நேரத்தைக் காட்டும் ஒரு அம்சமாகும். தெரியாதவர்களுக்கு லாஸ்ட் சீன் என்பது உங்களின் காண்டாக்ட் பயனர்களின் சாட் பாக்சில் உள்ள அவர்களின் ப்ரொபைல் புகைப்படத்திற்கு அருகில் உள்ள பெயருக்குக் கீழ் காட்டப்படும். இதில் காட்டப்படும் நேரம் தான் லாஸ்ட் சீன், இறுதியாக அந்த பயனர் ஆன்லைன் வந்து சென்ற நேரத்தைக் குறிக்கிறது. நீங்கள் எப்போது ஆன்லைன் வந்து சென்றீர்கள் என்பதை மற்றவர்களுக்குக் காட்ட விரும்பாத போது, நீங்கள் லாஸ்ட் சீன் விபரங்களை ஹைடு செய்துகொள்ளலாம்.

மொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்திய நாசாவின் செவ்வாய் கிரக புகைப்படம்.. இது என்ன தெரியுமா?மொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்திய நாசாவின் செவ்வாய் கிரக புகைப்படம்.. இது என்ன தெரியுமா?

குறிப்பிட்ட சில பயனர்களுடன் ஒட்டுமொத்த பயனர்களிடமிருந்து மறைக்கும் பழைய லாஸ்ட் சீன் சிக்கல்

குறிப்பிட்ட சில பயனர்களுடன் ஒட்டுமொத்த பயனர்களிடமிருந்து மறைக்கும் பழைய லாஸ்ட் சீன் சிக்கல்

இப்படி நீங்கள் உங்களின் லாஸ்ட் சீன் விபரங்களை மறைக்கும் போது, ஒட்டுமொத்தமாக உங்கள் வாட்ஸ்அப் காண்டாக்ட்டில் உள்ள அனைத்து பயனர்களுக்கு உங்களின் வாட்ஸ்அப் சீன் மறைக்கப்படும். இதனால், நீங்கள் மறைக்க விரும்பிய குறிப்பிட்ட சில பயனர்களுடன் ஒட்டுமொத்த பயனர்களிடமிருந்து லாஸ்ட் சீனை மறைக்கும் நிலை உருவாகிறது. சில நெருங்கிய நண்பர்கள் ஏன் லாஸ்ட் சீன் மறையாக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியையும் உங்களிடம் எழுப்புவார்கள். இந்த சிக்கல்களை எல்லாம் தவிர்க்கவே வாட்ஸ்அப் புதிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.

காண்டாக்ட்-டு-காண்டாக்ட் அடிப்படையில் இயங்கும் புதிய லாஸ்ட் சீன்

காண்டாக்ட்-டு-காண்டாக்ட் அடிப்படையில் இயங்கும் புதிய லாஸ்ட் சீன்

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, வாட்ஸ்அப் நிறுவனம் லாஸ்ட் சீன் அம்சத்தின் தெரிநிலையை காண்டாக்ட்-டு-காண்டாக்ட் அடிப்படையில் அதன் விசிபிலிட்டி முறையைச் சரிசெய்யும் விருப்பத்தை வாட்ஸ்அப் வழங்க முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான வாட்ஸ்அப் பயனர்களுக்குத் தெரியும், ஒரு தொடர்பின் "லாஸ்ட் சீன்" நிலை, அந்த நபர் கடைசியாக ஆன்லைன் திறந்ததும், செயலியில் செயலில் இருந்ததும் உங்களுக்குத் தெரிவிக்கும்.

சுந்தர் பிச்சை பகிர்ந்த ஒரு வீடியோ.! இணையதளத்தில் வைரல்.! இப்படி செய்யக் கூடாது மக்களே.!சுந்தர் பிச்சை பகிர்ந்த ஒரு வீடியோ.! இணையதளத்தில் வைரல்.! இப்படி செய்யக் கூடாது மக்களே.!

"லாஸ்ட் சீன்" விருப்பத்தில் உள்ள மூன்று விருப்பங்கள் என்ன-என்ன தெரியுமா?

தற்போது, ​​நீங்கள் கடைசியாக ஆன்லைனில் இருந்தபோது மற்ற தொடர்புகள் பார்க்க முடியாதபடி உங்கள் "லாஸ்ட் சீன்" நிலையை முடக்கலாம். ஆனால், அமைப்புகளின் விருப்பங்கள் "Everyone," "My Contacts" மற்றும் "Nobody" என வரையறுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட தொடர்புகளுக்கு இது விதிவிலக்கு. இருப்பினும், வாட்ஸ்அப்பின் பீட்டா பதிப்பில் WABetaInfo ஆல் கண்டுபிடிக்கப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் அது மாறத் தோன்றுகிறது.

My Contacts Except... என்ற புதிய அம்சம்

My Contacts Except... என்ற புதிய அம்சம்

தனியுரிமை அமைப்புகளில், மெசேஜ் தளம் "My Contacts Except..." என்ற விருப்பத்தைப் புதிதாகச் சேர்கிறது. இது குறிப்பிட்ட தொடர்புகளைத் தேர்வுசெய்ய உங்களை அனுமதிக்கும். இதனால், நீங்கள் கடைசியாக வாட்ஸ்அப் நெட்வொர்க்கில் செயலில் இருந்தபோது குறிப்பிட்ட காண்டாக்ட் பயனர்கள் மட்டும் உங்களின் லாஸ்ட் சீன் விபரங்களைப் பார்க்க முடியாமல் இனி நீங்கள் தடுக்கலாம். குறிப்பிட்ட தொடர்புகளுக்கு நீங்கள் கடைசியாகப் பார்த்த நிலையை முடக்கினால், நீங்கள் அவர்களின் லாஸ்ட் சீன் விபரங்களை பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பிக்கலாங்களா?- கூகுள் பே தொடங்கிய புதிய அம்சம்: இனி வட்டியோடு பணம் வாங்கலாம்!ஆரம்பிக்கலாங்களா?- கூகுள் பே தொடங்கிய புதிய அம்சம்: இனி வட்டியோடு பணம் வாங்கலாம்!

யாருக்கெல்லாம் இந்த அம்சம் முதலில் கிடைக்கும்?

யாருக்கெல்லாம் இந்த அம்சம் முதலில் கிடைக்கும்?

புதிய "My Contacts Except..." விருப்பம் ஒரு பயனரின் சுயவிவரப் படத்திற்கான தனியுரிமை அமைப்புகள் மற்றும் "About" தகவல்களிலும் தெளிவாகத் தெரிகிறது. இது பயன்பாட்டின் தனியுரிமை விருப்பங்களுக்கு ஒட்டுமொத்தமாக அதிக அளவு அமைப்புகளைக் கொண்டுவருவதற்கான வாட்ஸ்அப்பின் நோக்கத்தைக் குறிக்கிறது. வழக்கம் போல், இந்த புதிய விருப்பங்கள் எப்போது நேரலையாக்கப்படும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் இது முதலில் iOS இல் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், அதனைத் தொடர்ந்து அண்ட்ராய்டு பதிப்பில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
WhatsApp Will Soon Let You Hide Your Last Seen Status From Specific Contacts : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X